ரூ 13,500 கோடியில் 12 சுகோய் விமானங்கள்: பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம்
- இந்திய விமானப் படைக்கு ரூ 13,500 கோடி மதிப்பீட்டில் 12 சுகோய் போர் விமானங்களை வாங்க ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனத்துடன் பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டது.
- ‘இந்தியஅரசின் ‘தன்னிறைவு பாரதம்’முன்னெடுப்பின் பகுதியாக ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனத்திடம் இருந்து வாங்குவதற்கான ஒப்பந்தம் கையொப்பானது.
- 6 சதவீத உள்நாட்டு உபகரணங்களைக் கொண்டிருக்கும் இந்த விமானங்கள், எச்ஏஎல் நிறுவனத்தின் நாசிக் தொழிற்சாலையில் தயாரிக்கப்படும்.
ஒரே நாடு ஒரே தோ்தல் திட்டம்:
- ஒரே தேசம், ஒரே தேர்தல் என்பது இந்திய அரசின் பரிசீலனையில் உள்ள ஒரு முன்மொழிவாக நாட்டில் உள்ள அனைத்து தேர்தல்களையும் ஒரே நாளில் அல்லது ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் நடத்த வேண்டும்.
- 28 மாநிலங்கள் மற்றும் 8 யூனியன் பிரதேசங்களின் லோக்சபா மற்றும் மாநில சட்டப் பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல்களை நடத்துவது அதன் குறிப்பிடத்தக்க திட்டங்களில் ஒன்றாகும்.
- 2 செப்டம்பர் 2023 அன்று, ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து ஆய்வு செய்ய உயர்மட்டக் குழுவை அமைக்கும் அறிவிப்பை இந்திய அரசு வெளியிட்டது.
- ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டத்துக்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்ந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர்மட்டக் குழு சமர்ப்பித்த அறிக்கையை, மத்திய அமைச்சரவை ஏற்றுக்கொண்டது.
- ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டத்துக்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்ந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர்மட்டக் குழு, தனது அறிக்கையை கடந்த மார்ச் மாதம் சமர்ப்பித்தது.
- ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டத்துக்கான உயர்மட்டக் குழு, 18 அரசியலமைப்பு திருத்தங்களை பரிந்துரைத்தது.
பேரிடா் மேலாண்மை மசோதா:
- 2005 – ஆம் ஆண்டு பேரிடா் மேலாண்மை சட்டத்தை செயல்படுத்துவதில் மாநிலங்கள் பல்வேறு சவால்களை எதிர்கொண்டதால், பேரிடா் தயார்நிலையை மேம்படுத்தும் நோக்கில் பல திருத்தங்களுடன் இந்த புதிய மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்தது, மக்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது.
- டிசம்பர் 23, 2005 அன்று இந்திய அரசாங்கத்தால் இயற்றப்பட்ட பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் மூலம் NDMA நிறுவப்பட்டது.
- மாநில பேரிடர் மேலாண்மை அதிகாரிகளுடன் ஒருங்கிணைப்பதற்கான கொள்கைகளை உருவாக்குதல், வழிகாட்டுதல்கள் மற்றும் சிறந்த நடைமுறைகளை வகுத்தல் ஆகியவற்றிற்கு பொறுப்பாகும்.
- 23 டிசம்பர் 2005 அன்று, இந்திய அரசு, பேரிடர் மேலாண்மை சட்டம் இயற்றியது. இதன் அடிப்படையில், பிரதமர் தலைமையில் தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது.
- மாநில, மாவட்ட மற்றும் ஊரக அளவில் பேரிடர் மேலாண்மை பணிகளை திறம்பட மேற்கொள்ள வரையறுக்கப்பட்ட அமைப்பு மற்றும் ஒருங்கிணைப்பு வழிமுறைகள் குறித்து பேரிடர் மேலாண்மை சட்டம், 2005 வழங்குகிறது.
தகவல் துளிகள்:
- தில்லியில் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ 1,000 உதவித் தொகை வழங்குவதற்காக முக்ய மந்திரி மகிளா சம்மான் யோஜனாவைத் தொடங்கி வைத்தார்.
- 16 – ஆவது நிதிக்குழு தலைவா் அரவிந்த் பனகாரியா.
- தில்லியில் இந்திய தொழிலக கூட்டமைப்பு சார்பில் சா்வதேச பொருளாதாரக் கொள்கை மாநாடு நடைபெற்றது.
- நேபாள ராணுவ தலைமை தளபதி அசோக் ராஜ் சிக்டெலுக்கு ‘இந்திய ராணுவ ஜெனரல்’கௌரவ பதவியை குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு வழங்கினார்.
- இந்திய ராணுவ தலைமை தளபதி உபேந்திர துவிவேதி.
- உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் நடப்பு சாம்பியனான டிங் லிரெனை 58 – வது நகர்த்தலில் குகேஷ் வீழ்த்தினார்.
- 2034 – ஆம் ஆண்டுக்கான கால்பந்து உலகக் கோப்பை போட்டிகள் சௌதி அரேபியாவிலும் 2030 – ஆம் ஆண்டுக்கான உலகக் கோப்பை போட்டிகள் தென் அமெரிக்காவிலும் நடைபெறுமென ஃபிபா அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.