இன்றைய நடப்பு நிகழ்வுகள் மே 26, 2024
அம்ரித் பாரத் திட்டம்:
அமிர்த் பாரத் ஸ்டேஷன் திட்டம் என்பது, நாடு முழுவதும் ரயில் நிலையங்களை மறுவடிவமைப்பதற்காக ரயில்வே அமைச்சகத்தால் பிப்ரவரி 2023 இல் தொடங்கப்பட்டது.
பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கப்பட்ட அமிர்த பாரத் திட்டம், நாடு முழுவதும் உள்ள 1309 ரயில் நிலையங்களை மறுவடிவமைப்பதில் கவனம் செலுத்துகிறது.
அனைத்து நிலையங்களையும் மீண்டும் மேம்படுத்த 25000 கோடி ரூபாய் செலவாகும்.
இத்திட்டம் தற்போதைய ரயில் நிலையங்களை புதுப்பித்து, சர்வதேச தரத்தை அடையும் வகையில் நவீனமயமாக்குவதில் கவனம் செலுத்துகிறது.
ரயில்வே அமைச்சகத்தின்படி, அம்ரித் பாரத் ஸ்டேஷன் திட்டம் பயணிகளுக்கு உலகத்தரம் வாய்ந்த வசதிகளை வழங்கும் மற்றும் அவர்களின் ஒட்டுமொத்த பயண அனுபவத்தை மேம்படுத்தும்.
நிலையத்தின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப அதன் அணுகுமுறையை வடிவமைக்கும், அதனால் அந்தந்த நிலையங்களில் குறிப்பிட்ட பிரச்சனைகளை தீர்க்க முடியும்.
கேன்ஸ் பட விழா: சிறந்த நடிகை விருது அனசுயா சென்குப்தா
கேன்ஸ் திரைப்பட விழாவின் 77ஆவது நிகழ்ச்சியில் ஓர் இந்திய நடிகை அனசுயா சென்குப்தா வெற்றியைப் பெற்றார்.
கொல்கத்தாவைச் சேர்ந்த அனசுயா சென்குப்தா, ’தி ஷேம்லெஸ்’ படத்தில் நடித்திருந்தார்.
இத்திரைப்படத்திற்காக, கேன்ஸ் திரைப்பட விழாவில் சிறந்த நடிகைக்கான ’அன் செர்ட்டன் ரெகார்ட்’ பரிசை வென்றுள்ளார்.
தி ஷேம்லெஸ் – படத்தினை பல்கேரிய திரைப்படத் தயாரிப்பாளர் கான்ஸ்டான்டின் போஜனோவ் இயக்கியுள்ளார்.
சூப்பர் பூமி: நாசா கண்டுபிடிப்பு
அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, பூமியைப் போன்ற சூப்பர் பூமி என பெயரிடப்பட்டிருக்கும் ஒரு புதிய கிரகத்தைக் கண்டுபிடித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.
டிஓஐ – 715பி என்று இந்த சூப்பர் பூமிக்கு அடையாளப் பெயர் சூட்டபப்ட்டுள்ளது.
இது பூமியை விட ஒன்றரை மடங்கு பெரியது என்பதால் சூப்பர் பூமி என அழைக்கப்படுகிறது.
இது பூமியிலிருந்து 137 ஒலி ஆண்டுகள் தொலைவில்தான் அமைந்துள்ளது.
இந்த சூப்பர் பூமமியில் தட்பவெப்பநிலையானது மிதமாக இருப்பதாகவும், தண்ணீரும் இருப்பதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது பூமியை விட பெரியதாக, நெப்ட்யூன் மற்றும் யுரேனஸ் கிரகங்களை விட எடை குறைந்த, வாயு, பாறைகள் கலந்த கலவையாக இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இங்கு உயிர்கள் வாழ முடியும் என்று தற்போது நம்பப்படுகிறது.
“ரீமெல்” புயல்:
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி,ரீமெல் புயலாக உருவாகிறது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடல் மற்றும் அரபிக் கடல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஆண்டுதோறும் புயல் உருவாகி வருகிறது.
இந்த புயல்களுக்கு இந்தியா, பாகிஸ்தான் கத்தார், இலங்கை, ஏமன், தாய்லாந்து, ஓமன், ஐக்கிய அரபு அமீரகம், வங்கதேசம், மியான்மர் உள்ளிட்ட 13 நாடுகள் பரிந்துரைக்கும் பெயர்கள் சூட்டப்பட்டு வருகிறது.
அந்த வகையில் தற்போதைய ‛ரெமல்’ என்ற பெயரை பரிந்துரை செய்த நாடு ஓமன் ஆகும்.
‘ரெமல்’ என்றால் அரபி மொழியில் மணல் என்று அர்த்தம் ஆகும்.
தகவல் துளிகள்:
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் 2024-ஆம் ஆண்டுக்கான விருது, இரா.முத்தரசனுக்கு மார்க்ஸ் மாமணி விருதும், நடிகா் பிரகாஷ்ராஜுக்கு அம்பேத்கா் சுடா் விருதும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித்தலைவா் தொல்.திருமாவளவன் வழங்கினார்.
இரண்டாம் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு, சென்னையில் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெறவுள்ளது.
தகைசால் தமிழா் விருதை’ இனி தமிழ் வளா்ச்சித் துறை வழங்கும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது, முன்னதாக இந்த விருதை வழங்கும் பணி பொதுத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டு இருந்தது.
எண்ம முறையில் பொருள்கள் மற்றும் சேவையை சந்தைப்படுத்துவது குறித்து தமிழகத்தில் ‘தமிழ்நாடு டிஜிட்டல் உச்சி மாநாடு 2024’ சென்னையில் நடைபெற்றது.
எவரெஸ்ட் சிகரத்தில் 3 – ஆவது முறையாக ஏறி நேபாளத்தைச் சோ்ந்த புகைப்பட செய்தியாளா் பூா்ணிமா ஷொ்ஸ்தா சாதனை படைத்தார்.
தென்கொரியாவின் யெச்சியான் நகரில் உலக வில் வித்தைப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன, இதில் இந்திய மகளிர் அணி காம்பவுண்ட் பிரிவில் தங்கம் வென்றுள்ளது.
மலேசிய மாஸ்டா்ஸ் பாட்மின்டன் போட்டி கோலாலம்பூரில் நடைபெற்று வருகிறது.
தமிழக ஆளுநரும், பல்கலைக்கழகங்களின் வேந்தருமான ஆா்.என்.ரவி தலைமையில் துணைவேந்தா்கள் மாநாடு மே 27,28 – இல் உதகையில் நடைபெறவுள்ளது.