பிரதம மந்திரி முத்ரா திட்டம்:
- பெரு நிறுவனங்கள் அல்லாத சிறு வியாபாரிகளுக்கும் எளிய கடனுதவியை உறுதி செய்யும் முத்ரா திட்டத்தின் மூலம் கடந்த 10 ஆண்டுகளில் சுமார் ரூ 30 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.
- பிரதமரின் முத்ரா திட்டம், பிரதமர் நரேந்திர மோடியால் 08, ஏப்ரல் 2015 அன்று தொடங்கி வைக்கப்பட்டது.
- இந்தத் திட்டத்தின் வாயிலாக பெருநிறுவனங்கள் அல்லாத தொழில் துறையினர், விவசாயம் அல்லாத சிறு/குறு தொழில் நிறுவனங்களுக்கு ரூ 10 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது.
- முத்ரா திட்டத்தின்கீழ் வங்கிகள், வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள், குறு நிதி நிறுவனங்கள் மற்றும் பிற நிதி அமைப்புகளால் கடன்கள் வழங்கப்படுகின்றன.
- அதிக கடன்கள் பெறப்பட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பட்டியலில் தமிழகம், பிகார், உத்தர பிரதேசம், மேற்கு வங்கம், கா்நாடகம் ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன.
- பிரதமரின் முத்ரா திட்டத்தின் கீழ் வங்கிகள், வங்கி சாரா நிதி நிறுவனங்கள், குறு நிதியுதவி நிறுவனங்கள், இதர நிதி இடைத்தரகு நிறுவனங்கள், ‘சிஷூ’, ‘கிஷோர்’ மற்றும் ‘தருண்’ ஆகிய 3 பிரிவுகளில் ரூ 10 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது.
- இது கடன் வாங்குவோரின் நிதி தேவை மற்றும் முன்னேற்றம் அல்லது வளர்ச்சியின் நிலையை குறிக்கிறது.
- சிஷூ – ரூ 50,000 வரையிலான கடன்கள் இதில் அடங்கும்.
- கிஷோர் – ரூ 50,000 – க்கும் மேல் மற்றும் ரூ 5 லட்சம் வரையிலான கடன்கள் இதில் அடங்கும்.
- தருண் – ரூ 5 லட்சத்திற்கும் மேல் மற்றும் ரூ 10 லட்சம் வரையிலான கடன்கள் இதில் அடங்கும்.
- புதிய தலைமுறையைச் சேர்ந்த முன்னேற்றத்தை விரும்பும் இளைஞர்களிடையே தொழில் முனைவோர் திறனை ஊக்குவிக்கும் நோக்கில், சிஷூ பிரிவு கடன்கள் வழங்குவதுடன் அதன் தொடர்ச்சியாக கிஷோர் மற்றும் தருண் பிரிவுகளிலும் அதிக கவனம் செலுத்துவது உறுதி செய்யப்படுகிறது.
மக்கள்தொகை கணக்கெடுப்பு:
- கடந்த 1981 – ஆம் ஆண்டுமுதல் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள்தொகை கணக்கெடுப்பை மத்திய அரசு மேற்கொண்டு வந்தது.
- கடந்த 2020 – ஆம் ஆண்டு ஏப்ரல் 1 – ஆம் தேதி மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டத்தை தொடங்க திட்டமிடப்பட்டது.
- ஆனால் கரோனா பரவல் காரணமாக அந்தப் பணியை மத்திய அரசு ஒத்திவைத்தது, மக்கள்தொகை கணக்கெடுப்பு குறித்த புதிய தரவுகள் இல்லாததால், 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் நடத்தப்பட உள்ளது.
- உலக மக்கள்தொகை தினம் என்பது ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 11 அன்று அனுசரிக்கப்படுகிறது.
- சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியாவின் முதல் மக்கள்தொகை கணக்கெடுப்பு 1951 இல் செய்யப்பட்டது.
- கிபி 1872 ஆம் ஆண்டில் , இந்தியாவில் முதல் மக்கள்தொகை கணக்கெடுப்பு மயோ பிரபுவின் ஆட்சியின் கீழ் செய்யப்பட்டது.
