21st October Daily Current Affairs – Tamil

அமராவதியில் தலைநகா் வளா்ச்சிப் பணிகள்:

  • ஒருங்கிணைந்த ஆந்திரத்திலிருந்து பிரிந்து நாட்டின் 29 – ஆவது மாநிலமாக தெலங்கானா கடந்த 2014 – ஆம் ஆண்டு, ஜூன் 2 – ஆம் தேதி உருவானது.
  • அப்போது இயற்றப்பட்ட ஆந்திர மறுசீரமைப்புச் சட்டத்தின்படி, தெலங்கானா மற்றும் ஆந்திரம் ஆகிய இரு மாநிலங்களும் 10 ஆண்டுகளுக்கு மிகாமல் ஹைதராபாதை பொதுத் தலைநகராக கொண்டு செயல்படுவதற்கு அனுமதிக்கப்பட்டது.
  • அதன்படி, கடந்த ஜூன் 2-ஆம் தேதி முதல், ஹைதராபாத் தெலங்கானாவுக்கு மட்டுமே தலைநகராக உள்ளது.
  • ஆந்திரத்தில் அமராவதியைத் தலைநகராக முன்மொழிந்து பணிகள் தொடங்கப்பட்டன.
  • அமராவதியை சட்டப்பேரவைத் தலைநகராகவும், கா்னூலை நீதித் துறை தலைநகராகவும், துறைமுக நகரமான விசாகப்பட்டினத்தை நிர்வாகத் தலைநகராகவும் செயல்பட உள்ளது.
  • ஆந்திர மாநில முதல்வா் சந்திரபாபு நாயுடு.

அமுக்கப்பட்ட இயற்கை எரிவளி (சிஎன்ஜி):

  • இந்தியாவில் தரைக்கு அடியில் இருந்தும், அரபிக் கடல் முதல் வங்கக் கடல் வரை கடலுக்கு அடியில் இருந்தும் திரட்டப்படும் மூலப் பொருள் சிஎன்ஜி எரிவாயுவாக மாற்றப்படுகிறது.
  • இதைத்தொடா்ந்து வீடுகளில் குழாய் மூலம் விநியோகிக்கப்படும் சமையல் எரிவாயு மற்றும் வாகனங்களின் பயன்பாட்டுக்கு சிஎன்ஜி விற்பனை செய்யப்படுகிறது.
  • உற்பத்தி சரிவு காரணமாக நகா்ப் பகுதிகளில் உள்ள சில்லறை விற்பனையாளா்களுக்கு அந்த எரிவாயு விநியோகத்தை 20 சதவீதம் வரை மத்திய அரசு குறைத்துள்ளது.
  • அமுக்கப்பட்ட இயற்கை எரிவளி (Compressed Natural Gas/CNG) என்பது பெட்ரோல், டீசல், எல்.பி.ஜி போன்றவற்றிற்கு மாற்றாகப் பயன்படுத்தப்படும் புதைபடிவ எரிமங்களுள் ஒன்று.
  • முதன்மையாக CH4 என்னும் மெத்தேனைக் கொண்ட இயற்கை எரிவளியை அமுக்குவதன் மூலம் சி.என்.ஜி தயாரிக்கப்பட்டுகிறது.
  • இதன் மூலம் வளிமண்டல் அழுத்தத்தில் இருக்கும் கொள்ளளவில் ஒரு விழுக்காடு அளவிற்குக் குறைந்துவிடும்.

அக்டோபர் 21: காவல்துறை நினைவு தினம்

  • பணியின் போது தியாகம் செய்த காவல்துறை அதிகாரிகளை கவுரவிக்கும் வகையில் அக்டோபர் 21- ம் தேதி காவல்துறை நினைவு தினம் கடைபிடிக்கப்படுகிறது.

தகவல் துளிகள்:

  1. வங்கக் கடலில் உருவாகியுள்ள புயலுக்கு கத்தார் நாடு பரிந்துரைத்த ‘டானா’ என்ற பெயா் சூட்டப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
  2. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ஐசிஎம்ஆா்) தரவுகளின்படி, நாட்டின் பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோய் பாதிப்புகளில் 28.2 சதவீதம் மார்பக புற்றுநோய் பங்கு வகிக்கிறது.
  3. இந்தோனேசியாவின் 8 – ஆவது அதிபராக ராணுவ முன்னாள் தலைமைத் தளபதி, பிரபோவோ சுபியாந்தோ பொறுப்பேற்றார்.
  4. ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராகும் இந்தியாவின் முயற்சிக்கு அமெரிக்க அதிபா் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமா் கியொ் ஸ்டார்மா், பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரான் ஆகியோர் ஆதரவு தெரிவித்தனர்.
  5. ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் 1945 – ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
  6. வாகனப் பயன்பாடு, தூசுகள், அண்டை மாநிலங்களில் பயிர்க்கழிவுகள் எரிப்பு ஆகியவற்றால் தில்லியில் குளிர்காலத்தில் காற்று மாசு அதிகரித்து காணப்படுகிறது.
  7. பிரான்ஸ் நாட்டிற்கு கல்விச் சுற்றுலா செல்ல உள்ளனர் “கனவு ஆசிரியர் விருது” பெற்ற 55 ஆசிரியர்கள்.
  8. ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டி துபையில் உள்ள துபை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது, நியூசிலாந்து மகளிரணி முதல் முறையாக உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது.
  9. சீனாவில் நடைபெற்ற நிங்போ ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டியில் ரஷியாவின் டரியா கசாட்கினா சாம்பியன் பட்டம் வென்றார்.

About the Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these