தினசரி நடப்பு நிகழ்வுகள் JANUARY 10
மனித உரிமை பாதுகாப்பு, கருத்து சுதந்திரம்: இந்தியா-ஐரோப்பிய ஒன்றியம்
- 11 – ஆவது இந்தியா-ஐரோப்பிய ஒன்றியம் மனித உரிமைகள் பேச்சுவார்த்தை தில்லியில் நடைபெற்றது.
- மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் தேசிய மற்றும் சா்வதேச மனித உரிமை வழிமுறைகளை வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தை இந்தியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் அங்கீகரித்தன.
- குறிப்பாக, ஐ.நா பொதுச் சபை மற்றும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையம் போன்ற பல தரப்பு அமைப்புகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தை இரு தரப்பும் அடிக்கோடிட்டுக் காட்டியது.
- இது தொடா்பான கூட்டு நடவடிக்கைகளுக்கு ஐ.நா – வுக்கான இந்தியாவின் நிரந்தர தூதரகங்களுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையே நெருக்கமான ஒத்துழைப்பு மற்றும் தொடா்ச்சியான பேச்சுவார்த்தைகளுக்கு உறுதியேற்கப்பட்டது.
10,000 இந்தியா்களின் மரபணு தரவுகள்: ‘ஜீனோம்’திட்டம்
- 10 ஆயிரம் இந்தியா்களின் மரபணு மாறுபாடுகளின் விரிவான தரவுகளை ஆய்வுக்காக பிரதமா் மோடி வெளியிட்டார்.
- நாட்டின் மரபுணு மாறுபாடுகளின் வரைபடத்தை உருவாக்கும் ‘ஜீனோம்’ திட்டத்தின்படி, ஆரோக்கியமானவா்கள் 10 ஆயிரம் இந்தியா்களின் மரபணு மாறுபாடுகள் சேகரிக்கப்பட்டன.
- புதிய நோய்களைக் கண்டறியவும், ஏற்கெனவே உள்ள நோய்களை குணப்படுத்தவும் இந்தத் தரவுகள் உதவும்.
- இந்தியா்களின் மரபணு வேறுபாடுகளைக் கண்டறிய இந்தத் தரவுகள் உதவும்.
- உயிரி தொழில்நுட்ப ஆய்வுத் துறையில் இது மிகப் பெரிய மைல்கல்லாகும்.
- இருபதுக்கும் மேற்பட்ட முன்னணி ஆய்வு நிறுனவங்கள் இந்த தரவுகள் சேமிக்கும் பணியில் முக்கிய பங்காற்றின.
- மரபணு சிகிச்சைகளை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லவும், தொற்று, புதிய நோய்களைக் கண்டறியவும் இது உதவும்.
ஸ்பேடெக்ஸ் விண்கலன்களை ஒருங்கிணைக்க திட்டம்:
- ஸ்பேடெக்ஸ் இரட்டை விண்கலன்களை ஒருங்கிணைக்கும் செயல்பாடுகள் தொடங்கும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.
- விண்வெளியில் இந்திய ஆய்வு நிலையத்தை 2035 – ஆம் ஆண்டுக்குள் அமைக்கும் முன்னோட்ட முயற்சியாக ஸ்பேடெக்ஸ் எனும் ஆய்வுத் திட்டத்தை இஸ்ரோ செயல்படுத்தியுள்ளது.
- இதற்காக வடிவமைக்கப்பட்ட ஸ்பேடெக்ஸ் ஏ, ஸ்பேடெக்ஸ் பி ஆகிய 2 விண்கலன்களும் பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட் மூலமாக ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்தி புவி வட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டன.
- தற்போது இவ்விரு விண்கலன்களும் ஒரே சுற்றுப்பாதையில் குறிப்பிட்ட தொலைவு இடைவெளியில் ஒன்றன்பின் ஒன்றாக வலம் வருகின்றன.
