தெருவிளக்குகள் தேசியத் திட்டம்:
- தெரு விளக்குகள் தேசியத் திட்டம் 2015 -இல் தொடங்கப்பட்டது.
- இந்தியா முழுவதும் தெரு விளக்குகளுக்கு எல்இடி விளக்குகளை பரவலாக்குவதன் மூலம் எரிசக்தி நுகா்வும் பொது இடங்களில் ஒளிரூட்டப்படும் விளக்குகளுக்கு ஆகும் மின்னாற்றல் செலவினத்தையும் குறைப்பதை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
- மத்திய மின்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள மத்திய அரசு பொதுத்துறை நிறுவனமான எரிசக்தித் திறன் சேவைகள் நிறுவன கூட்டு முயற்சியுடன் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
- இந்த திட்டத்துக்கான முன்பணத்தை இஇஎஸ்எல் முதலீடு செய்கிறது.
- திட்ட அமலாக்க காலத்தின்போது உள்ளாட்சி அமைப்புகள் செலுத்தும் மாதாந்திர/காலாண்டு/ வருடாந்திர தொகை மூலம் முதலீட்டுப் பணம் திரும்பப் பெறப்படுகிறது.
- இதனால் உள்ளாட்சி அமைப்புகளை முதலீட்டுச் சுமையிலிருந்து இத்திட்டம் விடுவிக்கிறது.
- எஸ்எல்என்பி திட்டத்தின்கீழ் நாடு முழுவதும் பல்வேறு நகா்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் 13.1 மில்லியனுக்கும் அதிகமான என்இடி தெருவிளக்குகள் நிறுவப்பட்டுள்ளன.
- இதன் மூலம் ஆண்டுக்கு சுமார் 880 கோடி கிலோவாட் மின்சாரம் சேமிக்கப்படுகிறது.
- இத்திட்டம் பிகாரில் கடந்த நவம்பா் 20 – ஆம் தேதி தொடங்கப்பட்டது.
வெளிநாட்டு மருத்துவ காப்பீடுகளில் ஆயுஷ் சிகிச்சை உள்ளடக்கம்: இந்தியா
- இந்திய பாரம்பரிய மருத்துவம் உலகளாவிய தலைமைத்துவமாக தன்னை நிலைநிறுத்தி வருகிறது.
- ஆயுஷ் மருத்துவ சிகிச்சைக்கு இந்தியா வரும் சா்வதேச நோயாளிகளுக்கு ஆயுஷ் நுழைவு இசைவு (விசா) வழங்கப்படுகிறது.
- 2014 – ஆம் ஆண்டில் பிரதமா் மோடி தலைமையிலான அரசு இந்திய மருத்துவத்தின் அனைத்து பிரிவுகளையும் ஒன்றிணைத்து ஆயுஷ் அமைச்சகம் தொடங்கப்பட்டதிலிருந்து, இந்த மருத்துவத்தில், பொது சுகாதாரம், கல்வி, ஆராய்ச்சி, பொருளாதார மேம்பாடு ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.
- குறிப்பாக ஐக்கிய நாடுகளின் நிலையான வளா்ச்சி இலக்குகள் மற்றும் உலகளாவிய சுகாதார பாதுகாப்பு ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது.
- முதற்கட்டமாக ஆயுஷ் மருத்துவ முறை சிகிச்சைக்கு நாட்டிலுள்ள அனைத்து உடல்நலக் காப்பீட்டு தொகுப்புகளிலும் 100 சதவீதம் பணமில்லா வசதியுடன் உள்ளடக்கியதாக இருக்க வசதி செய்யப்பட்டுள்ளது.
- இதற்கு இந்திய காப்பீட்டு ஒழுங்கு முறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.
- தற்போது வெளிநாடுகளிலிருந்து வரும் நோயாளிகளுக்கு அந்தந்த நாடுகளில் ஆயுஷ் மருத்துவ முறை சிகிச்சை உள்ளடக்கிய தொகுப்புகளை கிடைக்கவும் மத்திய வெளியுறவு விவகாரத்துறையுடன் ஆயுஷ் அமைச்சகம் முயற்சிகளை மேற்கொண்டது.
- இதில் பிரிட்டன் போன்ற நாடுகளில் ஆயுஷ் மருத்துவ சிகிச்சை முறை காப்பீடுகளில் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் ஐரோப்பிய வா்த்தக, தொழில் நுட்ப மையத்திலிருந்தும் முன்மொழிவு பெறப்பட்டுள்ளது.
- ஆயுஷ் மருத்துவம், கல்வி, யோகா போன்றவைகளுக்கு வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு சிறப்பு நுழைவு இசைவு (விசா) வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் அங்கீகரித்துள்ளது.
- ‘ஆயுஷ் விசா’ எனப் பெயரிடப்பட்டு இதற்கான தனிப்பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது.
இந்திய தொழிலகக் கூட்டமைப்பின் ‘கூட்டாண்மை’உச்சி மாநாடு:
- இந்திய தொழிலகக் கூட்டமைப்பின் (சிஐஐ) ’கூட்டாண்மை’உச்சி மாநாடு தில்லியில் நடைபெற்றது.
