விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி – 60:
- பிஎஸ்எல்வி சி – 60 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் சதீஷ் தவான் வி்ண்வெளி ஆய்வு மைய 2 – வது தளத்தில் இருந்து விண்ணில் பாய்கிறது.
- ஸ்பெடெக்ஸ் திட்டத்துக்காக விண்ணில் செலுத்தப்பட உள்ள பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட்டின் நான்காம் நிலையில் (போயம்-4) 24 ஆய்வுக் கருவிகள் இடம்பெற்றுள்ளன என இஸ்ரோ முன்னதாக தெரிவித்தது.
- அவற்றில் 14 ஆய்வுக் கருவிகள் இஸ்ரோ சார்பில் தயாரிக்கப்பட்டவை என்றும் 10 கருவிகள் கல்வி நிறுவனங்கள், புத்தாக்க நிறுவனங்கள் தயாரித்தவை என்றும் தெரிவித்தது.
- ஸ்பேட் எக்ஸ் திட்டத்தின் ஒரு பகுதியாக ஸ்பேஸ் டாக்கிங் எனப்படும் விண்வெளியில் விண்கலன்களை ஒருங்கிணைக்கும் பணிகள் குறித்த ஆய்வுகளையும் இஸ்ரோ செய்துவந்தது.
- 2035 – ஆம் ஆண்டு விண்வெளி ஆய்வு மையம் அமைக்க இந்திய அரசு திட்டமிட்டுள்ளது.
- இதற்கு முன்னதாக தயாரிப்புத் திட்டமாக ஸ்பேட் எக்ஸ் என்ற திட்டத்தை இஸ்ரோ செயல்படுத்த உள்ளது.
அனைத்து விருதுகள் 2024:
- சிராக் ஷெட்டி மற்றும் சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி ஆகிய இரு பாட்மின்டன் வீரர்களுக்கு கேல் ரத்னா விருதை குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வழங்கினார்.
- ஐசிசியின் 2023 – ஆம் ஆண்டுக்கான சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர் விருது விராட் கோலிக்கு வழங்கப்பட்டது.
- ‘விஷ்ணு வந்தார்’ என்ற சிறுகதைக்காக தமிழகத்தைச் சேர்ந்த லோகேஷ் ரகுராமனுக்கு சாகித்ய அகாதெமியின் யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது.
- நாட்டின் முதலாவது ‘விஞ்ஞான் ரத்னா விருது’ உயிரி வேதியியல் விஞ்ஞானி கோவிந்தராஜன் பத்மநாபனுக்கு வழங்கப்பட்டது.
- தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் குமரி அனந்தனுக்கு 2024 – ஆம் ஆண்டுக்கான தகைசால் தமிழர் விருதை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
- சிறந்த தமிழ் படம் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் 1, இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் (பின்னணி இசை), நடிகை நித்யாமேனன் (திருச்சிற்றம்பலம்) உள்ளிட்டோருக்கு விருது வழங்கப்பட்டது.
- 2023 – ஆம் ஆண்டுக்கான கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது திரைப்பட பாடகர் பி.சுசீலா மற்றும் கவிஞர் மு.மேத்தா ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
- பேராசிரியர் ஆ.இரா.வேங்கடாசலபதியின் ‘திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சி.,யும் 1908’ நூலுக்கு சாகித்ய அகாதெமி விருது வழங்கப்பட்டது.
பிரதமரின் அவசரகால நிதி:
- பிரதமரின் அவசரகால நிதிக்கான (பிஎம் கோ்ஸ் ஃபண்ட்) நன்கொடை ரூ 912 கோடியாக சரிந்துள்ளது.
- கரோனா நோய்த்தொற்று தீவிரமாக இருந்த காலத்தில், பிஎம் கோ்ஸ் நிதித் திட்டத்தை மத்திய அரசு உருவாக்கியது.
- கோவிட்-19 தொற்றுநோயைத் தொடர்ந்து 28 மார்ச் 2020 அன்று பிரதம மந்திரியின் குடிமக்கள் உதவி மற்றும் அவசரகால சூழ்நிலைகளுக்கான நிவாரண நிதி (PM CARES Fund) உருவாக்கப்பட்டது.
- கரோனா போன்ற அவசர அல்லது நெருக்கடியான சூழல்களை எதிா்கொள்ளவும், பாதிக்கப்பட்டவா்களுக்கு நிவாரணம் அளிக்கவும் இந்த நிதித் திட்டம் உருவாக்கப்பட்டது.
