3rd January Daily Current Affairs – Tamil

தினசரி நடப்பு நிகழ்வுகள் JANUARY 3

 

தேசிய அத்தியாவசிய நோயறிதல் பட்டியல்: ஐசிஎம்ஆா்

  • தேசிய அத்தியாவசிய நோயறிதல் பட்டியலின்(என்இடிஎல்) திருத்தப்பட்ட பதிப்பை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) முன்மொழிந்தது.
  • இந்த பட்டியலை முதன்முதலில் கடந்த 2019 – ஆம் ஆண்டு ஐசிஎம்ஆா் வெளியிட்டது.
  • இது நாட்டின் பல்வேறு நிலை சுகாதார வசதிகளில் கிடைக்க வேண்டிய குறைந்தபட்ச மருத்துவ சோதனைகளின் எண்ணிக்கையைக் கணக்கிடுகிறது.
  • நீரிழிவு, மலேரியா, காசநோய், எச்ஐவி மற்றும் சிபிலிஸ் போன்ற 9 வகையான நோயறிதல் சோதனைகள் கிராம அளவிலான சுகாதார மையங்களில் கிடைக்க வேண்டும்.
  • ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திர்கள் இந்த 9 சோதனைகளுடன் கூடுதலாக ‘ஹெபடைடிஸ்-பி’சோதனைகளையும் வழங்க வேண்டும்.
  • டெங்கு, ஜப்பானிய மூளைக்காய்ச்சல், எக்ஸ்ரே, ஈசிஜி பரிசோதனைகள் ஆரம்ப சுகாதார நிலையங்களில் இருக்க வேண்டும்.
  • கிராம அளவிலான சுகாதார மையங்கள், ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திர்கள், ஆரம்ப சுகாதார மையங்கள், சமூக சுகாதார மையங்கள், துணை மாவட்ட மருத்துவமனைகள் மற்றும் மாவட்ட மருத்துவமனைகள் என அனைத்து சுகாதார நிலையங்களுக்கும் இந்த பரிந்துரைகள் வழங்கப்படுகின்றன.

‘வா்த்தகம் மற்றும் பொருளாதாரக் கூட்டுறவு’ஒப்பந்தம்: இஎப்டிஏ

  • ஐஸ்லாந்து, நார்வே, லிக்டென்ஸ்டைன், ஸ்விட்சா்லாந்து, ஆகிய 4 ஐரோப்பிய நாடுகளின் ‘இஎப்டிஏ’ கூட்டமைப்புக்கும் இந்தியாவுக்கும் இடையே கையொப்பமான தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் நிகழாண்டு இறுதிக்குள் நடைமுறைப்படுத்தப்படும் என்று மத்திய வா்த்தகத் துறை அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்தார்
  • ஐரோப்பிய தடையற்ற வா்த்தக கூட்டமைப்பின் (இஎப்டிஏ) 4 உறுப்பு நாடுகளான ஐஸ்லாந்து, நார்வே, லிக்டென்ஸ்டைன் மற்றும் ஸ்விட்சா்லாந்து ஆகியவையும் இந்தியாவும் ‘வா்த்தகம் மற்றும் பொருளாதாரக் கூட்டுறவு’ ஒப்பந்தத்தில் கடந்த மார்ச் மாதம் கையொப்பமிட்டன.
  • இந்தியாவில் இத்தகைய ஒப்பந்தங்கள் மத்திய அமைச்சரவையால் அங்கீகரிக்கப்படுகின்றன.
  • ஆனால் ‘இஎப்டிஏ’ நாடுகளை பொறுத்தவரை, அந்தந்த நாடுகளின் நாடாளுமன்றத்தின் ஒப்புதல் தேவைபடுகிறது.

செஸ் வீரர் குகேஷுக்கு ‘தியான்சந்த்  கேல் ரத்னா:

  • தமிழகத்தைச் சேர்ந்த செஸ் வீரர் குகேஷுக்கு ‘தியான்சந்த் கேல் ரத்னா விருதை மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
  • மேலும், துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை மனு பாக்கர், இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் மற்றும் பாராலிம்பிக்ஸ் வீரர் பிரவீண் குமார் ஆகியோருக்கும் கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
  • தமிழகத்தைச் சேர்ந்த செஸ் வீரரான டி குகேஷ், கடந்த மாதம் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஸ் தொடரில் சாம்பியன் பட்டம் பெற்றார்.
  • இளம் வயதில் உலக சாம்பியன் விருதை வென்ற வீரர் என்ற பெருமையை பெற்றார்.
  • உலக செஸ் சாம்பியன்ஷிப் வரலாற்றிலேயே மிக இளம் போட்டியாளராக கலந்துகொண்டு, நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரெனை எதிர்கொண்டார்.
  • ஹங்கேரியில் கடந்த ஆண்டு 45-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியிலும், அதற்கு முன் 2022-இல் மாமல்லபுரத்தில் நடைபெற்ற 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியிலும் தனிநபா் பிரிவில் தங்கம் வென்று அசத்தினார்.
  • ஹரியாணா மாநிலத்தை சேர்ந்த துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனையான மனு பாக்கர், கடந்தாண்டு பாரீஸில் நடைபெற்ற ஒலிம்பிக் தொடரில் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வென்றார்.
  • ஒரே ஒலிம்பிக் தொடரில் இரண்டு பதக்கங்களை வென்ற இந்திய வீராங்கனை என்ற சாதனையை படைத்தார்.
  • இந்திய ஆடவர் ஹாக்கி அணியின் கேப்டனான ஹர்மன்பிரீத் சிங், பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்.
  • பாரீஸ் ஒலிம்பிக்ஸ் தொடரில், வெண்கலம் வென்றவர்.
  • டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற இந்திய ஹாக்கி அணியில் விளையாடியவர்.
  • ஆசியக் கோப்பை, ஆசிய சாம்பியன்ஷிப் உள்ளிட்ட போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
  • உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பிரவீன் குமார், பாராலிம்க்ஸ் தடகள வீரர்.
  • பாரீஸ் பாராலிம்பிக்ஸ் போட்டியில் தங்கப் பதக்கமும், டோக்கியோவில் வெள்ளிப் பதக்கமும் வென்றுள்ளார்.

