‘விருப்பத்துக்குரிய நட்பு நாடு’: பட்டியலில் இருந்து இந்தியாவை நீக்கியது ஸ்விட்சா்லாந்து
- ‘விருப்பத்துக்குரிய நட்பு நாடு பட்டியலில் இருந்து இந்தியாவை ஸ்விட்சா்லாந்து நீக்கியுள்ளது.
- இதனால், அந்நாட்டில் செயல்படும் இந்திய நிறுவனங்கள் கூடுதல் வரி செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
- ஸ்விட்சா்லாந்தைச் சோ்ந்த பன்னாட்டு நிறுவனமான நெஸ்லே நிறுவனத்துக்கு எதிராக இந்திய உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு பதிலடியாக அந்நாடு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
- இந்த நடவடிக்கை 2025 ஜனவரி 1 – ஆம் தேதியில் இருந்து அமலுக்கு வரும் என்று ஸ்விட்சா்லாந்து நிதியமைச்சகம் அறிவித்துள்ளது.
- இதனால், ஐரோப்பிய யூனியன் நாடுகளில் செயல்படும் இந்திய நிறுவனங்களும் தாங்கள் ஈட்டும் வருவாய்க்கு கூடுதல் வரி செலுத்த வேண்டியிருக்கும்.
- ஸ்விட்சா்லாந்தில் இந்திய நிறுவனங்கள் முதலீடுகள் மூலம் ஈட்டும் ஈவுத் தொகைக்கும் 10 சதவீதம் வரி செலுத்த வேண்டும்.
2025 மகா கும்பமேளா: உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜ்
- உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகா கும்பமேளா நடைபெறுகிறது.
- மகா கும்பமேளாவை முன்னிட்டு, பிரயாக்ராஜில் ரூ 5,500 கோடி மதிப்பில் 167 உள்கட்டமைப்புத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
- கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய நதிகளின் சங்கமிக்கும் இந்த இடம் ஆன்மிக பூமியாகும்.
- இது, சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களையும் ஒன்றிணைப்பதில் முக்கிய பங்காற்றுகிறது.
- ராமாயணம், கடவுள் கிருஷ்ணா் மற்றும் பெளத்த மதம் தொடா்புடைய வரலாற்று இடங்கள் மேம்படுத்தப்படுகின்றன.
வெம்பக்கோட்டை அகழாய்வில் சூது பவள மணிகள் கண்டெடுப்பு:
- வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் 3-ஆம் கட்ட அகழாய்வில் கூம்பு வடிவ மற்றும் நீல் உருண்டை வடிவிலான சூது பவள மணிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
- விருதுநகா் மாவட்டம், வெம்பகோட்டை அருகேயுள்ள விஜயகரிசல்குளம் மேட்டுகாடு பகுதியில் மூன்றாம் கட்ட அகழாய்வு கடந்த ஜூன் 18 – ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
- இந்த அகழாய்வில் இதுவரை தங்க நாணயம், செப்புக் காசுகள், உடைந்த நிலையிலுள்ள சுடுமண் உருவ பொம்மை, சதுரங்க ஆட்டக் காய்கள், கண்ணாடி மணிகள், வட்டச் சில்லு, சங்கு வளையல்கள் உள்ளிட்ட 2,850-க்கும் மேற்பட்ட தொல்பொருள்கள் கண்டறியப்பட்டன.
- மூன்றாம் கட்ட அகழாய்வில் தற்போது கிடைத்துள்ள சூது பவளமணி தயாரிக்க பயன்படும் மூலப்பொருள்கள் வடமாநிலமான ராஜஸ்தான் பகுதிகளில் மட்டுமே கிடைக்கிறது.
டிசம்பர் 14: தேசிய எரிசக்தி பாதுகாப்பு தினம்
- டிசம்பர் 14 – ஆம் தேதி தேசிய எரிசக்தி பாதுகாப்பு தினத்தையும், டிசம்பர் 14 முதல் 20 வரை எரிசக்தி பாதுகாப்பு வாரத்தையும் கொண்டாடுகிறது.
தகவல் துளிகள்:
- ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனரும் டெஸ்லாவின் தலைமை நிர்வாக அதிகாரியுமான எலான் மஸ்க், ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டின்படி, உலக வரலாற்றில் 400 பில்லியன் டாலர் நிகர சொத்து மதிப்பை எட்டிய முதல் நபர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
- உக்ரைனுக்கு தங்கள் நாடு வழங்கியுள்ள ஏவுகணைகளை ரஷியா மீது வீச ஜோ பைடன் தலைமையிலான அரசு அனுமதி வழங்கியுள்ளதற்கு அமெரிக்காவின் அதிபராகத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.