- PM-CARES நிதியின் தலைவர் இந்தியப் பிரதமர் ஆவார். உறுப்பினர்களை நியமிக்க பிரதமருக்கு அதிகாரம் உள்ளது.
- PM CARES நிதியின் மற்ற உறுப்பினர்கள் பாதுகாப்பு அமைச்சர், உள்துறை அமைச்சர் மற்றும் நிதி அமைச்சர் ஆவர்.
தகவல் துளிகள்:
- கிழக்கு லடாக்கில் சீனாவுடனான எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதிக்கு அருகே 14,300 அடி உயரத்தில் அமைந்துள்ள பாங்காங் ஏரிக் கரையில் மராட்டிய மன்னா் சத்ரபதி சிவாஜியின் சிலையை இந்திய ராணுவம் நிறுவியுள்ளது.
- லடாக்கின் லேவைத் தளமாகக் கொண்ட ‘14 கார்ப்ஸ்’ராணுவப் படைப் பிரிவின் தளபதி லெஃப்டினன்ட் ஜெனரல் ஹிதேஷ் பல்லா இந்த சிலையை திறந்து வைத்தார்.
- நாட்டிலேயே முதல்முறையாக கல்பாக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள 500 மெகாவாட் மின் உற்பத்திக்கான முதல் உள்நாட்டு விரைவு ஈனுலையை பிரதமர் மோடி மார்ச் 2024 – இல் தொடங்கி வைத்தார்.
- அரசுப் பள்ளிகளில் 6 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை படித்து, உயர்கல்வியில் சேரும் 3 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு மாதம் ரூ 1,000 வழங்கும் திட்டம் ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டம் ஆகும்.
- சிறப்பான சமூகப் பணியாற்றும் மூன்றாம் பாலினத்தவருக்கான 2024 – ஆம் ஆண்டு விருதை கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை ஊராட்சியின் வார்டு உறுப்பினர் சந்தியா தேவிக்கு வழங்கப்பட்டது.
- யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரிய பண்பாட்டுச் சின்னங்களின் பட்டியலில் இடம்பெற விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சிக் கோட்டை பரிந்துரைக்கப்பட்டது.
- நவம்பர் 8 இல் பாம்புக் கடியை அறிவிக்கக் கூடிய நோயாக தமிழக அரசு அறிவித்தது.
- அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து உயர் கல்விக்குச் செல்லும் மாணவிகளுக்கும் ரூ 1,000 வழங்கும் ‘புதுமைப்பெண்’விரிவாக்கத் திட்டத்தை தூத்துக்குடியில் முதல்வா் மு.க.ஸ்டாலின் டிசம்பர் 30 – இல் தொடங்கி வைக்கவுள்ளார்.
- தூத்துக்குடியில் மினி டைடல் பூங்காவை முதல்வர் மு.க.ஸ்டாலின் டிசம்பர் 29 – இல் தொடங்கி வைக்கவுள்ளார்.
- புதுமைப் பெண் திட்டம் 2022 செப்டம்பரில் 5 – இல் தொடங்கப்பட்டது.
- பிரான்ஸின் புதிய பிரதமராக கேப்ரியல் அட்டலை அதிபர் இமானுவல் மேக்ரான் நியமித்தார்.
- நேட்டோ ராணுவக் கூட்டமைப்பில் ஸ்வீடன் இணைத்துக் கொள்ளப்பட்டது.
- புவியின் வெப்பநிலையைப் பதிவு செய்யத் தொடங்கிய 174 ஆண்டுகளில் 2024-ஆம் ஆண்டுதான் மிக அதிக உஷ்ணமான ஆண்டு என்று உலக வானிலை அமைப்பு அறிவித்தது.
- மெக்ஸிகோவின் முதல் பெண் அதிபராக கிளாடியா ஷீன்பாம் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- ஸ்ரீமாவோ பண்டாரநாயகவுக்கு அடுத்தபடியாக இலங்கையின் பெண் பிரதமராக ஹரிணி அமர சூரியா பதவியேற்றார்.
- அவசரநிலை அறிவித்த விவகாரத்தில் தென் கொரிய அதிபர் யூன் சுக் இயோலை நாடாளுமன்றம் பதவிநீக்கம் செய்தது.