12th August Daily Current Affairs – Tamil

 

3 நாடுகள் சுற்றுப்பயணம்: குடியரசுத் தலைவர்

  • ஃபிஜி, நியூசிலாந்து மற்றும் டிமோர்-லெஸ்டே ஆகிய 3 நாடுகளுக்கு அரசுமுறைப் பயணமாக சென்றிருந்தார் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு.
  • டிமோர்-லெஸ்டே நாட்டுடனான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது தொடா்பாக அந்த நாட்டு அதிபா் ராமோஸ்-ஹோர்டாவை சந்தித்து குடியரசுத் தலைவா் ஆலோசனை நடத்தினார்.
  • டிமோர்-லெஸ்டே நாட்டின் உயரிய விருதான ‘கிராண்ட் காலா் ஆஃப் டிமோர்-லெஸ்டே ’ என்ற விருது திரௌபதி முா்முக்கு வழங்கப்பட்டது.
  • ஃபிஜி நாட்டுக்குச் சென்றிருந்த அவா் அந்நாட்டு அதிபா் வில்லியம் கேடோனிவிர் மற்றும் பிரதமா் சிட்டிவேனி ரபூகா ஆகியோரை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.
  • குடியரசுத் தலைவா் திரௌபதி முா்முக்கு ஃபிஜி நாட்டின் உயரிய விருதான ‘ஆா்டா் ஆஃப் ஃபிஜி’ வழங்கப்பட்டது.
  • நியூஸிலாந்து நாட்டுக்கு பயணம் மேற்கொண்ட திரௌபதி முா்மு அந்த நாட்டு கவா்னா் ஜெனரல் டோம் சிண்டி கிரோ, பிரதமா் லக்சன் மற்றும் துணைப் பிரதமா் வின்ஸ்டன் பீட்டா்ஸ் ஆகியோரை சந்தித்தார்.
  • ஆக்லாந்தில் இந்திய தூதரகம் அமைக்கப்படவுள்ளது.

பாரீஸ் ஒலிம்பிக் நிறைவு: அமெரிக்கா முதலிடம்

  • பிரான்ஸ் தலைநகா் பாரீஸில் நடைபெற்றுவந்த 33-ஆவது கோடைகால ஒலிம்பிக் போட்டி நிறைவடைந்தது.
  • போட்டியில் அதிக பதக்கங்கள் வென்ற நாடு அமெரிக்கா, சீனா, ஜப்பான் நாடுகள் முறையே அடுத்த இரு இடங்களைப் பிடித்தன, பிரான்ஸ் 5-ஆம் இடம் பிடித்தது.
  • இதில் இந்தியாவுக்கு 71-ஆவது இடம் கிடைத்தது.
  • ஒலிம்பிக் போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுகிறது.
  • டோக்கியோவில் கடந்த 2021-இல் 32-ஆவது கோடைகால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றது.
  • பாரீஸ் நகரில் கடந்த 26-ஆம் தேதி தொடங்கிய இந்தப் போட்டி, 17 நாள்கள் நடைபெற்றது.
  • முதல் பதக்க விளையாட்டாக துப்பாக்கி சுடுதலில் 10 மீட்டா் ஏா் ரைஃபிள் கலப்பு அணி பிரிவு நடைபெற்றது.
  • போட்டியின் இறுதி நாளில் கடைசியாக நடைபெற்ற மகளிர் கூடைப்பந்து போட்டியில் அமெரிக்கா, பிரான்ஸை வீழ்த்தி தங்கம் வென்றது.
  • ஒலிம்பிக் வரலாற்றிலேயே முதல் முறையாக, தொடக்க நிகழ்ச்சியின்போது அணிகளின் அணிவகுப்பு, பாரீஸ் நகரில் பாயும் சென் நதியில் படகுகளில் நடத்தப்பட்டது.
  • ஈஃபிள் கோபுரத்தின் பழை இரும்புச் சில்லுகள் பதக்கங்களில் பதித்து வழங்கப்பட்டன.
  • பாரீஸ் ஒலிம்பிக் போட்டியை இந்தியா 1 வெள்ளி, 5 வெண்கலம் என 6 பதக்கங்களுடனேயே நிறைவு செய்துள்ளது.
  • 2020 – டோக்கியோ ஒலிம்பிக்கில் 1 தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என 7 பதக்கங்கள் வென்றது.
  • நீரஜ் சோப்ரா வெள்ளி வென்றார், ஒலிம்பிக் தடகளத்தில் தொடா்ந்து 2 முறை பதக்கம் வென்ற முதல் இந்தியா் என்ற பெருமை பெற்றார்.
  • துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனு பாக்கா், தனிநபா் பிரிவிலும், கலப்பு அணி பிரிவில் சரப்ஜோத் சிங்குடன் இணைந்தும் என 2 வெண்கலப் பதக்கங்கள் வென்று அசத்தினார்.
  • ஒலிம்பிக் வரலாற்றில் துப்பாக்கி சுடுதலில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை மனு பாக்கா், ஒரே ஒலிம்பிக்கில் இரு பதக்கங்கள் வென்ற முதல் இந்தியா்.
  • ஆடவா் மல்யுத்தத்தில் அமன் ஷெராவத் வெண்கலப் பதக்கம் வென்றார்.