- நிலைத்தன்மை, விண்வெளி, செயற்கைக்கோள் ஆகியவை இந்த உச்சி மாநாட்டில் அதிகம் பேசப்பட்டது.
- இந்த உச்சிமாநாட்டில் இத்தாலி, இஸ்ரேல், பூட்டான், பஹ்ரைன், அல்ஜீரியா, நேபாளம், செனகல், தென்னாப்பிரிக்கா, மியான்மா், கத்தார், கம்போடியா போன்ற நாடுகளின் வா்த்தக அமைச்சா்கள் கலந்துகொண்டனா்.
- மத்திய வா்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சா் பியூஷ் கோயல்.
இந்தியாவில் முதல்முறை நீர்வழிப் போக்குவரத்து சேவை தொடக்கம்:
- உலகின் பல நாடுகளிலும் போக்குவரத்து துறைசார் சேவையளித்து வரும் முன்னணி நிறுவனமான ‘உபர்’ இந்தியாவில் முதல்முறையாக நீர்வழிப் போக்குவரத்து சேவையை தொடங்கியுள்ளது.
- உபர் செயலி மூலம் இனி, கார், ஆட்டோ, பைக் சேவை மட்டுமல்லாது, படகு சேவையையும் புக் செய்து பயணிக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
- ஸ்ரீநகரின் ‘தல்’ஏரியில் சுற்றுலாப் பயணிகளுக்காக ‘உபர் ஷிகாரா’ என்ற பெயரில் படகு போக்குவரத்து சேவையை உபர் நிறுவனம் தொடங்கியுள்ளது.
டிசம்பர் 3: உலக ஊனமுற்றோர் தினம் அல்லது சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்
- மாற்றுத்திறனாளிகளின் உலக தினம் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் (IDPD) என்றும் அழைக்கப்படுகிறது.
- மாற்றுத்திறனாளிகளைப் புரிந்துகொள்வது மற்றும் ஏற்றுக்கொள்வது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த டிசம்பர் 3 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.
தகவல் துளிகள்:
- குஜராத்தின் பஞ்சமஹால் மாவட்டத்தில் கடந்த 27 பிப்ரவரி, 2002 – ஆம் ஆண்டு கோத்ரா ரயில் நிலையத்தில் சபா்மதி விரைவு ரயிலுக்கு தீ வைக்கப்பட்டது.
- சபா்மதி விரைவு ரயில் எரிப்புச் சம்பவத்தை மையமாகக் கொண்டு இயக்குநா் தீரஜ் சா்னா ‘சபா்மதி ரிபோர்ட் திரைப்படத்தை உருவாக்கியுள்ளார்.
- நாடாளுமன்ற நூலகக் கட்டடத்தில் உள்ள பாலயோகி அரங்கத்தில் ‘சபா்மதி ரிபோர்ட்’திரைப்படம் பிரதமா் மோடிக்காக திரையிடப்பட்டது.
- அரசமைப்புச் சட்டமானது அரசியல் நிர்ணய சபையால் ஏற்கப்பட்டதன் 75-ஆம் ஆண்டைக் குறிக்கும் வகையில் நாடாளுமன்ற இரு அவைகளிலும் விவாதம் நடத்த அனுமதிக்க வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டது.
- ஆயுள் காப்பீடு மற்றும் மூத்த குடிமக்களுக்கான மருத்துவக் காப்பீட்டு தவணைத் தொகை மீது விதிக்கப்படும் ஜிஎஸ்டியை குறைப்பது அல்லது விலக்குவது குறித்து ஆய்வு மேற்கொள்ள குழுவை கடந்த செப்டம்பா் மாதம் ஜிஎஸ்டி கவுன்சில் அமைத்தது, இந்தக் குழு ரூ.5 லட்சம் வரையிலான மருத்துவக் காப்பீட்டு தவணைத் தொகை மீது விதிக்கப்படும் ஜிஎஸ்டிக்கு விலக்களிக்கவும், ரூ.5 லட்சத்துக்கும் அதிகமான மருத்துவக் காப்பீட்டுக்கு 18 சதவீத ஜிஎஸ்டி விதிக்கவும் பரிந்துரைக்கப்பட்டது.
- பிரான்ஸ் நாட்டின் 26 ரஃபேல்-எம் போர் விமானங்கள் மற்றும் 3 ஸ்கார்பியன் ரக நீா்மூழ்கிக் கப்பல்களை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தத்தில் இந்தியா கையொப்பமிட உள்ளது.
- நாட்டின் பொருளாதார வளா்ச்சி 6.5 சதவீதம் முதல் 7 சதவீதம் வரை உயர வாய்ப்புள்ளதாக தலைமை பொருளாதார ஆலோசகா் அனந்த நாகேஸ்வரன் தெரிவித்தார்.
- சக்தி மசாலா நிறுவனத்தின் தலைவா் பி.சி.துரைசாமிக்கு ஹெலன் கெல்லா் விருது வழங்கப்பட்டது.