இந்தியா – ரஷியா இடையே இருதரப்பு பேச்சுவார்த்தை:
- இந்தியா – ரஷியா இடையிலான 22-ஆவது வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக, ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் அழைப்பின்பேரில் பிரதமா் மோடி ரஷியாவுக்கு செல்கிறார்.
- பின்னா் ஆஸ்திரியா செல்லும் பிரதமா், அந்நாட்டு அதிபா் அலெக்ஸாண்டா் வான் டொ் பெல்லன், பிரதமா் கார்ல் நெகமா் ஆகியோருடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
- இந்தியா, ரஷியா இடையே இதுவரை 21 வருடாந்திர உச்சி மாநாடுகள் நடைபெற்றுள்ளன.
- இரு நாடுகளிலும் ஒன்றுவிட்டு ஒன்றாக இந்த மாநாடுகள் நடத்தப்படுகின்றன.
- கடந்த 2021, டிசம்பா் 6-ஆம் தேதி தில்லியில் இந்திய-ரஷியா உச்சி மாநாடு நடைபெற்றது.
நம்பிக்கை வாக்கெடுப்பு:
- ஜார்க்கண்ட் மாநில முதல்வராக அண்மையில் பதவியேற்ற ஜார்க்கண்ட் ஹேமந்த் சோரன் தலைமையிலான அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.
- ஆளும் அரசு அல்லது புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்றிருக்கும் அரசுக்கு பெரும்பான்மை இல்லை என்ற சந்தேகம் வரும்போது, தொடர்ந்து ஆட்சியில் நீடிப்பதற்கு முதல்வர் அல்லது பிரதமர் நம்பிக்கைத் தீர்மானத்தைக் கொண்டுவருவதற்கு அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கியுள்ள வாய்ப்புதான் நம்பிக்கை வாக்கெடுப்பு ஆகும்.
- மத்திய அரசைப் பொறுத்தவரை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்கு உத்தரவிடும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு மட்டுமே உண்டு.
- மாநிலத்தைப் பொறுத்தவரை, ஆளும் அரசின் மீது பெரும்பான்மை குறித்து சந்தேகம் வரும்போது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்கு ஆளுநர் உத்தரவிடுவார்.
- நாடாளுமன்ற அல்லது சட்டமன்ற உறுப்பினர்கள் தனிப்பட்ட முறையிலோ அல்லது கட்சி சார்பிலோ ஆளும் அரசின் மீது நம்பிக்கை இல்லாத தீர்மானம் கொண்டு வர முடியும்.
- ஆனால், அவர்கள் தன்னிச்சையாக கொண்டு வர முடியாது.
- அவர்கள், மக்களவை அல்லது சட்டப்பேரவை சபாநாயகரிடம் விண்ணப்பிக்க மட்டுமே முடியும்.
- அதனை, நிராகரிக்கவும், ஏற்கவும் சபாநாயகருக்கு அதிகாரம் உள்ளது.
- மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்கலாம்.
- புதுச்சேரி போன்று நியமன சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ள மாநிலங்களில், நியமன உறுப்பினர்களும் வாக்கெடுப்பில் பங்கேற்கலாம் என்று உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்தது.
- கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சிக் கொறாடாவின் உத்தரவுப்படி வாக்களிக்கவேண்டும்.
- சுயேட்சைக்கள், அவர்கள் விரும்பும் தரப்புக்கு வாக்களிக்கலாம், சபாநாயகருக்கும் வாக்களிக்கும் உரிமை உண்டு.
- நம்பிக்கை வாக்கெடுப்பின்போது நாடாளுமன்ற அவை அல்லது சட்டமன்ற அவையில் இருக்கும் உறுப்பினர்களில் பெரும்பான்மையை பெற்றால் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.
ஆயுஷ்மான் பாரத் திட்டம்:
- மத்திய அரசின் இலவச மருத்துவக் காப்பீட்டுத் திட்டமான ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் பயனடைவோர் எண்ணிக்கை மற்றும் காப்பீட்டுத் தொகையை இரு மடங்காக உயா்த்துவது குறித்து மத்திய அரசு தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது.
- தற்போது இத்திட்டத்தின்கீழ் பயனாளிகளுக்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவக் காப்பீடு அளிக்கப்படுகிறது.
- இதை ரூ 10 லட்சமாக உயா்த்தவும், பயனாளிகள் எண்ணிக்கையை இருமடங்கு அதிகரிக்கவும் மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
- அதன்படி, 70 வயதுக்கு மேல் உள்ள அனைவரும் பயனடையும் வகையில் மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
- முன்னதாக, 2024 இடைக்கால பட்ஜெட்டில் இந்த காப்பீட்டுத் திட்டத்துக்கான நிதி ஒதுக்கீட்டை மத்திய அரசு அதிகரித்தது.
