25th September Daily Current Affairs – Tamil

 

உள்ளாட்சி அமைப்புகளில் கூட்டத்தொடர் அமர்வுகளுக்கு சட்டம்:

  • நாடாளுமன்றம் சட்டப்பேரவைகளைப் போன்று நகராட்சிகள், ஊராட்சிகள் போன்ற உள்ளாட்சி அமைப்புகளில் முறையான அவை கூட்டத் தொடர் அமர்வுகள் நடைபெற மாநிலங்கள் சட்டமியற்ற வேண்டும் என மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா வலியுறுத்தியுள்ளார்.
  • இந்திய அரசியலமைப்பில் 73 மற்றும் 74வது திருத்தங்கள் கொண்டு வரப்பட்டது, உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக பரவலாக்கப்பட்ட மக்களாட்சி நிர்வாகத்தை ஏற்படுத்துவதில் எட்டப்பட்ட ஒரு மைல்கல்லாகும்.
  • பொருளாதார, சமூக நீதியை நிலைநாட்டும் வகையில் நிர்வாகத்தை மக்களின் இல்லங்களுக்கே கொண்டு செல்வதுமாகும்.
  • உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல்களை நடத்தும் முறையானது அரசியலமைப்பின்படி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
  • புதியதாக உருவாக்கப்பட்ட ஊராட்சிகள் சட்டம், 1994-ன் படி ஊராட்சிகள் மூன்று வெவ்வேறான நிலைகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
  • அதாவது மாவட்ட அளவில் மாவட்ட ஊராட்சியும், வட்டார அளவில் ஊராட்சி ஒன்றியமும், அடிமட்ட அளவில் கிராம ஊராட்சியும் உருவாக்கப்பட்டுள்ளன.
  • நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகள் என மூன்று வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
  • இந்தியாவின் முதல் நகராட்சி என்ற பெருமையைச் சென்னை பெற்றது.
  • மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்டு உள்ளாட்சி மன்றங்கள் உருவாக்கப்படுகின்றன.
  • இந்த மன்றங்களில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களின்படியே அந்த ஊர்களின் வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

ஜி4 நாடுகளின் வெளியுறவு அமைச்சா்களுடன் ஜெய்சங்கா் சந்திப்பு:

  • அமெரிக்காவில் ஐ.நா பொது சபையின் 79 – ஆவது அமா்வின் ஒரு பகுதியாக, ஜி4 உறுப்பு நாடுகளின் வெளியுறவு அமைச்சா்களுடன் சந்திப்பு நடைபெற்றது.
  • 4 நாடுகள்: பிரேசில், ஜெர்மனி, இந்தியா மற்றும் ஜப்பான் உள்ளன.
  • ஜி4 – இன் முதன்மை நோக்கம் பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர் இருக்கைகள் ஆகும்.
  • இந்த நான்கு நாடுகள் ஒவ்வொன்றும் ஐ.நா.வின் ஸ்தாபனத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சபையின் நிரந்தரமற்ற உறுப்பினர்களில் இடம் பெற்றுள்ளன, பொருளாதார, அரசியல் மற்றும் இராணுவ செல்வாக்கு கடந்த தசாப்தங்களில் கணிசமாக வளர்ந்துள்ளது.

சிறு குறு நிறுவனங்களுக்கான கடன் உத்தரவாத நிதி திட்டம்:

  • குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் அமைச்சகம் (MSME), CGTMSE திட்டத்தைத் தொடங்கியது.
  • மத்திய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் அமைச்சகம், கடன் வழங்கல் முறையை வலுப்படுத்தவும், எம்எஸ்இ துறைக்கு கடன் ஓட்டத்தை எளிதாக்கவும் கடன் உத்தரவாதத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
  • CGTMSE திட்டம் அல்லது குறு மற்றும் சிறு நிறுவனங்களுக்கான கடன் உத்தரவாத நிதி அறக்கட்டளை SIDBI மற்றும் இந்திய அரசாங்கத்தால் செயல்படுத்தப்படுகிறது.

செப்டம்பர் 25: அந்த்யோதயா திவாஸ்

  • பண்டிட் தீன்தயாள் உபத்யாயாவின் பிறந்த தினத்தின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 25 – ஆம் தேதி அந்த்யோதயா திவாஸ் அனுசரிக்கப்படுகிறது.

தகவல் துளிகள்:

  1. இந்தியாவிலேயே முதல் முறையாக, தில்லி விமான நிலையம், தனது அனைத்து முனையங்களையும் இணைக்கும் விமான ரயில் சேவையை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.
  2. மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தின் உயிரி தொழில்நுட்பவியல் புலத்தின் இணைப் பேராசிரியா் பி.அசோக்குமாருக்கு 2021 – ஆம் ஆண்டுக்கான சிறந்த விஞ்ஞானி விருது வழங்கப்பட்டது.
  3. மத்திய அரசின் போட்டித் தோ்வுகளை எதிர்கொள்ள சென்னையில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு மையத்தை இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி தொடங்கி வைத்தார்.
  4. கவிஞா் மு.மேத்தா, பாடகி பி.சுசீலாவுக்கு கலைஞா் நினைவு கலைத் துறை வித்தகா் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
  5. செவிலியர்களை கௌரவிக்கும் சிபாகா மிஸ் நைட்டிங்கேல் விருது 2024 எஸ்தர் மனோவா ஜெனிபருக்கு வழங்கப்பட்டது.
  6. இலங்கையின் புதிய பிரதமராக, சமூக ஆர்வலருமான ஹரிணி அமரசூரிய பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு, புதிய அதிபர் அநுர குமார திசாநாயக பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.

About the Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these