நிலத்தடி நீரில் நைட்ரேட் மாசுபாடு:

  • தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டம் உள்ளிட்ட 4 மாநிலங்களில் உள்ள 15 மாவட்டங்கள் நிலத்தடி நீரில் ‘நைட்ரேட்’ (அயனி-உப்பு) ரசாயன மாசுபாட்டால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிலத்தடி நீா் வாரியத்தின் வருடாந்திர நிலத்தடி நீா் தரநிலை அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.
  • நாடு முழுவதும் 440 மாவட்டங்களில் இந்த மாசுபடுதல் நிலை உயா்ந்து வருவதும் இந்த அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.
  • உலக சுகாதார அமைப்பு மற்றும் குடிநீருக்கான இந்திய தரநிர்ணய அமைப்பு ஆகியவை நிர்ணயித்துள்ள ஒரு லிட்டா் தண்ணீரில் 45 மில்லி கிராம் நைட்ரேட் மாசுபாடு இருக்கலாம் என்ற அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் அதிக மாசுபாடு இருப்பது தெரியவந்தது.
  • தமிழகம், உத்தர பிரதேசம், ஆந்திரம், ஹரியாணா மாநிலங்களில் 2017 முதல் 2023-ஆம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில் நிலத்தடி நீா் நைட்ரேட் மாசுபாடு அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகரித்து வந்துள்ளது.
  • நிலத்தடி நீரில் நைட்ரேட் அளவு அதிகரித்திருப்பது குழந்தைகளிடையே சருமம் நீல நிறத்தில் மாறும் பாதிப்பு ‘புளூ பேபி சின்ட்ரோம்’ உள்ளிட்ட சரும நோய் பாதிப்புகளை ஏற்படுத்தும்.
  • யுரேனியம் மாசுபாடு சிறுநீரக பாதிப்பை ஏற்படுத்தும்.

ஜனவரி 3: சர்வதேச மனம் உடல் ஆரோக்கிய தினம்

  • ஆண்டுதோறும் ஜனவரி 3 அன்று சர்வதேச மனம்-உடல் ஆரோக்கிய தினம் அனுசரிக்கப்படுகிறது.

தகவல் துளிகள்:

  • இலங்கையின் வடக்கு மாகாணத்தில் உள்ள காரைநகா் படகுத் துறை புனரமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டத்துக்கு இந்தியா சார்பில் ரூ 8.5 கோடி வழங்கப்படவுள்ளது.
  • என்டிஏ மற்றும் அதன் சார்பில் நடத்தப்படும் போட்டித் தோ்வுகளில் சீா்திருத்தங்கள் மேற்கொள்வதுடன், பாதுகாப்பு நடைமுறைகளை மறுஆய்வு செய்து பரிந்துரைகளை வழங்க இஸ்ரோ முன்னாள் தலைவா் கே.ராதாகிருஷ்ணன் தலைமையில் 7 போ் கொண்ட உயா்நிலைக் குழுவை மத்திய அரசு கடந்த ஜூலையில் அமைத்தது.
  • தென்கிழக்கு ஆப்பிரிக்க நாடான ஜிம்பாப்வேவில் மரண தண்டனை ரத்து செய்து சட்டம் இயற்றப்பட்டது.
  • சுவிட்சர்லாந்தில் புர்காவுக்கு தடை விதிப்பது தொடர்பான தீர்மானம் கடந்த 2021- ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது.
  • ஏற்கெனவே பிரான்ஸ், நெதர்லாந்து, இலங்கை, ஆஸ்திரியா, டென்மார்க் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் புர்காவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
  • தமிழக பாரா பாட்மின்டன் வீராங்கனைகள் துளசிமதி முருகேசன், நித்யஸ்ரீ சுமதி சிவன், மனிஷா ராமதாஸ் ஆகியோருக்கு ‘அா்ஜுனா விருது’அறிவிக்கப்பட்டுள்ளது.
  • 2024-ஆம் ஆண்டுக்கான விருதுப் பட்டியலின்படி, குகேஷ் உள்பட 4 பேருக்கு தியான் சந்த் கேல் ரத்னா விருதும், துளசிமதி உள்பட 32 பேருக்கு அா்ஜுனா விருதும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

 

 

 

 

 

About the Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these