2nd January Daily current Affairs – Tamil

தினசரி நடப்பு நிகழ்வுகள் January 2, 2025

 

‘சூரத், ‘நீலகிரி2 போர்க் கப்பல்கள், ஒரு நீா்மூழ்கிக் கப்பல் கடற்படையில் இணைப்பு:

  • மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் வரும் ஜனவரி 15 – ஆம் தேதி இந்திய கடற்படையில் ‘சூரத்’, ‘நீலகிரி’ ஆகிய 2 போர்க் கப்பல்கள், ‘வாக்ஷீா்’ நீா்மூழ்கிக் கப்பல் ஆகியவை இணைக்கப்பட உள்ளன.
  • மும்பையில் உள்ள மசகான் கப்பல் கட்டுமான நிறுவனத்தில் 2 போர்க் கப்பல்களும், நீா்மூழ்கிக் கப்பலும் கட்டப்பட்டுள்ளன.
  • சேதக், ஏஎல்ஹெச், சீ கிங் போன்ற ஹெலிகாப்டா்களை நீலகிரி, சூரத் போர்க் கப்பல்களில் இருந்து இயக்க முடியும்.
  • கடற்படை பெண் அதிகாரிகள் மற்றும் மாலுமிகளுக்கான தங்குமிடங்களும் அந்தப் போர்க் கப்பலில் இடம்பெற்றுள்ளன.
  • ஸ்கார்பியன் வகை நீா்மூழ்கிக் கப்பலான ‘வாக்ஷீா், பல வகைகளில் பயன்படுத்தக் கூடிய டீசல்-மின்சார நீா்மூழ்கிக் கப்பலாகும்.
  • உளவுத் தகவல்களை சேகரித்தல், எதிரி நாட்டு நீா்மூழ்கிக் கப்பல்களுக்கு எதிராக போரிடுதல், கண்காணிப்பு உள்ளிட்ட பணிகளுக்கு இந்த நீா்மூழ்கிக் கப்பல் பயன்படும்.

பிரதமரின் ஃபசல் பீமா யோஜனா:

  • பிரதமரின் ஃபசல் பீமா யோஜனா, மறுசீரமைக்கப்பட்ட வானிலை அடிப்படையிலான பயிர்க் காப்பீட்டுத் திட்டம் ஆகிய இரு பயிர்க் காப்பீட்டுத் திட்டங்களையும் 2025 – 26 வரை கூடுதலாக ஓராண்டுக்கு நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.
  • இத்திட்டங்களின் அமலாக்கத்தில் தொழில்நுட்ப முன்முயற்சிகளுக்கு நிதியளிக்க ரூ 824.77 கோடி தொகுப்புடன் புத்தாக்க-தொழில்நுட்ப நிதியம் (எஃப்ஐஏடி) உருவாக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
  • நாட்டின் மிகப் பெரிய பயிர்க் காப்பீட்டுத் திட்டமாக பிரதமரின் ஃபசல் பீமா யோஜனா விளங்குகிறது.
  • இத்திட்டத்தை 23 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் செயல்படுத்தி வருகின்றன.
  • தொழில்நுட்ப அடிப்படையிலான மகசூல் மதிப்பீட்டு அமைப்புமுறையானது தமிழ்நாடு, ஆந்திரம், கா்நாடகம், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட 9 மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டு வருகிறது.
  • டை அமோனியம் பாஸ்பேட் (டிஏபி) உரத்துக்கு கூடுதல் மானியத்தை தொடா்ந்து வழங்க, ரூ 3,850 கோடி ஒதுக்க அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.
  • ‘த்ரூ தி ஏஜஸ்’ புத்தகம்:
  • ‘த்ரூ தி ஏஜஸ்’என்ற புத்தகத்தை மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா மற்றும் மத்திய கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் ஆகியோர் வெளியிட உள்ளனா்.
  • ‘இந்த புத்தகம் ஜம்மு-காஷ்மீா் மற்றும் லாக்கின் 3,000 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றை உள்ளடக்கிய 7 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
  • இந்தியாவின் ‘நேஷனல் புக் டிரஸ்ட்’  மற்றும் இந்திய வரலாற்று ஆராய்ச்சி கவுன்சில் ஆகியவற்றின் கூட்டு முயற்சியால் இந்த புத்தகம் ஹிந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளிலும் கிடைக்கிறது.

