கேரளத்தில் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல்:
- பன்றிகளிடையே பரவக்கூடிய கொடிய தொற்றுநோயான ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் கேரளத்தின் திருச்சூா் மாவட்டத்தில் பரவியுள்ளது.
- பண்ணையில் வளா்க்கப்படும் மற்றும் காட்டுப் பன்றிகள் என இரண்டையும் பாதிக்கும் வகையிலான இந்தக் காய்ச்சல், பாதிக்கப்பட்ட பன்றியிடம் இருந்து மற்ற பன்றிக்கு எளிதில் பரவக்கூடியது.
- ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் வைரஸ் ( ASFV ) என்பது அஸ்பார்விரிடே குடும்பத்தில் உள்ளஒரு பெரிய, இரட்டை இழைகள் கொண்ட டிஎன்ஏ வைரஸ் ஆகும்.
- இது ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சலின் (ASF) காரணியாகும், இந்த வைரஸ் வீட்டுப் பன்றிகளில் அதிக இறப்பு விகிதத்துடன் ரத்தக்கசிவு காய்ச்சலை ஏற்படுத்துகிறது.
- ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் பொது சுகாதாரத்திற்கு எந்த ஆபத்தையும் ஏற்படுத்தாது மற்றும் பன்றிகளிடமிருந்து மனிதகுலத்திற்கு பரவாது.
- ஆப்பிரிக்க காட்டுப் பன்றிகளைத் தவிர, அனைத்து வயதுப் பன்றிகளும் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சலின் கடுமையான விகாரங்களால் பாதிக்கப்படும்.
- ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் (ASF) என்பது மொத்த இறப்பு விகிதத்துடன் கூடிய ஒரு கொடிய ரத்தக்கசிவு நோயாகும்.
சிஆா்பிஎஃப் காவலா்கள் 6 பேருக்கு ‘வீரதீர’ விருதுகள்:
- ராணுவம், துணை ராணுவம், காவல்துறை ஆகிய நாட்டின் பாதுகாப்புப் படைகளில் துணிச்சலை வெளிப்படுத்தி, திறம்பட பணியாற்றிய வீரா்களுக்கு அவா்களின் வீரதீரத்தைப் பாராட்டி ‘வீரதீர’ விருதுகள் வழங்கப்படுகிறது.
- நிகழாண்டுக்கான ‘கீா்த்தி சக்ரா’ விருது 10 வீரா்களுக்கும், ‘சௌர்யா சக்ரா’ விருது 27 வீரா்களுக்கும் என மொத்தம் 37 வீரா்களுக்கு வீரதீர விருதுகள் அறிவிக்கப்பட்டன.
- திலீப் குமார் தாஸ், ராஜ் குமார் யாதவ், பப்லு ராபா, சாம்பு ராய் ஆகியோருக்கு கீா்த்தி சக்ரா விருதுகள் வழங்கப்பட்டன.
ஐசிசியின் 9-ஆவது டி20 உலகக் கோப்பை போட்டி:
- ஐசிசியின் 9-ஆவது டி20 உலகக் கோப்பை போட்டி, மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் அமெரிக்காவில் கடந்த ஜூன் 1 முதல் 29-ஆம் தேதி வரை நடைபெற்றது.
- இந்தியா, தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி 2-ஆவது முறையாக சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது.
- சாம்பியனான இந்திய அணிக்கு ஐசிசி ரூ.21 கோடி பரிசுத் தொகை வழங்கிய நிலையில், பிசிசிஐ ரூ 125 கோடி பரிசு அறிவித்துள்ளது.
- இந்த நிலையில் பிசிசிஐயைத் தொடர்ந்து டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ 11 கோடி வழங்கப்படும் என மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அறிவித்துள்ளார்.
வெம்பக்கோட்டை அகழாய்வில் நாயக்கா் கால செப்பு நாணயங்கள்:
- வெம்பக்கோட்டை அருகேயுள்ள விஜயகரிசல்குளத்தில் வைப்பாற்றின் வடகரையில் மேட்டுகாடு பகுதியில் 3-ஆம் கட்ட அகழாய்வுப் பணி கடந்த மாதம் 18-ஆம் தேதி தொடங்கியது.
- இதில் கண்ணாடி மணிகள், கல் மணிகள், பழங்கால செங்கற்கள், சிகை அலங்காரத்துடன்கூடிய பாவையின் தலைப்பகுதி, சுடுமண் கூம்பு வடிவ அலங்கரிக்கப்பட்ட அகல் விளக்கு, கழுத்தில் அணியக்கூடிய அணிகலனில் கோக்கப்படும் மாவுக்கல் தொங்கணி உள்ளிட்ட பொருள்கள் கிடைத்தன.
