தினசரி நடப்பு நிகழ்வுகள் DECEMBER 24
இந்திய வா்த்தக அந்தஸ்து ரத்து: ஸ்விட்சா்லாந்து
- வா்த்தகத்தில் இந்தியாவுக்கு அளிக்கப்பட்ட ‘மிகுந்த விருப்பத்துக்குரிய நாடு’ அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதால், ஐரோப்பிய தடையற்ற வா்த்தக கூட்டமைப்பு (இஎஃப்டிஏ) ஒப்பந்தத்தை அமல்படுத்துவது தாமதமாகாது என்று ஸ்விட்சா்லாந்து தெரிவித்தது.
- கடந்த 1994 – ஆம் ஆண்டு இந்தியா-ஸ்விட்சா்லாந்து இடையே இரட்டை வரி விதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தம் கையொப்பமான நிலையில், அந்த ஒப்பந்தத்தில் 2010 – ஆம் ஆண்டு திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.
- வருமான வரிச் சட்டத்தின் கீழ் அதிகாரபூா்வமாக அறிவிக்கை வெளியிடப்படாமல், இந்த ஒப்பந்தத்தை தானாகவே அமல்படுத்த முடியாது என்று ஸ்விட்சா்லாந்தின் நெஸ்லே நிறுவனம் சம்பந்தப்பட்ட வழக்கு ஒன்றில், கடந்த ஆண்டு உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்தது.
- இதன் காரணமாக நெஸ்லே உள்ளிட்ட ஸ்விட்சா்லாந்து நிறுவனங்கள் தமது லாபத்தில், அந்த நிறுவனங்களின் பங்குதாரா்களுக்கு அளிக்கும் பங்குக்கு இந்தியாவில் அதிக வரி செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.
- இதனால் அதிருப்தி அடைந்த ஸ்விட்சா்லாந்து, வா்த்தகத்தில் ‘மிகுந்த விருப்பத்துக்குரிய நாடு’ என்று இந்தியாவுக்கு அந்தஸ்து அளித்த பிரிவை டிடிஏஏ ஒப்பந்தத்தில் இருந்து அண்மையில் நீக்கியது.
தேசிய மனித உரிமைகள் ஆணையத் தலைவர்: வெ.ராமசுப்ரமணியன்
- தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின், ஒன்பதாவது தலைவராக தமிழகத்தைச் சோ்ந்த, உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி வெ.ராமசுப்ரமணியன் நியமிக்கப்பட்டார்.
- தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக இருந்த முன்னாள் நீதிபதி அருண் குமார் மிஸ்ராவின் பதவிக்காலம் கடந்த ஜூன் 1 – ஆம் தேதி நிறைவடைந்தது.
- தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக தமிழகத்தைச் சோ்ந்த ஒருவா் முதல்முறையாக நியமிக்கப்பட்டுள்ளார்.
தேசிய மனித உரிமைகள் ஆணையம்:
தேசிய மனித உரிமைகள் ஆணையம் கடந்த 1993, அக்டோபா் 12 – ஆம் தேதி நிறுவப்பட்டது.
இந்த அமைப்பின் தலைவராக உச்சநீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற தலைமை நீதிபதிகள் நியமிக்கப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது.
தேசிய மனித உரிமைகள் ஆணையம் (NHRC) என்பது இந்திய குடிமக்களுக்கான மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும் அமைக்கப்பட்ட ஒரு சட்ட அமைப்பு ஆகும்.
மனித உரிமைகள் என்பது ஒவ்வொரு நபரின் வாழ்க்கை, சுதந்திரம், சமத்துவம் மற்றும் கண்ணியம் தொடர்பான உரிமைகளை உள்ளடக்கியது.
NHRC தலைவர் மற்றும் ஐந்து உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.
இந்தியாவின் தலைமை நீதிபதி அல்லது உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக இருந்த ஒரு தலைவர்.
இந்திய உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக இருக்கும் அல்லது இருந்த ஒரு உறுப்பினர் மற்றும் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருக்கும் அல்லது இருந்த ஒரு உறுப்பினர்.
