பிரதம மந்திரி சுரக்ஷா பீமா காப்பீடு திட்டம்:
- பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா விபத்து காப்பீடு திட்டத்தில் இதுவரையில் 48 கோடி பேர் பதிவு செய்துள்ளதாக மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.
- பிரதம மந்திரி சுரக்ஷா பீமா விபத்துக் காப்பீட்டுத் திட்டம் என்பது இந்திய அரசால் உறுதி அளிக்கப்படும் விபத்துக் காப்பீடு இந்தியா திட்டம் ஆகும்.
- இத்திட்டத்தின் குறிக்கோள் பொருளாதாரத் தேவைகளைக் குறைப்பதுடன், சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வுச் செலவுகளின் அடிப்படையில் நகர்ப்புற மற்றும் கிராமப்புற மக்களிடையே உள்ள பிளவைக் குறைப்பதாகும்.
- தனிப்பட்ட வங்கி அல்லது தபால் அலுவலகக் கணக்கு வைத்திருக்கும் 18 முதல் 70 வயதுக்குள்பட்டவர்கள் இந்த திட்டத்தின்கீழ் பதிவு செய்யலாம்.
- இந்த திட்டம், விபத்தில் பலியானவர்களுக்கோ காயமடைந்தவர்களுக்கோ காப்பீடு வழங்குகிறது.
- பி எம் எஸ் பி ஒய் திட்டம், ஆட்டோ டெபிட் வசதி மூலம் ஆண்டுதோறும் புதுப்பிக்கக்கூடிய 1 வருட விபத்துக் காப்பீட்டுத் திட்டமாகும்.
சாலை விபத்துகள் அதிகம் நிகழும் மாநிலங்கள்:
- சாலை விபத்துகளால் ஒவ்வொரு ஆண்டும் 1.78 லட்சம் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன, அவற்றுள் 60 சதவிகிதம் 18-34 இடையிலான வயதுக்குட்பட்டோர் என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
- சாலை விபத்துகள் அதிக எண்ணிக்கையில் நடைபெறும் மாநிலங்களின் பட்டியலில் முதல் 4 இடங்களில், உள்ள மாநிலங்கள் – உத்தரப் பிரதேசம், தமிழ்நாடு, மகாராஷ்டிரம், மத்தியப் பிரதேசம்.
- சாலை விபத்துகளால் உயிரிழப்புகள் அதிக எண்ணிக்கையில் நடைபெறும் மாநகரங்களின் பட்டியலில் முதல் 3 இடங்களில், உள்ள இடங்கள் – புதுதில்லி, பெங்களூரு, ஜெய்ப்பூர்.
பிரதம மந்திரி தெரு வியாபாரிகளின் ஆத்மா நிர்பர் நிதி:
- PM SVANidhi என்பது பிரதம மந்திரி தெரு வியாபாரிகளின் ஆத்மா நிர்பர் நிதியைக் குறிக்கிறது.
- இது ஜூன் 2020 – இல் தொடங்கப்பட்ட மத்தியத் துறை திட்டமாகும்.
- கோவிட்-19 தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட தெரு வியாபாரிகளுக்கு மைக்ரோ-கிரெடிட் வசதிகளை வழங்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
- நாடு தழுவிய பூட்டுதலுக்குப் பிந்தைய (தொற்றுநோய் காரணமாக) அவர்களின் வாழ்வாதார நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவதற்கு உதவக்கூடிய மலிவு விலையிலான செயல்பாட்டு மூலதனக் கடன்களுக்கான அணுகலை விற்பனையாளர்களுக்கு வழங்குதல்.
- ரொக்கத் திரும்பப் பெறுதல், அடுத்தடுத்த கோரிக்கைகளின் மீது அதிகக் கடன்கள் போன்ற விதிகள் மூலம் கடன்களை முறையாகத் திருப்பிச் செலுத்துவதை ஊக்குவிக்கிறது.
டிசம்பர்: 15 சர்வதேச தேயிலை தினம்
- ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 15 அன்று, தேயிலை உற்பத்தி செய்யும் நாடுகள் சர்வதேச தேயிலை தினத்தை கொண்டாடுகின்றன.
- உலகில் தேயிலை உற்பத்தி செய்யும் முதல் 10 நாடுகள் சீனா, இந்தியா, கென்யா, இலங்கை, துருக்கி, இந்தோனேஷியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுடன், உலகப் பொருளாதாரம் மற்றும் வர்த்தகத்தை தேயிலை கணிசமாக ஆதரிக்கிறது.
- உலகிலேயே அதிக அளவில் தேயிலை உற்பத்தி செய்யும் நாடு சீனா.
- அசாம் இந்தியாவில் அதிக அளவில் தேயிலை உற்பத்தி செய்யும் மாநிலம் ஆகும்.
- தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விளைகிறது.
- தமிழ்நாடு தேயிலை தோட்ட கழகம் 1968 – ஆம் ஆண்டு இலங்கையில் இருந்து திரும்பிய மலை வாழ் மக்களின் மறுவாழ்வுகாக தொடங்கப்பட்டது.
தகவல் துளிகள்:
- கரீபியன் கடல்பகுதியிலுள்ள தீவு நாடான ஜமைக்காவிற்கு இந்தியா சார்பில் சுமார் 60 டன் அளவிலான மருத்துவ மற்றும் பேரிடர் கால நிவாரண பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
- ஜமைக்கா நாட்டு பிரதமர் ஆண்டிரியூ ஹோல்னஸ்.
- இலங்கை அதிபா் அநுர குமார திசாநாயக 3 நாள் பயணமாக இந்தியா வருகிறார்.
- ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
- ‘ஒரே நாடு ஒரே தோ்தல் திட்டம்’குறித்து ஆய்வு செய்வதற்காக முன்னாள் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் தலைமையில் உயா்நிலை குழு அமைக்கப்பட்டது.
- 2034 – ஆம் ஆண்டுதான் இந்தியா முழுவதும் ஒரே ஆண்டில் மக்களவைக்கும் அனைத்தும் மாநில மற்றும் யூனியன் பிரதேச சட்டப் பேரவைகளுக்கும் தேர்தல் நடத்தப்பட வாய்ப்புள்ளது.
- ஜார்ஜியாவின் புதிய அதிபராக முன்னாள் கால்பந்து வீரா் மைக்கேல் கவெலஷ்விலி தோ்ந்தெடுக்கப்பட்டார்.