ரயில்வே சட்டத்திருத்த மசோதா:
- ரயில்வே சட்டங்களைத் திருத்தும் மசோதாவை மக்களவை நிறைவேற்றியது, இது தேசிய கேரியரை தனியார்மயமாக்க வழிவகுக்காது என்று அரசாங்கம் வலியுறுத்தியது.
- ரயில்வே வாரியத்தின் செயல்பாட்டை மேம்படுத்தவும், அந்த வாரியம் சுதந்திரமாக இயங்கவும் இந்த மசோதா வழி வகுக்கும்.
- மத்திய அரசின் நோக்கம் என்பது ரயில்வே துறையை நவீனமயமாக்க வேண்டும். மேலும் வலுப்படுத்த வேண்டும்.
- ரயில் வழித்தடங்கள், ரயில்கள், லெவல் கிராஸிங்குகள் உள்ளிட்டவற்றின் பாதுகாப்பு விரிவாக்கம் செய்யப்படும்.
- பழைய ரயில் வழித்தடங்கள் போர்க்கால அடிப்படையில் புதுப்பிக்கப்படும்.
- புதிய மசோதாவின் மூலம் ரயில்வே வாரியத்தின் கட்டமைப்பை மத்திய அரசால் வரையறுக்க முடியும்.
- மேலும் ரயில்வே மண்டலங்களுக்கு முடிவெடுக்கும் அதிகாரம் பகிர்ந்தளிக்கப்படும்.
கர்நாடக எழுத்தாளருக்கு வைக்கம் விருது:
- வைக்கம் போராட்டத்தில் பெரியார் ஈ.வெ.ரா. பங்கேற்று நூறு ஆண்டுகள் நிறைவு பெற்றது.
- வைக்கம் விருதிற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட தேவநூர மஹாதேவாவுக்கு, கேரள மாநிலம் வைக்கத்தில் விருது வழங்கப்பட உள்ளது.
- வைக்கம் போராட்டம் அல்லது வைக்கம் சத்தியாக்கிரகம் என்பது 1924 – 1932 ஆம் ஆண்டுகளிலான காலகட்டத்தில் இந்தியாவின் திருவாங்கூர் சமஸ்தானத்தில் உள்ள வைக்கம் என்ற ஊரில் தீண்டாமைக்கு எதிராக நடைபெற்றப் போராட்டம் ஆகும்.
- வைக்கம் ஊரில் இருந்த மகாதேவர் கோயிலைச் சுற்றியிருந்த தெருக்களை அவர்ண சாதியினர் பயன்படுத்தக்கூடாது என்ற தடையை நீக்க இப்போராட்டம் நடத்தப்பட்டது.
- ஸ்ரீ நாராயணகுருவின் ஸ்ரீ நாராயணகுரு தர்ம பரிபாலன சபையின் அமைப்புச் செயலாளரும், காங்கிரசு பேரியக்கத்தின் கேரள மாநிலத் தலைவர்களில் ஒருவருமான டி. கே. மாதவன் தலைமையில் நடைபெற்ற வைக்கம் போராட்டத்தில் பெருந்தலைவர்கள் பலர் பங்கு பெற்றுள்ளனர்.
- மகாத்மா காந்தி, ஈ. வெ. இராமசாமி, இராஜகோபாலாச்சாரி, வினோபா பாவே – பங்கு பெற்ற சில முக்கியமானவர்கள் ஆகும்.
டிசம்பர் 12: சர்வதேச யுனிவர்சல் ஹெல்த் கவரேஜ் தினம்
- அனைவருக்கும் ஆரோக்கியத்திற்கான உலகளாவிய இயக்கத்தின் வருடாந்திர பேரணியாக டிசம்பர் 12 அன்று உலகளாவிய சுகாதார பாதுகாப்பு தினம் உள்ளது.
- இது 2012 இல் உலகளாவிய சுகாதார பாதுகாப்புக்கு ஐக்கிய நாடுகள் சபையின் வரலாற்று மற்றும் ஒருமனதாக ஒப்புதல் அளித்ததன் ஆண்டு நிறைவைக் குறிக்கிறது.
டிசம்பர் 12: சர்வதேச நடுநிலைமை தினம்
- இது சர்வதேச நடுநிலை நாள் மற்றும் மாணவர் தினம், நடுநிலை தினத்துடன் ஒன்றாகக் குறிக்கப்படுகிறது.
தகவல் துளிகள்:
- அமெரிக்காவின் சா்வதேச வளா்ச்சி நிதி நிறுவனத்துடன் 553 மில்லியன் டாலா் கடன் ஒப்பந்தத்தில் இருந்து அதானி நிறுவனம் விலகியுள்ளது.
- தில்லியில் நாடு முழுவதும் பெண்களால் வழிநடத்தப்படும் 17 பஞ்சாயத்துகள் உள்பட 45 பஞ்சாயத்துகளுக்கு தேசிய பஞ்சாயத்து விருதுகளை வழங்கி குடியரசுத் தலைவா் கௌரவித்தார்.
- ஜம்மு-காஷ்மீரில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் சட்டவிரோதமாக வசிக்கும் பகுதியில் விவகாரம் குறித்து ஐ.நா.வின் இரண்டு போ் கொண்ட குழு விசாரணை மேற்கொண்டது.
- ரோஹிங்கியா, பொதுவாக மியான்மரில் (பர்மா) ராக்கைன் (அராகன்) மாநிலத்தில் வசிக்கின்றனர், நாட்டின் பிற பகுதிகளிலும், அண்டை நாடான வங்கதேசம் மற்றும் பிற நாடுகளிலும் வசிக்கின்றனர்.
- அமெரிக்க நீதித் துறையின் உயர் பதவிக்கு இந்திய வம்சாவளியான ஹர்மீத் தில்லானை நியமித்து டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.
- மத்திய ரிசர்வ் வங்கியின் 26-வது ஆளுநராக சஞ்சய் மல்ஹோத்ரா பொறுப்பேற்றார்.
- டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் இங்கிலாந்து அணியின் ஹாரி புரூக் முதன்முறையாக முதலிடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார்.