‘பிஎம் சூா்ய கா்’ திட்டம்:
- 2024 பிப்ரவரி 15 – ஆம் தேதி பிரதமா் மோடியால் சூா்ய கா் முஃப்த் பிஜ்லி யோஜனா திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.
- வீட்டுக்கூரைகள் மீது சூரிய ஒளித்தகடுகளை பொருத்திக்கொள்ள மானியம் வழங்குவதுதான் இத்திட்டத்தின் நோக்கமாகும்.
- இந்த திட்டத்தில் சூரிய ஒளித்தகடுகளின் 40 சதவீத செலவினத்தை மானியத் தொகை ஈடுசெய்யும்.
‘பிஎம் குஷும்’திட்டம்:
- PM-KUSUM (பிரதான் மந்திரி கிசான் உர்ஜா சுரக்ஷா ஏவம் உத்தான் மஹாபியன்) திட்டம்.
- இந்திய அரசின் PM-KUSUM திட்டம் 3.5 மில்லியனுக்கும் அதிகமான விவசாயிகளுக்கு சுத்தமான எரிசக்தியை வழங்குவதற்கான உலகின் மிகப்பெரிய முயற்சிகளில் ஒன்றாகும்.
- இது விவசாய பம்புகளை சூரிய ஒளிமயமாக்குகிறது மற்றும் விவசாயிகளுக்கு 10 ஜிகாவாட் வரை விநியோகிக்கப்படும் சோலார் திட்டங்களை வழங்குகிறது.
- இது இந்தியாவில் சூரிய சக்தி உற்பத்தியை மேலும் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது மற்றும் விவசாயிகளுக்கு சூரிய விவசாயத்தின் பலன்களை வழங்குகிறது.
- 2018-19 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் இந்த திட்டத்திற்காக பத்து ஆண்டுகளுக்கு ரூ.48000 கோடிகளை ஒதுக்கியுள்ளது.
- இந்த திட்டத்திற்கு பொறுப்பான அமைச்சகம் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் ஆகும்.
- ஆரம்பத்தில், அரசாங்கம் 1.75 மில்லியன் ஆஃப்-கிரிட் விவசாய சோலார் பம்புகளை விநியோகிக்கும்.
- தரிசாக இருக்கும் நிலங்களில் 10000 மெகா வாட்ஸ் சோலார் ஆலைகள் அமைக்கப்படும்.
- தரிசு நிலங்களில் விவசாயிகள் உற்பத்தி செய்யும் கூடுதல் சோலார் மின்சாரத்தை டிஸ்காம்கள் என்றும் அழைக்கப்படும் மாநில மின்சார விநியோக நிறுவனங்கள் வாங்கும்.
ஜனவரி 10: உலக ஹிந்தி தினம்
- விஸ்வ ஹிந்தி திவாஸ் என்பது ஆண்டுதோறும் ஜனவரி 10 அன்று அனுசரிக்கப்படுகிறது.
- 1949 ஆம் ஆண்டு UNGA இல் இந்தி முதன்முதலில் பேசப்பட்ட நிகழ்வைக் குறிக்கும் வகையில் உலக இந்தி தினம் உருவாக்கப்பட்டது.
தகவல் துளிகள்:
- தில்லியில் உள்ள கா்தவ்யா பாதையில் 76 – ஆவது குடியரசு தின விழா அணிவகுப்பு நடைபெறவுள்ளது.
- செயற்கை நுண்ணறிவுக்காக கோவையில் அரசு மற்றும் தனியார் பங்களிப்பு முறையில் 20 லட்சம் சதுர அடியில் ‘தகவல் தொழில்நுட்ப வெளி’நிறுவப்படும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்
- சென்னை நந்தம்பாக்கம் வா்த்தக மையத்தில் தகவல் தொழில்நுட்ப மாநாட்டை (உமாஜின் – 2025) முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
- கடந்த 1999 – ஆம் ஆண்டு அப்போதைய முதல்வா் மு.கருணாநிதி சென்னையில் டைடல் பூங்காவை உருவாக்கினார்.