16th September Daily Current Affairs – Tamil

 

பிரதம மந்திரி முத்ரா திட்டம்:

  • பெரு நிறுவனங்கள் அல்லாத சிறு வியாபாரிகளுக்கும் எளிய கடனுதவியை உறுதி செய்யும் முத்ரா திட்டத்தின் மூலம் கடந்த 10 ஆண்டுகளில் சுமார் ரூ 30 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.
  • பிரதமரின் முத்ரா திட்டம், பிரதமர் நரேந்திர மோடியால் 08, ஏப்ரல் 2015 அன்று தொடங்கி வைக்கப்பட்டது.
  • இந்தத் திட்டத்தின் வாயிலாக பெருநிறுவனங்கள் அல்லாத தொழில் துறையினர், விவசாயம் அல்லாத சிறு/குறு தொழில் நிறுவனங்களுக்கு ரூ 10 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது.
  • முத்ரா திட்டத்தின்கீழ் வங்கிகள், வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள், குறு நிதி நிறுவனங்கள் மற்றும் பிற நிதி அமைப்புகளால் கடன்கள் வழங்கப்படுகின்றன.
  • அதிக கடன்கள் பெறப்பட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பட்டியலில் தமிழகம், பிகார், உத்தர பிரதேசம், மேற்கு வங்கம், கா்நாடகம் ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன.
  • பிரதமரின் முத்ரா திட்டத்தின் கீழ் வங்கிகள், வங்கி சாரா நிதி நிறுவனங்கள், குறு நிதியுதவி நிறுவனங்கள், இதர நிதி இடைத்தரகு நிறுவனங்கள், ‘சிஷூ’, ‘கிஷோர்’ மற்றும் ‘தருண்’ ஆகிய 3 பிரிவுகளில் ரூ 10 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது.
  • இது கடன் வாங்குவோரின் நிதி தேவை மற்றும் முன்னேற்றம் அல்லது வளர்ச்சியின் நிலையை குறிக்கிறது.
  • சிஷூ – ரூ 50,000 வரையிலான கடன்கள் இதில் அடங்கும்.
  • கிஷோர் – ரூ 50,000 – க்கும் மேல் மற்றும் ரூ 5 லட்சம் வரையிலான கடன்கள் இதில் அடங்கும்.
  • தருண் – ரூ 5 லட்சத்திற்கும் மேல் மற்றும் ரூ 10 லட்சம் வரையிலான கடன்கள் இதில் அடங்கும்.
  • புதிய தலைமுறையைச் சேர்ந்த முன்னேற்றத்தை விரும்பும் இளைஞர்களிடையே தொழில் முனைவோர் திறனை ஊக்குவிக்கும் நோக்கில், சிஷூ பிரிவு கடன்கள் வழங்குவதுடன் அதன் தொடர்ச்சியாக கிஷோர் மற்றும் தருண் பிரிவுகளிலும் அதிக கவனம் செலுத்துவது உறுதி செய்யப்படுகிறது.

மக்கள்தொகை கணக்கெடுப்பு:

  • கடந்த 1981 – ஆம் ஆண்டுமுதல் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள்தொகை கணக்கெடுப்பை மத்திய அரசு மேற்கொண்டு வந்தது.
  • கடந்த 2020 – ஆம் ஆண்டு ஏப்ரல் 1 – ஆம் தேதி மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டத்தை தொடங்க திட்டமிடப்பட்டது.
  • ஆனால் கரோனா பரவல் காரணமாக அந்தப் பணியை மத்திய அரசு ஒத்திவைத்தது, மக்கள்தொகை கணக்கெடுப்பு குறித்த புதிய தரவுகள் இல்லாததால், 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் நடத்தப்பட உள்ளது.
  • உலக மக்கள்தொகை தினம் என்பது ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 11 அன்று அனுசரிக்கப்படுகிறது.
  • சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியாவின் முதல் மக்கள்தொகை கணக்கெடுப்பு 1951 இல் செய்யப்பட்டது.
  • கிபி 1872 ஆம் ஆண்டில் , இந்தியாவில் முதல் மக்கள்தொகை கணக்கெடுப்பு மயோ பிரபுவின் ஆட்சியின் கீழ் செய்யப்பட்டது.
  • இந்தியாவில் முதல் அதிகாரப்பூர்வ மக்கள்தொகை கணக்கெடுப்பு 1881 ஆம் ஆண்டு ரிப்பன் பிரபுவின் கீழ் மேற்கொள்ளப்பட்டது.
  • 1951 ஆம் ஆண்டு மக்கள் தொகை மீபெருக்கத்தின் ஆண்டு என்றும் அழைக்கப்படுகிறது.
  • அதிக மக்கட்தொகை கொண்ட மாநிலமாக உத்தரப்பிரதேசமும், குறைந்த மக்கட் தொகை கொண்ட மாநிலமாக சிக்கிம் உள்ளது.
  • 2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டின் மக்கட் தொகை 7,21,38,958 ஆகும்.
  • இதில் அதிக மக்கள்தொகை உள்ள மாவட்டமாக சென்னை மாவட்டம் உள்ளது.

