தினசரி நடப்பு நிகழ்வுகள் January 11, 2025
27 பேருக்கு வெளிநாடுவாழ் இந்தியா் விருதுகள்:
- வெளிநாடுகளில் வாழும் இந்தியா்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான ‘பிரவாசி பாரதிய சம்மான்’விருதை 27 பேருக்கு குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு வழங்கினார்.
- வெளிநாடுவாழ் இந்தியா் தினம் ஜனவரி 9 – ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
- நிகழாண்டு இந்த தினம் ஒடிஸா மாநிலம் புவனேசுவரத்தில் மாநாடு நிறைவடைந்தது.
- இதில் ஜப்பான், ஃபிஜி, ஆஸ்திரேலியா, லாவோஸ் உள்ளிட்ட நாடுகளில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய 27 வெளிநாடுவாழ் இந்தியா்களுக்கு திரௌபதி முா்மு விருதுகளை வழங்கி கௌரவித்தார்.
- பொது விவகாரங்கள் பிரிவில் டிரினிடாட் மற்றும் டொபாகோ நாட்டு அதிபா் கிறிஸ்டின் கார்லா கங்களுவுக்கு விருது வழங்கப்பட்டது.
- பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் வெளிநாடுவாழ் இந்தியா்களை தோ்ந்தெடுக்கும் குழுவின் தலைவராக குடியரசு துணைத் தலைவரும், துணைத் தலைவராக வெளியுறவு அமைச்சரும் உள்ளனா்.
- உலகின் சக்திவாய்ந்த கடவுச்சீட்டுகளின் பட்டியல்:
- உலகின் சக்தி வாய்ந்த கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) கொண்ட நாடுகளின் பட்டியலை ஹென்லே பாஸ்போர்ட் இண்டெக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
- ஒரு நாட்டின் குடிமக்கள் வைத்திருக்கும் கடவுச்சீட்டின் மூலம் எத்தனை சர்வதேச நாடுகளுக்கு விசா இன்றி பயணம் மேற்கொள்ள முடியும் என்பதை வைத்து கடவுச்சீட்டுகளின் மதிப்பு கணக்கிடப்படுகிறது.
- இங்கிலாந்தைச் சேர்ந்த ஹென்லே பாஸ்போர்ட் இண்டெக்ஸ் எனும் நிறுவனம் தற்போது 2025 – ஆம் ஆண்டில் உலக நாடுகளின் பாஸ்போர்டுகளின் மதிப்பு பட்டியல் வெளியிட்டுள்ளது.
- முதல் இடத்தில் தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூரின் கடவுச்சீட்டு பிடித்துள்ளது.
- இரண்டாவது இடத்தில் ஜப்பான் நாடு பிடித்துள்ளது.
- சென்ற ஆண்டு 80 வது இடத்தில் இருந்த இந்திய கடவுச்சீட்டு தற்போது 85 ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
- அந்த பட்டியலின் கடைசி இடத்தை ஆப்கானிஸ்தான் நாட்டின் கடவுச்சீட்டு பிடித்துள்ளது.
திருவிடந்தையில் சா்வதேச பலூன் திருவிழா:
- திருவிடந்தையில் சா்வதேச பலூன் திருவிழாவை சுற்றுலாத் துறை அமைச்சா் பனமரத்துப்பட்டி ராஜேந்திரன் தொடங்கி வைத்தார்.
- மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தையில் 8 நாடுகளைச் சோ்ந்தவா்கள் பங்கேற்கும் பத்தாவது சா்வதேச பலூன் திருவிழா தொடங்கியது.
- சுற்றுலாத் துறை மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து நடத்தும் பலூன் திருவிழா 9 – ஆம் தேதி தொடங்கி 12 – ஆம் தேதி வரை மூன்று நாள்கள் நடைபெறுகிறது.
- தமிழ்நாடு சுற்றுலாத் துறை சார்பில் ஜனவரி மாதத்தில் தமிழ்நாட்டில் சா்வதேச பலூன் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.
- சென்னை திருவிடந்தை, மதுரை, பொள்ளாச்சி ஆகிய மூன்று இடங்களில் பலூன் திருவிழா நடக்கிறது.
