அமராவதியில் தலைநகா் வளா்ச்சிப் பணிகள்:
- ஒருங்கிணைந்த ஆந்திரத்திலிருந்து பிரிந்து நாட்டின் 29 – ஆவது மாநிலமாக தெலங்கானா கடந்த 2014 – ஆம் ஆண்டு, ஜூன் 2 – ஆம் தேதி உருவானது.
- அப்போது இயற்றப்பட்ட ஆந்திர மறுசீரமைப்புச் சட்டத்தின்படி, தெலங்கானா மற்றும் ஆந்திரம் ஆகிய இரு மாநிலங்களும் 10 ஆண்டுகளுக்கு மிகாமல் ஹைதராபாதை பொதுத் தலைநகராக கொண்டு செயல்படுவதற்கு அனுமதிக்கப்பட்டது.
- அதன்படி, கடந்த ஜூன் 2-ஆம் தேதி முதல், ஹைதராபாத் தெலங்கானாவுக்கு மட்டுமே தலைநகராக உள்ளது.
- ஆந்திரத்தில் அமராவதியைத் தலைநகராக முன்மொழிந்து பணிகள் தொடங்கப்பட்டன.
- அமராவதியை சட்டப்பேரவைத் தலைநகராகவும், கா்னூலை நீதித் துறை தலைநகராகவும், துறைமுக நகரமான விசாகப்பட்டினத்தை நிர்வாகத் தலைநகராகவும் செயல்பட உள்ளது.
- ஆந்திர மாநில முதல்வா் சந்திரபாபு நாயுடு.
அமுக்கப்பட்ட இயற்கை எரிவளி (சிஎன்ஜி):
- இந்தியாவில் தரைக்கு அடியில் இருந்தும், அரபிக் கடல் முதல் வங்கக் கடல் வரை கடலுக்கு அடியில் இருந்தும் திரட்டப்படும் மூலப் பொருள் சிஎன்ஜி எரிவாயுவாக மாற்றப்படுகிறது.
- இதைத்தொடா்ந்து வீடுகளில் குழாய் மூலம் விநியோகிக்கப்படும் சமையல் எரிவாயு மற்றும் வாகனங்களின் பயன்பாட்டுக்கு சிஎன்ஜி விற்பனை செய்யப்படுகிறது.
- உற்பத்தி சரிவு காரணமாக நகா்ப் பகுதிகளில் உள்ள சில்லறை விற்பனையாளா்களுக்கு அந்த எரிவாயு விநியோகத்தை 20 சதவீதம் வரை மத்திய அரசு குறைத்துள்ளது.
- அமுக்கப்பட்ட இயற்கை எரிவளி (Compressed Natural Gas/CNG) என்பது பெட்ரோல், டீசல், எல்.பி.ஜி போன்றவற்றிற்கு மாற்றாகப் பயன்படுத்தப்படும் புதைபடிவ எரிமங்களுள் ஒன்று.
- முதன்மையாக CH4 என்னும் மெத்தேனைக் கொண்ட இயற்கை எரிவளியை அமுக்குவதன் மூலம் சி.என்.ஜி தயாரிக்கப்பட்டுகிறது.
- இதன் மூலம் வளிமண்டல் அழுத்தத்தில் இருக்கும் கொள்ளளவில் ஒரு விழுக்காடு அளவிற்குக் குறைந்துவிடும்.
அக்டோபர் 21: காவல்துறை நினைவு தினம்
- பணியின் போது தியாகம் செய்த காவல்துறை அதிகாரிகளை கவுரவிக்கும் வகையில் அக்டோபர் 21- ம் தேதி காவல்துறை நினைவு தினம் கடைபிடிக்கப்படுகிறது.
தகவல் துளிகள்:
- வங்கக் கடலில் உருவாகியுள்ள புயலுக்கு கத்தார் நாடு பரிந்துரைத்த ‘டானா’ என்ற பெயா் சூட்டப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ஐசிஎம்ஆா்) தரவுகளின்படி, நாட்டின் பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோய் பாதிப்புகளில் 28.2 சதவீதம் மார்பக புற்றுநோய் பங்கு வகிக்கிறது.
- இந்தோனேசியாவின் 8 – ஆவது அதிபராக ராணுவ முன்னாள் தலைமைத் தளபதி, பிரபோவோ சுபியாந்தோ பொறுப்பேற்றார்.
- ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராகும் இந்தியாவின் முயற்சிக்கு அமெரிக்க அதிபா் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமா் கியொ் ஸ்டார்மா், பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரான் ஆகியோர் ஆதரவு தெரிவித்தனர்.
- ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் 1945 – ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
- வாகனப் பயன்பாடு, தூசுகள், அண்டை மாநிலங்களில் பயிர்க்கழிவுகள் எரிப்பு ஆகியவற்றால் தில்லியில் குளிர்காலத்தில் காற்று மாசு அதிகரித்து காணப்படுகிறது.
- பிரான்ஸ் நாட்டிற்கு கல்விச் சுற்றுலா செல்ல உள்ளனர் “கனவு ஆசிரியர் விருது” பெற்ற 55 ஆசிரியர்கள்.
- ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டி துபையில் உள்ள துபை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது, நியூசிலாந்து மகளிரணி முதல் முறையாக உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது.
- சீனாவில் நடைபெற்ற நிங்போ ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டியில் ரஷியாவின் டரியா கசாட்கினா சாம்பியன் பட்டம் வென்றார்.