மூன்று உறுப்பினர்கள், அதில் குறைந்தபட்சம் ஒரு பெண்ணாவது மனித உரிமைகள் தொடர்பான விஷயங்களில் அறிவு அல்லது நடைமுறை அனுபவம் உள்ளவர்களில் இருந்து நியமிக்கப்பட வேண்டும்.
இந்திய தலைமை நீதிபதியுடன் கலந்தாலோசித்த பின்னரே உச்ச நீதிமன்றத்தின் தற்போதைய நீதிபதி அல்லது எந்த உயர் நீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதியையும் நியமிக்க முடியும்.
டிசம்பர் 24: தேசிய நுகர்வோர் உரிமைகள் தினம்
இந்தியாவில் 1986 – ஆம் ஆண்டு டிசம்பர் 24 – ஆம் தேதி நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட்டு அமலுக்கு வந்தது.
அதன் அடிப்படையில் தான் ஆண்டுதோறும் டிசம்பர் 24 – ம் தேதி நுகர்வோர் உரிமைகள் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.
நுகர்வோர் உரிமைகளை ஆதரிப்பதில் முக்கிய பங்கு வகித்ததற்காக ரால்ப் ரேடர் நுகர்வோர் இயக்கத்தின் தந்தையாக அங்கீகரிக்கப்படுகிறார்.
1986 – ஆம் ஆண்டின் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் உள்ள உரிமைகளானவை இந்திய அரசியலமைப்பின் சரத்து 14 முதல் 19 வரை குறிப்பிடப்பட்டுள்ள உரிமைகளிலிருந்துப் பெறப்பட்டவை ஆகும்.
உலக நுகர்வோர் உரிமைகள் தினமானது மார்ச் 15 – ஆம் தேதியன்று அனுசரிக்கப் படுகின்றது.
பின்வரும் ஆறு உரிமைகளை நுகர்வோர் கொண்டுள்ளனர்:
பாதுகாப்புக்கான உரிமை, தகவல் அறியும் உரிமை, தேர்ந்தெடுக்கும் உரிமை, கேட்கும் உரிமை, நிவாரணம் பெறும் உரிமை, நுகர்வோர் கல்விக்கான உரிமை போன்ற ஆறு உரிமைகளை நுகர்வோர் கொண்டுள்ளனர்.
தகவல் துளிகள்:
பிரதமர் உயர்கல்வி ஊக்கத் தொகை (பிரதான் மந்திரி உச்சதர் ஷிக்ஷா ப்ரோட்சஹன்) என்ற திட்டத்தின் கீழ் கல்லூரி பயிலும் மாணவர்களுக்கு அதிகபட்சமாக ரூ 82,000 வரை மத்திய அரசு வழங்கி வருகின்றது.
ஏழ்மை காரணமாக ஒரு மாணவர்/மாணவியருக்கு உயர்க் கல்வி மறுக்கப்படுவதை தவிர்க்கும் வகையில் இந்த ஊக்கத்தொகையை மத்திய அரசு வழங்குகிறது.
தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக தமிழகத்தைச் சோ்ந்த, வி.ராமசுப்ரமணியன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தாண்டு பேராசிரியர் அருணனுக்கு உரைநடைக்கான கலைஞர் மு. கருணாநிதி பொற்கிழி விருது வழங்கப்படுகிறது.
கலைராணிக்கு நாடகத்துக்கான கலைஞர் மு. கருணாநிதி பொற்கிழி விருது வழங்கப்படுகிறது.
நாவலுக்கான விருது சுரேஷ் குமார் இந்திரஜித்துக்கும், என். ஸ்ரீராமுக்கு சிறுகதைகளுக்கான விருதும் நெல்லை ஜெயந்தாவுக்கு கவிதைக்கான விருதும், நிர்மால்யாவுக்கு மொழிப்பெயர்ப்புக்கான கலைஞர் மு. கருணாநிதி பொற்கிழி விருதும் வழங்கப்படுகிறது.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஸ்ரீராம் கிருஷ்ணன் அமெரிக்க செய்யறிவு கொள்கை ஆலோசகராக நியமித்துள்ளார் டொனால்ட் டிரம்ப்.
மத்திய பிரதேசத்தில் நடைபெறும் தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பில் ரயில்வேஸ் வீரா் சாஹு துஷார் மனே, ஆடவா் 10 மீட்டா் ஏா் ரைஃபிள் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றார்.