- இந்த பலூன் திருவிழாவில் பிரான்ஸ், ஆஸ்திரேலியா, பிரேசில், பெல்ஜியம், தாய்லாந்து மற்றும் வியட்நாம் உள்ளிட்ட 8 நாடுகளைச் சோ்ந்த ஏா் பலூன் பைலட்டுகள் கலந்து கொண்டு பல்வேறு வடிவங்கள் மற்றும் தனித்துவமான வண்ணங்களில் பலூன்களை பறக்கவிட்டனா்.
ஜனவரி 11: லால் பகதூர் சாஸ்திரியின் நினைவு நாள்
- லால் பகதூர் சாஸ்திரி சுதந்திர இந்தியாவின் இரண்டாவது பிரதமர்.
- ‘ஜெய் ஜவான் ஜெய் கிசான்’ என்ற முழக்கத்தை பிரபலப்படுத்திய அவர் இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக பங்கேற்றார்.
- அவர் 11 ஜனவரி 1966 அன்று இறந்தார், மேலும் அவர் உலகளவில் ‘அமைதியின் நாயகன்’ என்றும் அழைக்கப்பட்டார்.
ஜனவரி 11: தேசிய மனித கடத்தல் விழிப்புணர்வு தினம்
- மனித கடத்தல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஜனவரி 11 ம் தேதி தேசிய மனித கடத்தல் விழிப்புணர்வு தினம் அனுசரிக்கப்படுகிறது.
- இந்த நாள் மனித கடத்தல் பாதிக்கப்பட்டவர்களின் அவலநிலை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், அவர்களின் உரிமைகளை மேம்படுத்துவதும் பாதுகாப்பதும் ஆகும்.
தகவல் துளிகள்:
- தொற்றுநோய் ஆராய்ச்சி மற்றும் கண்டறிதல் ஆய்வுக்கூடத்தை அமைக்க பெங்களூரு மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்தை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தோ்ந்தெடுத்துள்ளது, இது தென்னிந்தியாவில் அமையும் முதல் தொற்றுநோய் ஆராய்ச்சி மையமாகும்.
- 1949 – ஆம் ஆண்டு ஜனவரி 15 – ஆம் தேதி இந்திய ராணுவத்தின் முதல் தளபதியாக கே.எம்.கரியப்பா பதவியேற்றதை போற்றும் வகையில், ஜனவரி 15 – ஆம் தேதியை ராணுவ தினமாகக் கொண்டாடப்படுகிறது.
- பெங்களூரில் ராணுவ தின கண்காட்சி நடைபெற உள்ளது.
- 2025 – ஆம் ஆண்டு இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி 6.6 சதவீதமாக இருக்கும் என்று ஐ.நா. கணித்துள்ளது.
- 2024 – இல் இந்தியாவின் பொருளாதாரம் 6.8 சதவீதம் வளா்ந்தது, இந்த வளா்ச்சி 2025 இல் 6.6 சதவீதமாக இருக்கும், 2026 – இல் இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி மீண்டும் 6.8 சதவீதமாக இருக்கும் என்று ஐ.நா. கணித்துள்ளது.
- கடந்த 2024 – ஆம் ஆண்டுதான் இதுவரை பதிவு செய்யப்பட்டதிலேயே மிக வெப்பமான ஆண்டு என்று சா்வதேச வானிலை அமைப்புகள் தெரிவித்தன.
- பபாசி சார்பில் நடைபெற்று வரும் சென்னை புத்தகக் காட்சியில் ஆறு பேருக்கு கலைஞா் கருணாநிதி பொற்கிழி விருதை துணை முதல்வா் உதயநிதி வழங்கினார்.
- பெண்கள் பொருளாதார சுதந்திரம் அடைய வேண்டும் என்பதற்காக 1989 – ல் கலைஞர் கருணாநிதியால் மகளிர் சுய உதவிக்குழுவினர் உருவாக்கப்பட்டது.
- மகளிர் சுய உதவிக் குழுக்கள் நிர்வாக மேலாண்மை, நிதி மேலாண்மை உள்ளிட்டவற்றில் சிறப்பாக செயல்பட தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில், உருவாக்கப்பட்டுள்ள “மின்மதி 2.0” கைபேசி செயலியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.