7th August Daily Current Affairs – Tamil

  இந்தியாவின் யூரியா இறக்குமதியில் 25% சீனாவின் பங்களிப்பு:

  • இந்தியாவின் மொத்த யூரியா இறக்குமதியில் 25 சதவீதத்துக்கு மேல் சீனாவின் பங்களிப்பாக உள்ளது.
  • இந்தியாவில் உரத்தின் உற்பத்தியைவிட தேவை அதிகம் இருப்பதால் இறக்குமதியை சார்ந்திருக்க வேண்டியுள்ளது.
  • உரத் துறை மூலம் வேளாண்மை பயன்பாட்டுக்காக 2023-24 நிதியாண்டில் மொத்தம் 42 லட்சம் டன் யூரியா இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
  • இதில் 65 லட்சம் டன் (25 சதவீதத்துக்கு மேல்) சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
  • பாஸ்பேட் மற்றும் பொட்டாஷ் உரம் 53 லட்சம் டன் இறக்குமதியாகியுள்ளது.
  • இந்தியாவில் யூரியா உற்பத்தியை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.
  • இந்தியாவில் சராசரி உரப் பயன்பாடு ஒரு ஹெக்டோ் விவசாய நிலத்துக்கு 140 கிலோவாக உள்ளது.
  • அதே நேரத்தில் பஞ்சாபில் மட்டும் உரப் பயன்பாடு ஹெக்டேருக்கு 61 கிலோவாக உள்ளது.

பணமோசடி தடுப்புச் சட்டம் 2002:

  • பணமோசடி தடுப்புச் சட்டம் 2002 என்பது பணமோசடி செய்வதைத் தடுக்கவும், பணமோசடி மூலம் பெறப்பட்ட சொத்துக்களை பறிமுதல் செய்யவும் NDA அரசாங்கத்தால் இயற்றப்பட்ட இந்திய நாடாளுமன்றத்தின் சட்டமாகும்.
  • பணமோசடி தடுப்புச் சட்ட விதிகள் 1 ஜூலை 2005 முதல் நடைமுறைக்கு வந்தன.
  • சட்டம் மற்றும் விதிகள் வங்கி நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள் மற்றும் இடைத்தரகர்கள் வாடிக்கையாளர்களின் அடையாளத்தை சரிபார்க்கவும், பதிவுகளை பராமரிக்கவும் மற்றும் தகவல்களை வழங்கவும் கடமைப்பட்டுள்ளன.
  • இந்தச் சட்டம் ஜனவரி 2003 இல் ஒப்புதல் அளிக்கப்பட்டது மற்றும் ஜூலை 2005 இல் நடைமுறைக்கு வந்தது.
  • இது 2005, 2009 மற்றும் 2012 இல் மூன்று முறை திருத்தப்பட்டது.

கூட்டு போர்ப் பயிற்சி “தரங் சக்தி’:

  • இந்தியா, ஸ்பெயின், பிரான்ஸ், பிரிட்டன், ஜெர்மனி ஆகிய நாடுகளின் விமானப்படை கூட்டு போர்ப் பயிற்சி “தரங் சக்தி’ என்ற பெயரில் கோவை மாவட்டம், சூலூரில் தொடங்கியது.
  • இந்தப் பயிற்சி ஆகஸ்ட் 14 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
  • இதில் பிரான்ஸின் ரஃபேல், ஐரோப்பிய டைஃபூன், இந்தியாவின் தேஜஸ், எஸ்.யு 30 சுகோய் உள்ளிட்ட விமானங்கள் இடம்பெற்றுள்ளன.
  • 61 – ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் இத்தகைய பயிற்சி மேற்கொள்ளப்படுகிறது.
  • பல்வேறு நாட்டு வீரர்கள் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தவும் விமானப்படையில் தற்போதுள்ள அதிநவீன தொழில்நுட்பங்களைத் தெரிந்து கொள்ளவும் இந்தப் பயிற்சி உதவும்.

ஆகஸ்ட் 7: தேசிய கைத்தறி தினம்

  • நாட்டில் உள்ள கைத்தறி நெசவாளர்களை கவுரவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 7ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.
  • தேசிய கைத்தறி தின 2024 கருப்பொருள்: கைத்தறி நெசவில் தொழில்நுட்பம் மற்றும் புதுமையின் ஒருங்கிணைப்பு, திறன் மேம்பாடு மற்றும் நெசவாளர்களுக்கான சந்தை அணுகலை விரிவுபடுத்துதல் ஆகியவற்றை முன்னிலைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

தகவல் துளிகள்:

  1. ஆயுதப் படை வீரா்களின் பாதுகாப்பு மற்றும் செயல்திறனை அதிகரிக்கும் கண்டுப்பிடிப்பாக மின்சாரம் தயாரிக்கும் மற்றும் ஜிபிஎஸ் தொழில்நுட்பத்துடன் கூடிய பிரத்யேக காலணிகளை இந்தூா் ஐஐடி வடிவமைத்துள்ளது.
  2. சர்வதேசப் போட்டியில் உலகின் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் மல்யுத்த வீராங்கனை யூ சுசாகியை வீழ்த்திய முதல் வீராங்கனை என்ற பெருமையை இந்தியாவின் மல்யுத்த வீராங்கனைவினேஷ் போகத் பெற்றார்.
  3. நாமக்கல் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்று கொல்லிமலை,இங்கு 50 அடி உயர புதிய தொலைநோக்கி கோபுரம் அமைக்கப்பட்டு வருகிறது.
  4. திருச்சி அருகே 15-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த ‘தலைப்பலி’ சிற்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
  5. கோவை மாநகராட்சி மேயராக ரங்கநாயகி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
  6. முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் 5 -வது மாநில திட்டக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது, திட்டக்குழுவின் துணைத் தலைவர் ஜெயரஞ்சன் ஆவார்.
  7. ஹமாஸ் அமைப்பின் புதிய தலைவராக யேஹ்யா சின்வா் தோ்ந்தெடுக்கப்பட்டார்.
  8. குடியரசுத் தலைவா் முா்முக்கு ஃபிஜி நாட்டின் உயரிய விருதான ‘கம்பானியன் ஆஃப் தி ஆா்டா் ஆஃப் ஃபிஜி’ என்ற விருது வழங்கப்பட்டது.
  9. ஃபிஜி நாட்டின் அதிபா் கேடோனிவிர்.
  10. வங்கதேசத்தில் புதிதாக அமையவிருக்கும் இடைக்கால அரசுக்கு நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் கான் தலைமையில் புதிய அரசு அமைய உள்ளது.
  11. பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் நடைபெற்ற ஆடவருக்கான 100 மீட்டா் ஓட்டத்தில் அமெரிக்காவின் நோவா லைல்ஸ் தங்க பதக்கம் வென்றார்.

 

 

About the Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these