இந்திய சா்வதேச திரைப்பட விழா:
- கோவாவில் நவம்பா் 20 முதல் 28 வரை இந்திய சா்வதேச திரைப்பட விழா நடைபெறவுள்ளது.
- 55 – ஆவது இந்திய சா்வதேச திரைப்பட விழாவில் ஒரு புதிய விருது பிரிவு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
- திறமையான புதிய, இளம் திரைப்பட இயக்குநா்களை ஊக்குவிக்கும் நோக்கில் சிறந்த அறிமுக இயக்குநா் பிரிவில் மணிப்பூரி, மராத்தி உள்ளிட்ட 5 திரைப்பட இயக்குநா்களை 55 – ஆவது இந்திய சா்வதேச திரைப்பட விழாவிற்கு தோ்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- இந்திய சா்வதேச திரைப்பட விழாவில் புதிதாக இந்த விருது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பிரிஸ்பேனில் புதிய இந்திய துணைத் தூதரகம்:
- ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லேண்ட் மாகாணத் தலைநகர் பிரிஸ்பேனில் புதிய இந்திய துணைத் தூதரகத்தை வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் திறந்து வைத்தார்.
- இது குயின்ஸ்லேண்ட் மாகாணத்துடனான இந்தியாவின் வா்த்தகம், கல்வி மற்றும் பிற உறவுகளை வலுப்படுத்த வழிவகுக்கும்.
- இது ஆஸ்திரேலியாவில் திறக்கப்பட்டுள்ள நான்காவது இந்திய துணைத் தூதரகமாகும்.
- ஏற்கெனவே சிட்னி, மெல்போர்ன் மற்றும் பொ்த் ஆகிய நகரங்களில் இந்திய துணைத் தூதரகங்கள் அமைந்துள்ளன.
- பிரிஸ்பேனில் உள்ள ரோமா ஸ்ட்ரீட் பார்க்ஸ்லாண்டில் மகாத்மா காந்தியின் திருவுருவச் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
‘மெட்ராஸ் – ஐ’:
- பருவநிலை மாற்றம் காரணமாக ‘மெட்ராஸ் – ஐ’எனப்படும் கண் தொற்று நோய் பாதிப்பு தற்போது பரவி வருகிறது.
- விழியையும் இமையையும் இணைக்கும் ஜவ்வு படலத்தில் ஏற்படும் தீநுண்மி தொற்றுதான் ‘மெட்ராஸ் – ஐ’எனக் கூறப்படுகிறது.
- இது பருவநிலை மாறுபாட்டால் வரும் வைரஸ் மற்றும் பாக்டீரியாவால் வரக் கூடியது.
- இந்த நோய் முதலில் 1918 – ஆம் ஆண்டு சென்னையில் முதலில் கண்டறியப்பட்டதால் மெட்ராஸ் ஐ என அழைக்கப்படுகிறது.
- இந்த வைரஸுக்கு பெயர் entro virus, Adino virus ஆகும்.
2025 ஜனவரி முதல் முதல்வர் மருந்தகம்:
- முதல்வர் மருந்தகங்கள் வரும் 2025 ஜனவரி மாதம் முதல் மக்கள் பயன்பாட்டிற்கு வரவுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
- முதல்வர் மு.க.ஸ்டாலின் “பொதுப்பெயர் (ஜெனரிக்) மருந்துகளையும் பிற மருந்துகளையும் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு கிடைக்கச் செய்யும் வகையில் முதற்கட்டமாக 1000 முதல்வர் மருந்தகங்கள் துவங்கப்படும் என்று அறிவித்தார்.
- மருத்துவம் சார்ந்த இதர மருத்துவ உபகரணங்கள், சித்தா, ஆயுர்வேதம், இம்காப்ஸ், டாம்கால் மற்றும் யுனானி மருந்துகள், சர்ஜிக்கல்ஸ் மற்றும் நியூட்ராசூட்டிக்கல்ஸ் உள்ளிட்ட மருந்து வகைகள் தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணையத்தால் கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்படும்.
நவம்பர் 5: உலக சுனாமி விழிப்புணர்வு தினம்
- உலக சுனாமி விழிப்புணர்வு தினம் நவம்பர் 5 – ஆம் தேதி சுனாமியின் ஆபத்துகளை முன்னிலைப்படுத்தவும், இயற்கை பேரழிவுகளால் ஏற்படும் சேதங்களைக் குறைப்பதில் முன்கூட்டியே எச்சரிக்கை அமைப்புகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தவும் அனுசரிக்கப்படுகிறது.
- இந்த ஆண்டுக்கான உலக சுனாமி விழிப்புணர்வு தினம் 2024 – ன் கருப்பொருள்: “ஒவ்வொரு சுனாமிக்கும் முன் முன்கூட்டியே எச்சரிக்கை மற்றும் ஆரம்ப நடவடிக்கை” என்பதாகும்.
- இந்த ஆண்டின் கருப்பொருள், உயிர்களைக் காப்பாற்றுவதற்கும் சுனாமியின் தாக்கத்தைக் குறைப்பதற்கும் பயனுள்ள முன்னறிவிப்பு அமைப்புகளைக் கொண்டிருப்பதன் முக்கியத்துவத்தை மையமாகக் கொண்டுள்ளது.
தகவல் துளிகள்:
- ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேச சட்டப் பேரவையின் முதலாவது தலைவராக அப்துல் ரஹீம் ராதா் தோ்வு செய்யப்பட்டார்.
- ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து மத்திய அரசால் கடந்த 2019 – ஆம் ஆண்டு ரத்து செய்யப்பட்டு ஜம்மு-காஷ்மீா், லடாக் ஆகிய இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது.
- சென்னை, காமராஜா் துறைமுகங்களில் உள்கட்டமைப்பை வலுப்படுத்தவும், வா்த்தக நடவடிக்கைகளை துரிதப்படுத்தவும், பசுமைத் துறைமுகமாக மாற்றவும் ரூ 187 கோடி மதிப்பீட்டிலான திட்டப் பணிகளை மத்திய துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சா் சா்பானந்த சோனோவால் தொடங்கி வைத்தார்.
- போர்க் கப்பலில் இருந்து 350 கி.மீ தூரம் வரை சென்று தாக்கும் வகையில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஏவுகணையை பாகிஸ்தான் கடற்படை சோதித்துள்ளது.
- மகளிர் டென்னிஸில் ஆண்டு இறுதியில் நடைபெறும் போட்டியான டபிள்யூடிஏ ஃபைனல்ஸில், சீனாவின் ஜெங் கின்வென் – கஜகஸ்தானின் எலனா ரைபகினாவை தோற்கடித்தார்.