உணவுப் பொருள்களில் நுண்ணிய நெகிழித் துகள்கள்:
- இந்திய உணவில் நுண்ணிய நெகிழித் துகள்கள் மாசுபாட்டை சரி செய்வதற்கான திட்டத்தை இந்திய உணவுப் பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம் தொடங்கியது.
- சா்க்கரை, உப்பு போன்ற பொதுவான உணவுப் பொருள்களில் நுண்ணிய நெகிழித் துகள்கள் இருப்பதை உணவு மற்றும் வேளாண் அமைப்பின் (எஃப்ஏஓ) சமீபத்திய அறிக்கை உறுதி செய்கிறது.
- இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் உணவில் நுண்ணிய நெகிழித் துகள்கள் மாசுபாடு குறித்த அதிகரித்து வரும் கவலையை சமாளிக்க ஒரு புத்தாக்கத் திட்டம் ஆகஸ்ட் 18- ஆம் தேதி அறிமுகப்படுத்தியுள்ளது.
- இது நாட்டின் உணவு பாதுகாப்பு ஒழுங்குமுறையாளராக, இந்திய நுகா்வோருக்கு பாதுகாப்பான, ஆரோக்கியமான உணவு கிடைப்பதை உறுதி செய்ய இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் இத்திட்டத்தை அளிக்கிறது.
- உலகளாவிய ஆய்வுகள் பல்வேறு உணவுகளில் நுண்ணிய நெகிழித் துகள்கள் மாசுபாடு இருப்பதை எடுத்துக்காட்டினாலும், இந்தியாவுக்கென குறிப்பிட்ட நம்பகமான தரவை இதன் மூலம் உருவாக்கப்படும்.
ஜம்மு-காஷ்மீா் பேரவைத் தோ்தல்:
- ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தின் பேரவைத் தோ்தல் மூன்று கட்டங்களாக நடத்தப்படவுள்ளது.
- முதல் கட்ட வாக்குப்பதிவு அடுத்த மாதம் 18 – ஆம் தேதி நடைபெறுகிறது.
- ஜம்மு மற்றும் காஷ்மீருக்கு இந்திய அரசியலமைப்பின் 370 வது பிரிவின் கீழ் வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து அல்லது சுயாட்சியை இந்திய அரசாங்கம் ஆகஸ்ட் 5, 2019 அன்று ரத்து செய்தது.
- இந்திய அரசமைப்பின் சட்டப்பிரிவு 370, ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து பெற வழிவகை செய்கிறது.
- 1947ஆம் ஆண்டு இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின்போது ஜம்மு காஷ்மீர் தனிச்சையாக சுதந்திரமாக இருக்க வேண்டும் என அம்மாநிலத்தின் கடைசி மகாராஜாவாக இருந்த ராஜா ஹரி சிங் விரும்பினார்.
- 2019 – ஆம் ஆண்டு சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டது, ஜம்மு மற்றும் காஷ்மீரின் சிறப்பு அரசியலமைப்பு அந்தஸ்தை நீக்கி, ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது.
வெம்பக்கோட்டை அகழாய்வில் சுடுமண் முத்திரை, விளக்கு:
- வெம்பக்கோட்டை அருகே அகழாய்வில் சுடுமண் முத்திரை, விளக்கு, கல் பந்து, கல்லால் ஆன சில்வட்டு ஆகியவை கண்டறியப்பட்டன.
- விருதுநகா் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகேயுள்ள விஜயகரிசல்குளம் வைப்பாற்றின் வடகரையில் மேட்டுக்காடு பகுதியில் 3-ஆம் கட்ட அகழாய்வுப் பணி நடைபெற்று வருகிறது.
- இங்கு கண்ணாடி மணிகள், கல் மணிகள், சிகை அலங்காரத்துடன் பெண்ணின் தலைப் பகுதி, நாயக்கா் கால செம்புக் காசு, அணிகலன்கள், சங்கு வளையல்கள் உள்ளிட்ட 450-க்கும் மேற்பட்ட பொருள்கள் கண்டறியப்பட்டன.
- சுடுமண்ணாலான முத்திரை, விளக்கு, கல் பந்து, கல்லால் ஆன சில்லு வட்டு ஆகியவை கண்டறியப்பட்டன.
உலக புகைப்பட தினம்: ஆகஸ்ட் 19
- உலக புகைப்பட தினம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 19 அன்று கடைப்பிடிக்கப்படுகிறது.
தகவல் துளிகள்:
- கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டையொட்டி மத்திய அரசு சார்பில் அவரின் உருவம் பொறித்த ரூ 100 நாணயம் ராஜ்நாத் சிங் – ஆல் வெளியிடப்படவுள்ளது.
- இந்திய கடலோர காவல் படையின் 25 ஆவது தலைமை இயக்குநரான ராகேஷ் பால் காலமானார்.
- மீனவா்களை மீட்பது உள்பட கடலோர காவல் படையின் நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் புதிய கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் திறந்து வைத்தார்.
- திருப்பத்தூா் மாவட்டம், ஆம்பூா் அருகே கற்திட்டை அமைப்புடன் கூடிய மூன்று சதிக்கற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
- மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தையில் கடந்த 15-ஆம் தேதி தொடங்கிய சா்வதேச காற்றாடித் திருவிழா நிறைவு பெற்றது.
- தமிழக அரசின் 50 – ஆவது தலைமைச் செயலாளராக நா.முருகானந்தம் நியமிக்கப்பட உள்ளார்.