20th September Daily Current Affairs – Tamil

யுபிஐ பணப்பரிமாற்ற முறை: இந்தியா

  • உலகின் மின்னணுப் பணப்பரிமாற்றத்தில் 40 சதவீதம் இந்தியாவில்தான் நடைபெறுகிறது.
  • யுபிஐ வழியிலான பணப்பரிமாற்ற முறை கடந்த 2016 – ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
  • பூடான், பிரான்ஸ், மோரீஷஸ், நேபாளம், சிங்கப்பூா், இலங்கை, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 7 நாடுகளிலும் யுபிஐ பணப் பரிவா்த்தனை முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
  • வரி செலுத்துதல், பங்குச் சந்தை முதலீடு உள்ளிட்டவற்றுக்கான யுபிஐ பணப்பரிவர்த்தனை உச்சவரம்பு ரூ 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இது நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
  • பங்குச் சந்தை முதலீடு, காப்பீட்டு பிரீமியம் உள்ளிட்ட சிலவற்றுக்கு இந்த வரம்பு ரூ 2 லட்சமாக உள்ளது.

எஸ்யு-30 போர் விமானங்கள்: அர்மீனியா

  • எஸ்யு – 30 ரக போர் விமானங்களை மேம்படுத்துவதற்காக இந்தியாவின் உதவியை அர்மீனியா நாடியுள்ளது.
  • எஸ்யு ரக போர் விமானங்களை ரஷ்யா தயாரித்து பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது.
  • இந்த எஸ்யு ரக போர் விமானங்கள் இந்தியா, அர்மீனியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் வாங்கி தங்களது விமானப் படையில் இணைத்துள்ளன.
  • எஸ்யு – 30 ரக போர் விமானத்தில் இணைப்பதற்காக ராக்கெட் சிஸ்டம், ஆர்டிலரி கன், ஆயுதங்களை கண்டறியும் ரேடார்கள்போன்ற கருவிகளை இந்தியா தயாரித்து தனது எஸ்யு-ரக போர் விமானங்களில் பயன்படுத்துகிறது.

செப்டம்பர் 20: பல்கலைக் கழக விளையாட்டுகளுக்கான சர்வதேச தினம்

  • பல்கலைக்கழக விளையாட்டுகளுக்காக சர்வதேச அளவில் ஒரு தினத்தை அனுசரிப்பதற்காக 2015 ஆம் ஆண்டில் சர்வதேச பல்கலைக்கழக விளையாட்டுகள் மன்றமானது (FISU – International University Sports Federation) யுனெஸ்கோவிற்கு ஒரு பரிந்துரை செய்தது.

தகவல் துளிகள்:

  1. கர்நாடகத்தில் மாதவிடாய் விடுமுறை குறித்து ஆய்வு செய்ய மருத்துவர் சப்னா முகர்ஜி தலைமையில் மாநில அரசு குழு அமைத்தது.
  2. கர்நாடகத்தில் உள்ள தனியார், பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களுக்கு ஊதியத்துடன் 6 நாள்கள் மாதவிடாய் விடுமுறை அளிக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது.
  3. நாட்டில் முதல்முறையாக குஜராத்தின் அகமதாபாத் – புஜ் நகரங்களுக்கு இடையே ‘நமோ பாரத் ரேபிட் ரயில்’ சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
  4. மூன்றாவது ‘உலக உணவு இந்தியா’ மாநாடு தில்லியில் நடைபெறுகிறது.
  5. மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் நகரம் தொடர்ந்து ஏழாவது முறையாகத் தூய்மைக் கணக்கெடுப்பில் முதலிடத்தில் உள்ளதாகவும், போபால் நாட்டிலேயே தூய்மையான மாநிலத் தலைநகராக உள்ளது.
  6. தூய்மை இந்தியா இயக்கம் (Swachh Bharat Abhiyan) என்பது 2014 ஆம் ஆண்டு இந்திய அரசால் திறந்த வெளியில் மலம் கழிப்பதை ஒழிக்கவும் திடக்கழிவு மேலாண்மையை மேம்படுத்தவும் நாடு தழுவிய பிரச்சாரமாகும்.
  7. சீனாவின் ஹுலுன்பியர் நகரில் செப்டம்பர் 8 – ஆம் தேதி தொடங்கி நடைபெற்றது, இதில் இந்திய அணி சீனாவை வீழ்த்தி 5 – வது முறையாக ஆசிய சாம்பியன்ஸ் கோப்பையை வென்றது.

About the Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these