- இந்தியாவில் முதல் அதிகாரப்பூர்வ மக்கள்தொகை கணக்கெடுப்பு 1881 ஆம் ஆண்டு ரிப்பன் பிரபுவின் கீழ் மேற்கொள்ளப்பட்டது.
- 1951 ஆம் ஆண்டு மக்கள் தொகை மீபெருக்கத்தின் ஆண்டு என்றும் அழைக்கப்படுகிறது.
- அதிக மக்கட்தொகை கொண்ட மாநிலமாக உத்தரப்பிரதேசமும், குறைந்த மக்கட் தொகை கொண்ட மாநிலமாக சிக்கிம் உள்ளது.
- 2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டின் மக்கட் தொகை 7,21,38,958 ஆகும்.
- இதில் அதிக மக்கள்தொகை உள்ள மாவட்டமாக சென்னை மாவட்டம் உள்ளது.
‘சத்பவ்’ நடவடிக்கை:
- ‘யாகி புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நமது ஒத்துழைப்பை வெளிப்படுத்தும் வகையில் ‘சத்பவ்’ நடவடிக்கையை இந்தியா தொடங்கியுள்ளது.
- யாகி புயல் காரணமாக பாதிக்கப்பட்ட மியான்மா், வியாத்நாம், லாவோஸ் ஆகிய நாடுகளுக்கு உதவ ‘சத்பவ்’ நடவடிக்கையின் கீழ் நிவாரணப் பொருள்களை இந்தியா வழங்கியுள்ளது.
- அதன் கீழ், இந்திய கடற்படை கப்பலான ஐஎன்எஸ் சத்புராவில் உலா் உணவுப் பொருள்கள், உடைகள் மற்றும் மருந்துகள் என 10-டன் நிவாரணப் பொருள்கள் மியான்மருக்கு அனுப்பப்பட்டன.
- வியத்நாமுக்கு நீா் சுத்திகரிப்பு பொருள்கள், தண்ணீா் கொள்கலன்கள், போர்வைகள், சமையலறை பாத்திரங்கள், சூரியசக்தி விளக்குகள் நிவாரணப் பொருள்கள் அனுப்பப்பட்டன.
செப்டம்பர் 16: உலக ஓசோன் தினம்
- உலக ஓசோன் தினம் ஆண்டுதோறும் செப்டம்பர் 16 அன்று அனுசரிக்கப்படுகிறது.
- 1987 – இல் இந்த நாளில், மாண்ட்ரீல் நெறிமுறை கையெழுத்தானது, 1994 முதல், உலக ஓசோன் தினம் கொண்டாடப்படுகிறது, இது ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையால் நிறுவப்பட்டது.
- இந்த நாள் ஓசோன் படலத்தின் சிதைவு மற்றும் அதை பாதுகாப்பதற்கான தீர்வுகளை மக்களுக்கு நினைவூட்டுகிறது.
தகவல் துளிகள்:
- குஜராத்தின் புஜ் – அகமதாபாத் இடையிலான நாட்டின் முதல் வந்தே மெட்ரோ சேவையை பிரதமா் தொடங்கி வைக்கவுள்ளார்.
- ஆயுள் மற்றும் மருத்துவக் காப்பீடுகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி விகிதத்தை மறுஆய்வு செய்ய 13 போ் கொண்ட அமைச்சா்கள் குழுவை ஜிஎஸ்டி கவுன்சில் அமைத்தது, இந்தக் குழுவுக்கு பிகார் துணை முதல்வா் சாம்ராட் செளதரி தலைமை வகிக்க உள்ளார்.
- தற்போது ஆயுள் மற்றும் மருத்துவக் காப்பீடுகளுக்கான தவணை தொகை மீது 18 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது.
- தில்லியில் நிர்மலா சீதாராமன் தலைமையில் 54 – ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது.
- கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் மேற்கு தொடா்ச்சி மலை அடிவாரத்திலுள்ள காரமடையை அடுத்த கெம்மராம்பாளையம் கிராமத்தில் ஊராட்சி நிர்வாகமும், வனத்துறையும் இணைந்து அதிநவீன தொழில்நுட்ப மான செயற்கை நுண்ணறிவை (ஏஐ) பயன்படுத்தி வனவிலங்குகளை விரட்டியுள்ளது.