- இதன் மூலம் ஒதுக்கீட்டுத் தொகை ரூ.646 கோடியில் இருந்து ரூ.7,200 கோடி வரை உயா்ந்தது.
- ஆயுஷ்மான் பாரத் யோஜனா, பிரதான் மந்திரி ஜன் ஆரோக்யா யோஜனா (PMJAY) என்றும் அழைக்கப்படுகிறது.
- இது சுகாதார வசதிகள் தேவைப்படும் சமூகத்தின் பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினருக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்ட திட்டமாகும்.
- இது செப்டம்பர் 23, 2018 அன்று பிரதமரால் அறிமுகப்படுத்தப்பட்டது.
- இந்த உடல்நலக் காப்பீட்டுத் திட்டம் இந்தியாவில் உள்ள சுமார் ஐம்பது கோடி குடிமக்களை உள்ளடக்கியது.
- மொத்தம் 12 கோடி குடும்பங்களுக்கு இந்த மருத்துவக் காப்பீட்டை மத்திய அரசு அளித்துள்ளது.
- உலகின் மிகப் பெரிய சுகாதாரத் திட்டங்களில் ஒன்றாகக் கருதப்படும் ஆயுஷ்மான் பாரத் யோஜனா, 50 கோடிக்கும் அதிகமான இந்தியக் குடிமக்களுக்கு, குறிப்பாகப் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்குப் பாதுகாப்பை விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- இது ஆயுஷ்மான் ஹெல்த் கார்டு மூலம் ரொக்கமில்லா மருத்துவமனையில் சேர்க்கும் சேவைகளை வழங்குகிறது.
- இது நாடு முழுவதும் உள்ள எந்த எம்பேனல் மருத்துவமனையிலும் பயன்படுத்த முடியும்.
- பயனாளிகள் தங்களது PMJAY மின் அட்டையை சமர்ப்பிப்பதன் மூலம் தேவையான சிகிச்சைக்காக மருத்துவமனையை அணுகலாம்.
டெங்கு காய்ச்சல்: கர்நாடகா
- கர்நாடகத்தில் ஜூலை 6 ஆம் தேதி நிலவரப்படி, 7,000 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
- டெங்கு காய்ச்சல் என்பது டெங்கு வைரஸால் ஏற்படும் கொசுக்களால் பரவும் நோயாகும்.
- இது வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டல பகுதிகளில் பரவலாக உள்ளது.
- இது அறிகுறிகள் தோன்றினால் பொதுவாக நோய்த்தொற்றுக்கு 3 முதல் 14 நாட்களுக்குப் பிறகு தொடங்கும்.
- இவற்றில் அதிக காய்ச்சல், தலைவலி , வாந்தி , தசை மற்றும் மூட்டு வலிகள் மற்றும் ஒரு சிறப்பியல்பு தோல் அரிப்பு மற்றும் தோல் வெடிப்பு ஆகியவை அடங்கும்.
- டெங்கு ரத்தக்கசிவு காய்ச்சல் அல்லது டெங்கு அதிர்ச்சி நோய்க்குறி என அறியப்பட்டது.
- இரத்தப்போக்கு, குறைந்த அளவிலான இரத்த தட்டுக்கள், இரத்த பிளாஸ்மா கசிவு மற்றும் ஆபத்தான குறைந்த இரத்த அழுத்தம் ஆகியவற்றுடன் உருவாகிறது.
சூலை முதல் வாரம்: வன மகோத்சவம்
- வன மகோத்சவம் (Van Mahotsav) என்பது இந்தியாவில் ஆண்டுதோறும் சூலை முதல் வாரத்தில் கொண்டாடப்படும் ஒரு வார மரம் நடும் திருவிழாவாகும்.
தகவல் துளிகள்:
- நாட்டிலேயே முதன்முறையாக கருப்பை மாற்று சிகிச்சை திட்டத்தை சென்னை கிளெனேகிள்ஸ் ஹெல்த் சிட்டி மருத்துவமனை தொடங்கியுள்ளது.
- அடுத்த ஆண்டு முதல் தனது துறைமுகங்களில் அனைத்து வெளிநாட்டு ஆராய்ச்சிக் கப்பல்களுக்கும் அனுமதி அளிக்க இலங்கை முடிவு செய்துள்ளது.
- மலேசியாவில் நடைபெற்ற ஆசிய இரட்டையா் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்பில் ஆடவா் இரட்டையா் பிரிவில் இந்தியாவின் அபய் சிங்/வேலவன் செந்தில்குமார் இணை சாம்பியன் பட்டம் வென்றது.
- ஸ்பெயினில் நடைபெற்ற கிராண்ட் ப்ரீ மல்யுத்த போட்டியில் இந்தியாவின் வினேஷ் போகாட் மகளிருக்கான 50 கிலோ எடைப் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார்.