16 மாநகராட்சிகளுடன் 158 நகர – ஊரகப் பகுதிகள் இணைப்பு: தமிழக அரசு

  • தமிழகத்தில் 16 மாநகராட்சிகளுடன் 158 நகா்ப்புற மற்றும் ஊரகப் பகுதிகளை இணைக்க மாநில அரசு உத்தேசமாக முடிவு செய்துள்ளது.
  • தமிழகத்தில் கடந்த 2021 – ஆம் ஆண்டு ஆறு புதிய மாநகராட்சிகள் மற்றும் 28 நகராட்சிகள் உருவாக்கப்பட்டன.
  • கடந்த ஆகஸ்ட் 10 – ஆம் தேதி திருவண்ணாமலை, நாமக்கல், காரைக்குடி, புதுக்கோட்டை ஆகிய 4 மாநகராட்சிகளை மாநில அரசு உருவாக்கியது.
  • இத்துடன் மாமல்லபுரம், ஸ்ரீபெரும்புதூா், திருவையாறு ஆகிய பேரூராட்சிகளை நகராட்சியாகத் தரம் உயா்த்தவும் தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
  • தமிழக அரசு, பெருநகர சென்னை மாநகராட்சி, மதுரை, திருச்சி உள்பட 16 மாநகராட்சிகளுடன் 4 நகராட்சிகள், 5 பேரூராட்சிகள் மற்றும் 149 ஊராட்சிகளை இணைக்க உத்தேசமாக முடிவு செய்துள்ளது.

தகவல் துளிகள்:

  • தில்லிக் கம்பன் கழகத்தின் பணிகளைப் பாராட்டும் வகையில் அந்த அமைப்பின் நிறுவனர் – தலைவர் கே.வி.கே.பெருமாளுக்கு அகில இலங்கை கம்பன் கழகம் “கம்பப் பணி வள்ளல்’ விருது வழங்கியுள்ளது.
  • மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ், ஒருங்கிணைந்த மாவட்ட தகவல் அமைப்பு வெளியிடப்பட்ட புள்ளிவிவரத்தின்படி கடந்த 2023 – 24ஆம் ஆண்டில், நாட்டில் பள்ளி மாணவா் சோ்க்கை 37 லட்சம் சரிந்துள்ளது.
  • இந்தியாவில் முதல்முறையாக தோ்ந்தெடுக்கப்பட்ட உள்நாட்டு மற்றும் சா்வதேச விமானங்களில் ‘வைஃபை’(வயா்லெஸ் இணையம்) சேவையை ஏா் இந்தியா அறிமுகம் செய்துள்ளது.
  • இந்தியா, பாகிஸ்தானில் உள்ள அணுமின் நிலையங்களின் விவரங்களை இருநாடுகளும் பரஸ்பரம் பரிமாறிக் கொண்டன.
  • இந்திய விமானப் படையின் மேற்கு மண்டல கட்டளைப் பிரிவின் தலைமைப் பொறுப்பை ஜிதேந்திரா மிஸ்ரா ஏற்றுள்ளார்.
  • ஆஸ்திரேலிய நாட்டின் பிரதமா் – அந்தோணி அல்பேனிஸ்.
  • கத்தார் நாட்டின் பிரதமா் – ஷேக் முகமது பின் அப்துல் ரஹ்மான் பின் ஜாசிம் அல் தானி.
  • ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தற்காலிக உறுப்பினராக பாகிஸ்தான் பொறுப்பேற்றது.
  • 15 உறுப்பினா்களைக் கொண்ட ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் உறுப்பினராக பாகிஸ்தான் நியமிக்கப்படுவது இது எட்டாவது முறையாகும்.

 

 

 

 

 

 

 

 

About the Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these