பிரதமரின் கிராமப்புற வீட்டுவசதித் திட்டம்:
- பிரதமரின் கிராமப்புற வீட்டுவசதித் திட்டத்தின்கீழ் 2024-25-ஆம் ஆண்டுமுதல் 2028-29 வரை கூடுதலாக 2 கோடி வீடுகளை கட்ட மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.
- பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசால் 25 ஜூன் 2015 அன்று தொடங்கப்பட்டது.
- கிராமப்புற வீட்டுவசதி பற்றாக்குறையை தீர்ப்பதுடன், ஏழைகளுக்கு தரமான வீட்டு வசதியை மேம்படுத்துவதுதே இந்த பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா என்ற திட்டத்தின் சாராம்சமாகும்.
- அரசின் வறுமை ஒழிப்பு திட்டத்தின் கீழ் வரும் மத்திய அரசின் மிக முக்கிய திட்டமாகும்.
- இந்த திட்டத்தை பொறுத்தவரை, நகர்ப்புறம் + கிராமப்புறம் என்று 2 பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
- இத்திட்டத்தின் கீழ், வீடு கட்ட பயனாளிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது.
- இந்த 9 வருடங்களில் இதுவரைக்கும் 04 கோடிக்கும் அதிகமான உறுதியான வீடுகளை கிராமப்புற மக்களுக்காக கட்டித்தரப்பட்டுள்ளன.
- இதில், 75 சதவீதம் எஸ்சி/எஸ்டி அல்லது சிறுபான்மை சமுதாயத்தினருடையது என்பது மிக முக்கியமான அம்சமாகும்.
ஆத்ம நிர்பர் தோட்டக்கலை தூயத் தாவரத் திட்டம்:
- பழப் பயிர்களின் தரம் மற்றும் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் கடந்த ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட தூய தாவரத் திட்டத்துக்கு ரூ1,765.67 கோடி ஒதுக்கீடு செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
- அதிக மதிப்புள்ள தோட்டக்கலைப் பயிர்களை உருவாக்குவதற்காக வேண்டி நோய்த் தாக்கமற்ற, தரமான தாவரப் பொருள் கிடைக்கப் பெறுவதனை அதிகரிப்பதற்காக, ஆத்மா நிர்பர் தூயத் தாவரத் திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது.
- ஒரு தூய்மையான தாவரம் என்பது நடவு செய்வதற்கு முன் பல பரிமாணங்களில் சோதிக்கப் பட்ட ஒரு தாவரமாகும்.
- முதலில், தாவரங்களில் நோய்க் கிருமிகளால் பாதிக்கப்பட்டுள்ளனவா என சோதிக்கப் படுகின்றன.
- இரண்டாவதாக, செழுமையாக வளர்ந்து வரும் தாவரங்கள் அடையாளம் காணப் படுகின்றன.
- செழுமையாக வளரும் தாவரங்களிலிருந்து திசு மாதிரிகள் சேகரிக்கப்படுகின்றன.
- இந்த திசுக்கள் மற்ற தாவரங்களுடன் இணைக்கப்பட்டு அவற்றின் உற்பத்தித் திறனும் அதிகரிக்கப் படுகின்றன.
புதிய விமானத் துறை மசோதா:
- நாட்டின் விமானப் போக்குவரத்துத் துறையில் எளிய வணிகத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் 90 ஆண்டு பழைமையான விமானச் சட்டத்துக்கு மாற்றாக கொண்டுவரப்பட்டுள்ள ‘பாரதிய வாயுயான் விதேயாக்’ மசோதா மக்களவையில் நிறைவேறியது.
- உலக அளவில் வேகமாக வளா்ந்து வரும் விமானப் போக்குவரத்து சந்தை கொண்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழும் நிலையில், விமானத் துறை தொடா்பாக 1934-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சட்டமே அமலில் உள்ளது.
- விமானக் கட்டண உயா்வு உள்ளிட்ட மக்களின் குறைகளைத் தீா்ப்பதற்கும், அவா்களின் புகார்கள், சந்தேகங்களுக்கு உரிய நேரத்தில் பதில் கிடைப்பதை உறுதி செய்வதற்கும் ‘பயனுள்ள இணையவழி அமைப்பை’ விமானப் போக்குவரத்து அமைச்சகம் அமைக்கும்.
பாரீஸ் ஒலிம்பிக் அமன் ஷெராவத்துக்கு வெண்கலம்: மல்யுத்தம்
- பாரீஸ் ஒலிம்பிக் மல்யுத்தத்தில் இந்திய வீரா் அமன் ஷெராவத் வெண்கலப் பதக்கம் வென்றார்.
- இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 6-ஆக அதிகரித்தது.
- ஆடவருக்கான 57 கிலோ ஃப்ரீஸ்டைல் பிரிவில், வெண்கலப் பதக்கச் சுற்றில் அமன் ஷெராவத், பியூா்டோ ரிகோவின் டரியன் குரூஸை வீழ்த்தினார்.
- ஒலிம்பிக் மல்யுத்தத்தில் இந்தியா தொடா்ந்து 5-ஆவது முறையாகப் பதக்கம் வென்றுள்ளது.
ஆகஸ்ட் 10: உலக உயிரி எரிபொருள் தினம்
- புதைபடிவ எரிபொருட்களுக்கு மாற்றாக செயல்படக்கூடிய மரபுசாரா எரிபொருட்கள் பற்றிய விழிப்புணர்வை பரப்புவதற்காக ஆகஸ்ட் 10 அன்று அனுசரிக்கப்படுகிறது.
தகவல் துளிகள்:
- உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட புதிய அதிநவீன ஏவுகணையை ஈரான் விமானப் படை அறிமுகப்படுத்தியது, முழுவதும் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட அபு மஹதி ஏவுகணை அறிமுகப்படுத்தப்படுகிறது.
- டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா, பாரீஸ் ஒலிம்பிக்கில் 45 மீட்டரை எட்டி வெள்ளிப் பதக்கம் வென்றார்.
- பாரீஸ் ஒலிம்பிக் நிறைவு நிகழ்ச்சி அணிவகுப்பின்போது, துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனு பாக்கருடன் இணைந்து தேசியக் கொடியேந்தி இந்திய அணியை வழிநடத்திச் செல்ல இருக்கிறார் ஹாக்கி வீரரான பி.ஆா்.ஸ்ரீஜேஷ்.
- பாரீஸ் ஒலிம்பிக் போட்டியின் தொடக்க நிகழ்ச்சி அணிவகுப்பின்போது, டேபிள் டென்னிஸ் வீரா் சரத் கமல், பாட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்து ஆகியோர் தேசியக் கொடியேந்தி இந்திய அணியை வழிநடத்தினா்.
- மனு பாக்கா் ஒரே ஒலிம்பிக் போட்டியில் இரு பதக்கங்கள் வென்ற முதல் இந்தியா், ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் பதக்கம் வென்ற இந்தியாவின் முதல் வீராங்கனை என்ற பெருமைகளைப் பெற்றார்.