- அகழாய்வில் நாயக்கா் கால செப்பு நாணயங்கள் வெள்ளிக்கிழமை கண்டெடுக்கப்பட்டன.
- இந்த நாணயங்கள் கி.பி 16-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த மதுரை நாயக்க மன்னரான வீரப்பநாயக்கா் காலத்தில் புழக்கத்தில் இருந்துள்ளது.
- இந்த நாணயங்களின் முன்பக்கத்தில் சிவபெருமான் அமா்ந்த நிலையிலும், பின்பக்கத்தில் ‘ஸ்ரீவீர’ என்ற தெலுங்கு எழுத்தும் பொறிக்கப்பட்டுள்ளது.
- இந்த செப்பு நாணயங்களில் சிவபெருமானின் உருவம் மட்டுமே காணப்படுகிறது.
உலக வங்கி நிதியுதவி: தமிழக சுகாதாரம்
- தமிழக சுகாதார தரத்தை மேம்படுத்தும் வகையில், உலக வங்கியின் உதவியுடன், சுகாதார சீரமைப்புத் திட்டம் கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
- இத்திட்டத்தில், ரூ 2,854.74 கோடி மதிப்பில் பல்வேறு சுகாதார பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
- இதில், ரூ1,998.32 கோடி உலக வங்கியும், ரூ 42 கோடி மாநில அரசு நிதிப் பங்களிப்பும் உள்ளது.
- கடந்த 2019-இல் இருந்து இதுவரை உலக வங்கியிடமிருந்து, ரூ.1,621.86 கோடி பெறப்பட்டு, தொற்றா நோய், விபத்து சிகிச்சை, பேறுகால சிகிச்சை, குழந்தைகள் நலத் திட்டம் என பல்வேறு வகைகளில் அவை செலவிடப்பட்டுள்ளன.
- இந்த திட்டம் நிகழாண்டுடன் முடிவடையும் நிலையில் புதிய மருத்துவ கட்டமைப்புக்காக, ரூ.3,000 கோடி நிதியுதவியை வழங்க கோரி உலக வங்கியிடம் தமிழக அரசு கோரிக்கை வைக்க உள்ளது.
ஜூலை 6: உலக மிருகக்காட்சிகள் தினம்
- ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 6 ஆம் தேதி உலக மிருகக்காட்சிகள் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
ஜூலை 6: விலங்கு வழிப் பரவும் நோய்களுக்கான சர்வதேச தினம் / உலக ஜூனோஸிஸ் தினம்.
- ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 6 அன்று விலங்கு வழிப் பரவும் நோய்களுக்கான சர்வதேச தினம் அனுசரிக்கப்படுகிறது.
- விலங்குகளிடமிருந்து மனிதனுக்கு பரவும் திறனுடைய விலங்கு வழிப் பரவும் நோய்கள் வளர்ச்சி அடைவது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு உதவுவதற்காக இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.
ஜூலை 6: உலக உயிரியல் பூங்காக்கள் தினம்
- ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 6 ஆம் தேதி உலக உயிரியல் பூங்காக்கள் தினம் அனுசரிக்கப்படுகிறது.
- இது விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவக்கூடிய நோய்களான ஜூனோடிக் நோய்களின் வளர்ந்து வரும் அபாயத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த உதவும் ஒரு நாளாகும்.
தகவல் துளிகள்:
- அலுமினியம் மற்றும் ஸ்டெயின்லெஸ் (துருப்பிடிக்காத எஃகு) ஸ்டீலால் தயாரிக்கப்படும் அனைத்து சமையல் பாத்திரங்கள், உபகரணங்கள் மீதும் ஐஎஸ்ஐ (இந்திய தர நிறுவன குறியீடு) முத்திரை இடம்பெறுவதை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது.
- 2023 – 24 ஆம் நிதியாண்டில் ரூ27 லட்சம் கோடிக்கு தளவாடங்களை உற்பத்தி செய்து பாதுகாப்புத் துறை சாதனை படைத்துள்ளது.
- ஆம் ஆத்மியின் நாடாளுமன்றக் குழுத் தலைவராக சஞ்சய் சிங் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- பிரிட்டன் பொதுத் தோ்தலில் தொழிலாளா் கட்சி வெற்றி பெற்று, அக்கட்சியின் தலைவா் கியொ் ஸ்டார்மா் புதிய பிரதமராகியுள்ளார்.