5th November Daily Current Affairs – Tamil

இந்திய சா்வதேச திரைப்பட விழா:

  • கோவாவில் நவம்பா் 20 முதல் 28 வரை இந்திய சா்வதேச திரைப்பட விழா நடைபெறவுள்ளது.
  • 55 – ஆவது இந்திய சா்வதேச திரைப்பட விழாவில் ஒரு புதிய விருது பிரிவு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
  • திறமையான புதிய, இளம் திரைப்பட இயக்குநா்களை ஊக்குவிக்கும் நோக்கில் சிறந்த அறிமுக இயக்குநா் பிரிவில் மணிப்பூரி, மராத்தி உள்ளிட்ட 5 திரைப்பட இயக்குநா்களை 55 – ஆவது இந்திய சா்வதேச திரைப்பட விழாவிற்கு தோ்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
  • இந்திய சா்வதேச திரைப்பட விழாவில் புதிதாக இந்த விருது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பிரிஸ்பேனில் புதிய இந்திய துணைத் தூதரகம்:

  • ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லேண்ட் மாகாணத் தலைநகர் பிரிஸ்பேனில் புதிய இந்திய துணைத் தூதரகத்தை வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் திறந்து வைத்தார்.
  • இது குயின்ஸ்லேண்ட் மாகாணத்துடனான இந்தியாவின் வா்த்தகம், கல்வி மற்றும் பிற உறவுகளை வலுப்படுத்த வழிவகுக்கும்.
  • இது ஆஸ்திரேலியாவில் திறக்கப்பட்டுள்ள நான்காவது இந்திய துணைத் தூதரகமாகும்.
  • ஏற்கெனவே சிட்னி, மெல்போர்ன் மற்றும் பொ்த் ஆகிய நகரங்களில் இந்திய துணைத் தூதரகங்கள் அமைந்துள்ளன.
  • பிரிஸ்பேனில் உள்ள ரோமா ஸ்ட்ரீட் பார்க்ஸ்லாண்டில் மகாத்மா காந்தியின் திருவுருவச் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

 ‘மெட்ராஸ் – ஐ:

  • பருவநிலை மாற்றம் காரணமாக ‘மெட்ராஸ் – ஐ’எனப்படும் கண் தொற்று நோய் பாதிப்பு தற்போது பரவி வருகிறது.
  • விழியையும் இமையையும் இணைக்கும் ஜவ்வு படலத்தில் ஏற்படும் தீநுண்மி தொற்றுதான் ‘மெட்ராஸ் – ஐ’எனக் கூறப்படுகிறது.
  • இது பருவநிலை மாறுபாட்டால் வரும் வைரஸ் மற்றும் பாக்டீரியாவால் வரக் கூடியது.
  • இந்த நோய் முதலில் 1918 – ஆம் ஆண்டு சென்னையில் முதலில் கண்டறியப்பட்டதால் மெட்ராஸ் ஐ என அழைக்கப்படுகிறது.
  • இந்த வைரஸுக்கு பெயர் entro virus, Adino virus ஆகும்.

2025 ஜனவரி முதல் முதல்வர் மருந்தகம்:

  • முதல்வர் மருந்தகங்கள் வரும் 2025 ஜனவரி மாதம் முதல் மக்கள் பயன்பாட்டிற்கு வரவுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
  • முதல்வர் மு.க.ஸ்டாலின் “பொதுப்பெயர் (ஜெனரிக்) மருந்துகளையும் பிற மருந்துகளையும் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு கிடைக்கச் செய்யும் வகையில் முதற்கட்டமாக 1000 முதல்வர் மருந்தகங்கள் துவங்கப்படும் என்று அறிவித்தார்.
  • மருத்துவம் சார்ந்த இதர மருத்துவ உபகரணங்கள், சித்தா, ஆயுர்வேதம், இம்காப்ஸ், டாம்கால் மற்றும் யுனானி மருந்துகள், சர்ஜிக்கல்ஸ் மற்றும் நியூட்ராசூட்டிக்கல்ஸ் உள்ளிட்ட மருந்து வகைகள் தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணையத்தால் கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்படும்.

நவம்பர் 5: உலக சுனாமி விழிப்புணர்வு தினம்

  • உலக சுனாமி விழிப்புணர்வு தினம் நவம்பர் 5 – ஆம் தேதி சுனாமியின் ஆபத்துகளை முன்னிலைப்படுத்தவும், இயற்கை பேரழிவுகளால் ஏற்படும் சேதங்களைக் குறைப்பதில் முன்கூட்டியே எச்சரிக்கை அமைப்புகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தவும் அனுசரிக்கப்படுகிறது.
  • இந்த ஆண்டுக்கான உலக சுனாமி விழிப்புணர்வு தினம் 2024 – ன் கருப்பொருள்: “ஒவ்வொரு சுனாமிக்கும் முன் முன்கூட்டியே எச்சரிக்கை மற்றும் ஆரம்ப நடவடிக்கை” என்பதாகும்.
  • இந்த ஆண்டின் கருப்பொருள், உயிர்களைக் காப்பாற்றுவதற்கும் சுனாமியின் தாக்கத்தைக் குறைப்பதற்கும் பயனுள்ள முன்னறிவிப்பு அமைப்புகளைக் கொண்டிருப்பதன் முக்கியத்துவத்தை மையமாகக் கொண்டுள்ளது.

தகவல் துளிகள்:

  1. ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேச சட்டப் பேரவையின் முதலாவது தலைவராக அப்துல் ரஹீம் ராதா் தோ்வு செய்யப்பட்டார்.
  2. ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து மத்திய அரசால் கடந்த 2019 – ஆம் ஆண்டு ரத்து செய்யப்பட்டு ஜம்மு-காஷ்மீா், லடாக் ஆகிய இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது.
  3. சென்னை, காமராஜா் துறைமுகங்களில் உள்கட்டமைப்பை வலுப்படுத்தவும், வா்த்தக நடவடிக்கைகளை துரிதப்படுத்தவும், பசுமைத் துறைமுகமாக மாற்றவும் ரூ 187 கோடி மதிப்பீட்டிலான திட்டப் பணிகளை மத்திய துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சா் சா்பானந்த சோனோவால் தொடங்கி வைத்தார்.
  4. போர்க் கப்பலில் இருந்து 350 கி.மீ தூரம் வரை சென்று தாக்கும் வகையில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஏவுகணையை பாகிஸ்தான் கடற்படை சோதித்துள்ளது.
  5. மகளிர் டென்னிஸில் ஆண்டு இறுதியில் நடைபெறும் போட்டியான டபிள்யூடிஏ ஃபைனல்ஸில், சீனாவின் ஜெங் கின்வென் – கஜகஸ்தானின் எலனா ரைபகினாவை தோற்கடித்தார்.

 

 

 

 

About the Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these