உள்ளாட்சி அமைப்புகளில் கூட்டத்தொடர் அமர்வுகளுக்கு சட்டம்:
- நாடாளுமன்றம் சட்டப்பேரவைகளைப் போன்று நகராட்சிகள், ஊராட்சிகள் போன்ற உள்ளாட்சி அமைப்புகளில் முறையான அவை கூட்டத் தொடர் அமர்வுகள் நடைபெற மாநிலங்கள் சட்டமியற்ற வேண்டும் என மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா வலியுறுத்தியுள்ளார்.
- இந்திய அரசியலமைப்பில் 73 மற்றும் 74வது திருத்தங்கள் கொண்டு வரப்பட்டது, உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக பரவலாக்கப்பட்ட மக்களாட்சி நிர்வாகத்தை ஏற்படுத்துவதில் எட்டப்பட்ட ஒரு மைல்கல்லாகும்.
- பொருளாதார, சமூக நீதியை நிலைநாட்டும் வகையில் நிர்வாகத்தை மக்களின் இல்லங்களுக்கே கொண்டு செல்வதுமாகும்.
- உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல்களை நடத்தும் முறையானது அரசியலமைப்பின்படி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
- புதியதாக உருவாக்கப்பட்ட ஊராட்சிகள் சட்டம், 1994-ன் படி ஊராட்சிகள் மூன்று வெவ்வேறான நிலைகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
- அதாவது மாவட்ட அளவில் மாவட்ட ஊராட்சியும், வட்டார அளவில் ஊராட்சி ஒன்றியமும், அடிமட்ட அளவில் கிராம ஊராட்சியும் உருவாக்கப்பட்டுள்ளன.
- நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகள் என மூன்று வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
- இந்தியாவின் முதல் நகராட்சி என்ற பெருமையைச் சென்னை பெற்றது.
- மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்டு உள்ளாட்சி மன்றங்கள் உருவாக்கப்படுகின்றன.
- இந்த மன்றங்களில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களின்படியே அந்த ஊர்களின் வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
ஜி4 நாடுகளின் வெளியுறவு அமைச்சா்களுடன் ஜெய்சங்கா் சந்திப்பு:
- அமெரிக்காவில் ஐ.நா பொது சபையின் 79 – ஆவது அமா்வின் ஒரு பகுதியாக, ஜி4 உறுப்பு நாடுகளின் வெளியுறவு அமைச்சா்களுடன் சந்திப்பு நடைபெற்றது.
- 4 நாடுகள்: பிரேசில், ஜெர்மனி, இந்தியா மற்றும் ஜப்பான் உள்ளன.
- ஜி4 – இன் முதன்மை நோக்கம் பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர் இருக்கைகள் ஆகும்.
- இந்த நான்கு நாடுகள் ஒவ்வொன்றும் ஐ.நா.வின் ஸ்தாபனத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சபையின் நிரந்தரமற்ற உறுப்பினர்களில் இடம் பெற்றுள்ளன, பொருளாதார, அரசியல் மற்றும் இராணுவ செல்வாக்கு கடந்த தசாப்தங்களில் கணிசமாக வளர்ந்துள்ளது.
சிறு குறு நிறுவனங்களுக்கான கடன் உத்தரவாத நிதி திட்டம்:
- குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் அமைச்சகம் (MSME), CGTMSE திட்டத்தைத் தொடங்கியது.
- மத்திய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் அமைச்சகம், கடன் வழங்கல் முறையை வலுப்படுத்தவும், எம்எஸ்இ துறைக்கு கடன் ஓட்டத்தை எளிதாக்கவும் கடன் உத்தரவாதத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
- CGTMSE திட்டம் அல்லது குறு மற்றும் சிறு நிறுவனங்களுக்கான கடன் உத்தரவாத நிதி அறக்கட்டளை SIDBI மற்றும் இந்திய அரசாங்கத்தால் செயல்படுத்தப்படுகிறது.
செப்டம்பர் 25: அந்த்யோதயா திவாஸ்
- பண்டிட் தீன்தயாள் உபத்யாயாவின் பிறந்த தினத்தின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 25 – ஆம் தேதி அந்த்யோதயா திவாஸ் அனுசரிக்கப்படுகிறது.
தகவல் துளிகள்:
- இந்தியாவிலேயே முதல் முறையாக, தில்லி விமான நிலையம், தனது அனைத்து முனையங்களையும் இணைக்கும் விமான ரயில் சேவையை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.
- மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தின் உயிரி தொழில்நுட்பவியல் புலத்தின் இணைப் பேராசிரியா் பி.அசோக்குமாருக்கு 2021 – ஆம் ஆண்டுக்கான சிறந்த விஞ்ஞானி விருது வழங்கப்பட்டது.
- மத்திய அரசின் போட்டித் தோ்வுகளை எதிர்கொள்ள சென்னையில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு மையத்தை இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி தொடங்கி வைத்தார்.
- கவிஞா் மு.மேத்தா, பாடகி பி.சுசீலாவுக்கு கலைஞா் நினைவு கலைத் துறை வித்தகா் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
- செவிலியர்களை கௌரவிக்கும் சிபாகா மிஸ் நைட்டிங்கேல் விருது 2024 எஸ்தர் மனோவா ஜெனிபருக்கு வழங்கப்பட்டது.
- இலங்கையின் புதிய பிரதமராக, சமூக ஆர்வலருமான ஹரிணி அமரசூரிய பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு, புதிய அதிபர் அநுர குமார திசாநாயக பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.