12th December Daily Current Affairs – Tamil

ரயில்வே சட்டத்திருத்த மசோதா:

  • ரயில்வே சட்டங்களைத் திருத்தும் மசோதாவை மக்களவை நிறைவேற்றியது, இது தேசிய கேரியரை தனியார்மயமாக்க வழிவகுக்காது என்று அரசாங்கம் வலியுறுத்தியது.
  • ரயில்வே வாரியத்தின் செயல்பாட்டை மேம்படுத்தவும், அந்த வாரியம் சுதந்திரமாக இயங்கவும் இந்த மசோதா வழி வகுக்கும்.
  • மத்திய அரசின் நோக்கம் என்பது ரயில்வே துறையை நவீனமயமாக்க வேண்டும். மேலும் வலுப்படுத்த வேண்டும்.
  • ரயில் வழித்தடங்கள், ரயில்கள், லெவல் கிராஸிங்குகள் உள்ளிட்டவற்றின் பாதுகாப்பு விரிவாக்கம் செய்யப்படும்.
  • பழைய ரயில் வழித்தடங்கள் போர்க்கால அடிப்படையில் புதுப்பிக்கப்படும்.
  • புதிய மசோதாவின் மூலம் ரயில்வே வாரியத்தின் கட்டமைப்பை மத்திய அரசால் வரையறுக்க முடியும்.
  • மேலும் ரயில்வே மண்டலங்களுக்கு முடிவெடுக்கும் அதிகாரம் பகிர்ந்தளிக்கப்படும்.

கர்நாடக எழுத்தாளருக்கு வைக்கம் விருது:

  • வைக்கம் போராட்டத்தில் பெரியார் ஈ.வெ.ரா. பங்கேற்று நூறு ஆண்டுகள் நிறைவு பெற்றது.
  • வைக்கம் விருதிற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட தேவநூர மஹாதேவாவுக்கு, கேரள மாநிலம் வைக்கத்தில் விருது வழங்கப்பட உள்ளது.
  • வைக்கம் போராட்டம் அல்லது வைக்கம் சத்தியாக்கிரகம் என்பது 1924 – 1932 ஆம் ஆண்டுகளிலான காலகட்டத்தில் இந்தியாவின் திருவாங்கூர் சமஸ்தானத்தில் உள்ள வைக்கம் என்ற ஊரில் தீண்டாமைக்கு எதிராக நடைபெற்றப் போராட்டம் ஆகும்.
  • வைக்கம் ஊரில் இருந்த மகாதேவர் கோயிலைச் சுற்றியிருந்த தெருக்களை அவர்ண சாதியினர் பயன்படுத்தக்கூடாது என்ற தடையை நீக்க இப்போராட்டம் நடத்தப்பட்டது.
  • ஸ்ரீ நாராயணகுருவின் ஸ்ரீ நாராயணகுரு தர்ம பரிபாலன சபையின் அமைப்புச் செயலாளரும், காங்கிரசு பேரியக்கத்தின் கேரள மாநிலத் தலைவர்களில் ஒருவருமான டி. கே. மாதவன் தலைமையில் நடைபெற்ற வைக்கம் போராட்டத்தில் பெருந்தலைவர்கள் பலர் பங்கு பெற்றுள்ளனர்.
  • மகாத்மா காந்தி, ஈ. வெ. இராமசாமி, இராஜகோபாலாச்சாரி, வினோபா பாவே – பங்கு பெற்ற சில முக்கியமானவர்கள் ஆகும்.

டிசம்பர் 12: சர்வதேச யுனிவர்சல் ஹெல்த் கவரேஜ் தினம்

  • அனைவருக்கும் ஆரோக்கியத்திற்கான உலகளாவிய இயக்கத்தின் வருடாந்திர பேரணியாக டிசம்பர் 12 அன்று உலகளாவிய சுகாதார பாதுகாப்பு தினம் உள்ளது.
  • இது 2012 இல் உலகளாவிய சுகாதார பாதுகாப்புக்கு ஐக்கிய நாடுகள் சபையின் வரலாற்று மற்றும் ஒருமனதாக ஒப்புதல் அளித்ததன் ஆண்டு நிறைவைக் குறிக்கிறது.

டிசம்பர் 12: சர்வதேச நடுநிலைமை தினம்

  • இது சர்வதேச நடுநிலை நாள் மற்றும் மாணவர் தினம், நடுநிலை தினத்துடன் ஒன்றாகக் குறிக்கப்படுகிறது.

தகவல் துளிகள்:

  1. அமெரிக்காவின் சா்வதேச வளா்ச்சி நிதி நிறுவனத்துடன் 553 மில்லியன் டாலா் கடன் ஒப்பந்தத்தில் இருந்து அதானி நிறுவனம் விலகியுள்ளது.
  2. தில்லியில் நாடு முழுவதும் பெண்களால் வழிநடத்தப்படும் 17 பஞ்சாயத்துகள் உள்பட 45 பஞ்சாயத்துகளுக்கு தேசிய பஞ்சாயத்து விருதுகளை வழங்கி குடியரசுத் தலைவா் கௌரவித்தார்.
  3. ஜம்மு-காஷ்மீரில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் சட்டவிரோதமாக வசிக்கும் பகுதியில் விவகாரம் குறித்து ஐ.நா.வின் இரண்டு போ் கொண்ட குழு விசாரணை மேற்கொண்டது.
  4. ரோஹிங்கியா, பொதுவாக மியான்மரில் (பர்மா) ராக்கைன் (அராகன்) மாநிலத்தில் வசிக்கின்றனர், நாட்டின் பிற பகுதிகளிலும், அண்டை நாடான வங்கதேசம் மற்றும் பிற நாடுகளிலும் வசிக்கின்றனர்.
  5. அமெரிக்க நீதித் துறையின் உயர் பதவிக்கு இந்திய வம்சாவளியான ஹர்மீத் தில்லானை நியமித்து டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.
  6. மத்திய ரிசர்வ் வங்கியின் 26-வது ஆளுநராக சஞ்சய் மல்ஹோத்ரா பொறுப்பேற்றார்.
  7. டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் இங்கிலாந்து அணியின் ஹாரி புரூக் முதன்முறையாக முதலிடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார்.

 

About the Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these