நீங்கள் உங்கள் சொந்த ராஜா” திட்டம்:

  • நீங்கள் உங்கள் சொந்த ராஜா” திட்டம் தமிழ்நாட்டில் பாரம்பரிய கலைகளுக்கு புத்துயிர் அளித்தல், திறன் மேம்பாடு மற்றும் வேலை வாய்ப்புகளை மேம்படுத்துவதன் மூலம் இளைஞர்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • டிசம்பர் 01, 2023 அன்று அமைச்சர் உதயநிதி தலைமையில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தால் செயல்படுத்தப்பட்டது.
  • அழிந்து போகும் அபாயத்தில் உள்ள தமிழ்நாட்டின் பாரம்பரிய கலை மற்றும் கைவினைப் பொருட்களைப் பாதுகாத்து மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது.
  • கலைகளில் ஆர்வமுள்ள இளைஞர்களை அந்தந்த கைவினைகளில் தொழில்முனைவோராக ஆக்க ஊக்குவிக்கிறது.
  • மரவேலை, தஞ்சாவூர் பொம்மைகள் மற்றும் ஓவியம், பனை ஓலை கலை, கடல் ஓடு கலை, களிமண் மற்றும் காகித கலை, மட்பாண்டங்கள், கைத்தறி சாயமிடுதல், பத்தமடை பாய் தயாரித்தல் மற்றும் பல உள்ளிட்ட பல்வேறு பாரம்பரிய கலைகளில் சிறப்பு பயிற்சி அளிக்கிறது.
  • பயிற்சி பெற்ற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஆர்டர்கள் மற்றும் வேலை வாய்ப்புகளை வழங்குகிறது, பொருளாதார சுதந்திரம் மற்றும் நிலைத்தன்மையை வளர்க்கிறது.

ஆகஸ்ட் 12: உலக யானைகள் தினம்

  • ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 12ஆம் தேதி உலக யானைகள் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
  • சுற்றுச்சூழல் பாதுகாப்பில் யானைகளுக்கு இருக்கும் முக்கியத்துவம் குறித்தும், ஆப்பிரிக்க, ஆசிய யானைகளின் அவலநிலை குறித்தும் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த மற்றும் யானைகளின் பாதுகாப்புக்கான தீர்வுகளை சர்வதேச அளவில் முன்னெடுக்க ‘உலக யானைகள் தினம்’ கொண்டாடப்படுகிறது.

ஆகஸ்ட்12: சர்வதேச இளையோர் தினம்

  • மோதல்களை தடுத்தல் மற்றும் அவற்றை உருமாற்றுதல், அனைவரையும் உள்ளடக்கல், சமூக நீதி, நீடித்த அமைதி ஆகியவற்றிற்கு இளையோர்கள் ஆற்றிய பங்கை கௌரவிக்கும் விதமாக சர்வதேச இளையோர் தினம் அனுசரிக்கப்படுகிறது.
  • 1999 – ஆம் ஆண்டில், ஐ.நா. பொதுச் சபையினால் ஆகஸ்ட் 12 ஆம் தேதி சர்வதேச இளையோர் தினமாக தேர்ந்தெடுக்கப்பட்டது.

தகவல் துளிகள்:

  1. இந்திய நிதியதவியுடன் மாலத்தீவின் அட்டு சாலைகள் மற்றும் வடிகால் மேலாண்மைத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது, இந்த திட்டத்துக்கு ரூ.560 கோடியை இந்தியா வழங்கியுள்ளது.
  2. மாலத்தீவின் அட்டு நகர கடற்கரை மறுசீரமைப்புத் திட்டம் மற்றும் இந்தியாவின் ஏற்றுமதி-இறக்குமதிக்கான வங்கியின் நிதியுதவியுடன் கட்டமைக்கப்பட்டுள்ள மாற்று இணைப்பு நான்கு வழிச் சாலை ஆகியவற்றின் தொடக்க விழாவில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் பங்கேற்றார்.
  3. வங்கதேச உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக சையத் ரெஃபாத் பதவியேற்றார்.
  4. குத்துச்சண்டையில் மகளிருக்கான 57 கிலோ எடைப் பிரிவில் தைவானின் லின் யு டிங், போலந்தின் ஜூலியா செரெமெடாவை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார்.

 

 

 

 

 

About the Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these