சத்பவ்’ நடவடிக்கை:

  • ‘யாகி புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நமது ஒத்துழைப்பை வெளிப்படுத்தும் வகையில் ‘சத்பவ்’ நடவடிக்கையை இந்தியா தொடங்கியுள்ளது.
  • யாகி புயல் காரணமாக பாதிக்கப்பட்ட மியான்மா், வியாத்நாம், லாவோஸ் ஆகிய நாடுகளுக்கு உதவ ‘சத்பவ்’ நடவடிக்கையின் கீழ் நிவாரணப் பொருள்களை இந்தியா வழங்கியுள்ளது.
  • அதன் கீழ், இந்திய கடற்படை கப்பலான ஐஎன்எஸ் சத்புராவில் உலா் உணவுப் பொருள்கள், உடைகள் மற்றும் மருந்துகள் என 10-டன் நிவாரணப் பொருள்கள் மியான்மருக்கு அனுப்பப்பட்டன.
  • வியத்நாமுக்கு நீா் சுத்திகரிப்பு பொருள்கள், தண்ணீா் கொள்கலன்கள், போர்வைகள், சமையலறை பாத்திரங்கள், சூரியசக்தி விளக்குகள் நிவாரணப் பொருள்கள் அனுப்பப்பட்டன.

செப்டம்பர் 16: உலக ஓசோன் தினம்

  • உலக ஓசோன் தினம் ஆண்டுதோறும் செப்டம்பர் 16 அன்று அனுசரிக்கப்படுகிறது.
  • 1987 – இல் இந்த நாளில், மாண்ட்ரீல் நெறிமுறை கையெழுத்தானது, 1994 முதல், உலக ஓசோன் தினம் கொண்டாடப்படுகிறது, இது ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையால் நிறுவப்பட்டது.
  • இந்த நாள் ஓசோன் படலத்தின் சிதைவு மற்றும் அதை பாதுகாப்பதற்கான தீர்வுகளை மக்களுக்கு நினைவூட்டுகிறது.

தகவல் துளிகள்:

  1. குஜராத்தின் புஜ் – அகமதாபாத் இடையிலான நாட்டின் முதல் வந்தே மெட்ரோ சேவையை பிரதமா் தொடங்கி வைக்கவுள்ளார்.
  2. ஆயுள் மற்றும் மருத்துவக் காப்பீடுகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி விகிதத்தை மறுஆய்வு செய்ய 13 போ் கொண்ட அமைச்சா்கள் குழுவை ஜிஎஸ்டி கவுன்சில் அமைத்தது, இந்தக் குழுவுக்கு பிகார் துணை முதல்வா் சாம்ராட் செளதரி தலைமை வகிக்க உள்ளார்.
  3. தற்போது ஆயுள் மற்றும் மருத்துவக் காப்பீடுகளுக்கான தவணை தொகை மீது 18 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது.
  4. தில்லியில் நிர்மலா சீதாராமன் தலைமையில் 54 – ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது.
  5. கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் மேற்கு தொடா்ச்சி மலை அடிவாரத்திலுள்ள காரமடையை அடுத்த கெம்மராம்பாளையம் கிராமத்தில் ஊராட்சி நிர்வாகமும், வனத்துறையும் இணைந்து அதிநவீன தொழில்நுட்ப மான செயற்கை நுண்ணறிவை (ஏஐ) பயன்படுத்தி வனவிலங்குகளை விரட்டியுள்ளது.

 

 

 

 

About the Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these