புணே விமான நிலையத்தின் பெயர் மாற்றம்:
- மகாராஷ்டிரத்தின் புணே சர்வதேச விமான நிலையத்தின் பெயரை ஜகத்குரு சந்த்ஸ்ரேஸ்தா துக்காராம் மஹாராஜ் புணே சர்வதேச விமான நிலையம் என மாற்றுவதற்கு, மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
- 17 – வது நூற்றாண்டைச் சேர்ந்த துறவி துக்காராம் மஹாராஜ்ஜை சிறப்பிக்கும் வகையில் புணே விமான நிலையத்துக்கு அவரது பெயரைச் சூட்டி மகாராஷ்டிர அரசு கெளரவித்துள்ளது.
- துக்காராம் பக்தி இயக்கத்தின் மீது அதிக ஈடுபாடு கொண்டவர்.
பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி (PM-KISAN):
- சிறு மற்றும் குறு விவசாயிகளின் (SMFs) நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கில், விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய நடவடிக்கைகள் மற்றும் வீட்டுத் தேவைகள் தொடர்பான செலவுகளை அவர்கள் கவனித்துக் கொள்ள உதவும் நோக்கத்துடன் இந்தத் திட்டம் 24 பிப்ரவரி 2019 அன்று தொடங்கப்பட்டது.
- பிரதமரின் விவசாயிகள் கொடைநிதி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு இடுபொருள்கள் வாங்க ரூ.2 ஆயிரம் வீதம் மூன்று தவணைகளில் ஆண்டுக்கு ரூ 6 ஆயிரம் வழங்கப்படுகிறது.
ஐ.நா.சபை 79 – வது பொதுச் சபைக் கூட்டம்:
- ஐக்கிய நாடுகள் அவையில் 79 – வது பொதுச் சபைக் கூட்டம் நடைபெற்றது.
- ஐக்கிய நாடுகள் அமைப்பு என்பது உலக அமைதி மற்றும் பாதுகாப்பைப் பேணுதல், நாடுகளுக்கிடையே நட்புறவு உறவுகளை வளர்த்தல், பன்னாட்டு ஒத்துழைப்பைப் பேணல், நாடுகளின் நடவடிக்கைகளை ஒத்திசைப்பதற்கான மையமாக இருத்தல் ஆகிய நோக்கங்களைக் கொண்ட அரசுகளுக்கிடையேயான ஓர் அமைப்பாகும்.
- ஐநா அமைப்பு இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு எதிர்காலப் போர்களைத் தடுக்கும் நோக்கத்துடன் நிறுவப்பட்டது.
- ஐநா அமைப்பு 1945 சூன் 25 அன்று ஏற்றுக்கொள்ளப்பட்டு, 1945 அக்டோபர் 24 இல் நடைமுறைக்கு வந்தது.
- ஐ. நா. வின் தலைமையகம் நியூ யார்க் நகரத்தில் உள்ளது, இதன் முக்கிய அலுவலகங்கள் செனீவா, நைரோபி, வியென்னா, டென் ஹாக் ஆகிய இடங்களில் உள்ளன.
24 செப்டம்பர்: உலக நதிகள் தினம்
- சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் நதிகளின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஆண்டுதோறும் செப்டம்பர் நான்காவது ஞாயிற்றுக்கிழமை ‘உலக நதிகள் தினம்’ அனுசரிக்கப்படுகிறது.
24 செப்டம்பர்: உலக கடல்சார் தினம்
- கடல்சார் தொழிலின் முக்கியத்துவத்தைப் பாராட்டுவதும், கடல்சார் பாதுகாப்பு, கடல் சூழல், பாதுகாப்பு மற்றும் கப்பல் போக்குவரத்து ஆகியவற்றின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுவதும் உலக கடல்சார் தினத்தின் நோக்கமாகும்.
தகவல் துளிகள்:
- அடுத்த ஆண்டு நடைபெறும் 97 – ஆவது ஆஸ்கா் விருதுக்கு சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான பிரிவில் இந்தியாவின் அதிகாரபூா்வ நுழைவாக ‘லாபதா லேடீஸ்’ திரைப்படம் தோ்வாகியுள்ளது.
- இந்தியாவில் இணைய சேவையை பயன்படுத்துவோர் எண்ணிக்கை 95 கோடி உயர்ந்துள்ளதாக மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்தார்.
- நடப்பாண்டுக்கான மிஸ் யுனிவர்ஸ் இந்தியா போட்டி ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் நேற்று நடைபெற்றது,
- மிஸ் யுனிவர்ஸ் இந்தியா அழகி பட்டத்தை குஜராத்தைச் சேர்ந்த ரியா சிங்ஹா வென்றுள்ளார்.
- அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக எல்சிவியா் தரவரிசைப் பட்டியலில் திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தைச் சோ்ந்த 5 பேராசிரியா்கள் இடம்பெற்றுள்ளனர்.
- தஞ்சாவூா், சேலத்தில் அமைக்கப்பட்டுள்ள மினி டைடல் பூங்காக்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
- இரு ரஷிய விணவெளி வீரா்கள், ஒரு அமெரிக்க விண்வெளி வீரருடன் சா்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து ரஷியாவின் சோயுஸ் விண்கலம் பூமிக்குத் திரும்பியது.
- இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கும் க்வாட் கூட்டமைப்பின் 4-ஆவது உச்சி மாநாடு, அமெரிக்காவின் டெலாவா் மாகாணத்தின் வில்மிங்டன் நகரில் நடைபெற்றது.