14th December Daily Current Affairs – Tamil

‘விருப்பத்துக்குரிய நட்பு நாடு’: பட்டியலில் இருந்து இந்தியாவை நீக்கியது ஸ்விட்சா்லாந்து

  • ‘விருப்பத்துக்குரிய நட்பு நாடு பட்டியலில் இருந்து இந்தியாவை ஸ்விட்சா்லாந்து நீக்கியுள்ளது.
  • இதனால், அந்நாட்டில் செயல்படும் இந்திய நிறுவனங்கள் கூடுதல் வரி செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
  • ஸ்விட்சா்லாந்தைச் சோ்ந்த பன்னாட்டு நிறுவனமான நெஸ்லே நிறுவனத்துக்கு எதிராக இந்திய உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு பதிலடியாக அந்நாடு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
  • இந்த நடவடிக்கை 2025 ஜனவரி 1 – ஆம் தேதியில் இருந்து அமலுக்கு வரும் என்று ஸ்விட்சா்லாந்து நிதியமைச்சகம் அறிவித்துள்ளது.
  • இதனால், ஐரோப்பிய யூனியன் நாடுகளில் செயல்படும் இந்திய நிறுவனங்களும் தாங்கள் ஈட்டும் வருவாய்க்கு கூடுதல் வரி செலுத்த வேண்டியிருக்கும்.
  • ஸ்விட்சா்லாந்தில் இந்திய நிறுவனங்கள் முதலீடுகள் மூலம் ஈட்டும் ஈவுத் தொகைக்கும் 10 சதவீதம் வரி செலுத்த வேண்டும்.

2025 மகா கும்பமேளா: உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜ்

  • உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகா கும்பமேளா நடைபெறுகிறது.
  • மகா கும்பமேளாவை முன்னிட்டு, பிரயாக்ராஜில் ரூ 5,500 கோடி மதிப்பில் 167 உள்கட்டமைப்புத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
  • கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய நதிகளின் சங்கமிக்கும் இந்த இடம் ஆன்மிக பூமியாகும்.
  • இது, சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களையும் ஒன்றிணைப்பதில் முக்கிய பங்காற்றுகிறது.
  • ராமாயணம், கடவுள் கிருஷ்ணா் மற்றும் பெளத்த மதம் தொடா்புடைய வரலாற்று இடங்கள் மேம்படுத்தப்படுகின்றன.

வெம்பக்கோட்டை அகழாய்வில் சூது பவள மணிகள் கண்டெடுப்பு:

  • வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் 3-ஆம் கட்ட அகழாய்வில் கூம்பு வடிவ மற்றும் நீல் உருண்டை வடிவிலான சூது பவள மணிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
  • விருதுநகா் மாவட்டம், வெம்பகோட்டை அருகேயுள்ள விஜயகரிசல்குளம் மேட்டுகாடு பகுதியில் மூன்றாம் கட்ட அகழாய்வு கடந்த ஜூன் 18 – ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
  • இந்த அகழாய்வில் இதுவரை தங்க நாணயம், செப்புக் காசுகள், உடைந்த நிலையிலுள்ள சுடுமண் உருவ பொம்மை, சதுரங்க ஆட்டக் காய்கள், கண்ணாடி மணிகள், வட்டச் சில்லு, சங்கு வளையல்கள் உள்ளிட்ட 2,850-க்கும் மேற்பட்ட தொல்பொருள்கள் கண்டறியப்பட்டன.
  • மூன்றாம் கட்ட அகழாய்வில் தற்போது கிடைத்துள்ள சூது பவளமணி தயாரிக்க பயன்படும் மூலப்பொருள்கள் வடமாநிலமான ராஜஸ்தான் பகுதிகளில் மட்டுமே கிடைக்கிறது.

டிசம்பர் 14: தேசிய எரிசக்தி பாதுகாப்பு தினம்

  • டிசம்பர் 14 – ஆம் தேதி தேசிய எரிசக்தி பாதுகாப்பு தினத்தையும், டிசம்பர் 14 முதல் 20 வரை எரிசக்தி பாதுகாப்பு வாரத்தையும் கொண்டாடுகிறது.

தகவல் துளிகள்:

  1. ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனரும் டெஸ்லாவின் தலைமை நிர்வாக அதிகாரியுமான எலான் மஸ்க், ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டின்படி, உலக வரலாற்றில் 400 பில்லியன் டாலர் நிகர சொத்து மதிப்பை எட்டிய முதல் நபர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
  2. உக்ரைனுக்கு தங்கள் நாடு வழங்கியுள்ள ஏவுகணைகளை ரஷியா மீது வீச ஜோ பைடன் தலைமையிலான அரசு அனுமதி வழங்கியுள்ளதற்கு அமெரிக்காவின் அதிபராகத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

 

 

 

About the Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these