9th January Daily Current Affairs – Tamil

தினசரி நடப்பு நிகழ்வுகள் January 9, 2025

 

முல்லைப் பெரியாறு அணை விவகாரம்:

  • 130 ஆண்டுகள் பழமையான இந்த அணையின் பாதுகாப்பு தொடா்பாக  2021 – ஆம் ஆண்டு அணை பாதுகாப்புச் சட்டத்தை மத்திய அரசு இயற்றியது.
  • முல்லைப் பெரியாறு அணை மேற்குத் தொடர்ச்சி மலையில் துவங்கி மேற்கு நோக்கி கேரளாவில் பாயும் பெரியாற்றின் மீது கட்டப்பட்ட அணையாகும்.
  • இது தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ளது.
  • இது கட்டப்பட்டுள்ள இடம் கேரளாவுக்கு உரிமையானது, தமிழக பொதுப்பணித்துறை இவ்வணையைப் பராமரித்து வருகிறது.
  • 1893 – ஆம் ஆண்டில் பென்னி குவிக் என்ற ஆங்கிலேயரால் கட்டப்பட்டது.
  • இந்த அணையின் நீர்ப்பிடிப் பகுதியில் வன சரணாலயம் தேக்கடி உள்ளது, இதன் கீழ்ப்பகுதியில் இடுக்கி அணை கட்டப்பட்டுள்ளது.
  • பெரியாற்றின் குறுக்கே கட்டப்பட்டதால் முதலில் பெரியாறு அணை என்றழைக்கப்பட்டது.
  • முல்லையாறு மற்றும் பெரியாறு இரண்டும் சேருமிடத்தின்கீழ் அமைந்துள்ளதால் இரு ஆறுகளின் பெயர்களையும் இணைத்து ’முல்லைப் பெரியாறு அணை’என்ற பெயரால் அழைக்கப்படுகிறது.
  • பெரியாறு மேற்குத் தொடர்ச்சி மலையில் தொடங்கி மேற்குநோக்கி ஓடி அரபிக்கடலில் கலக்கிறது.

இஸ்ரோ திட்டங்கள்:

  • இஸ்ரோவின் 11- ஆவது தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த வி.நாராயணன் நியமிக்கப்பட்டார்.
  • இந்திய அரசின் முதன்மையான தேசிய விண்வெளி முகமை ஆகும்.
  • பெங்களூரில் தலைமையுடம் கொண்ட இஸ்ரோ 1969 – இல் உருவாக்கப்பட்டது.
  • இஸ்ரோ உலகின் மிகப்பெரும் விண்வெளி ஆய்வு நிறுவனங்களில் ஆறாவதாக உள்ளது.
  • இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் ஆரியபட்டா சோவியத் ஒன்றியத்தால் ஏப்ரல் 19 , 1975 அன்று விண்ணில் ஏவப்பட்டது.
  • அமெரிக்காவின் வர்த்தக செயற்கைக்கோளை இஸ்ரோவின் மாக் 3 லாஞ்சர் மூலம் செலுத்தும் முயற்சியும், ககன்யான் திட்டத்தில் ராக்கெட் ஒன்றிணைக்கும் பணியும் தற்போது ஸ்ரீஹரிகோட்டாவில் நடைபெற்று வருகிறது.
  • “சந்திரயான் 3′ திட்டத்தின் மூலம் நிலவின் தென் பகுதியில் தரையிறங்கிய முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றது.
  • சந்திரயான் 4 திட்டத்தின் மூலம் நிலவில் இருந்து கனிமங்களை சேகரித்து வரும் முயற்சி மேற்கொள்ளப்படும்.
  • ககன்யான் திட்டம் இஸ்ரோ முன்பு உள்ள மிக முக்கியத் திட்டமாகும்.
  • இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக ராக்கெட் செலுத்தும் பணி வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
  •  “என்விஎஸ் 02′  ராக்கெட் ஏவும் பணி ஸ்ரீஹரிகோட்டாவில் நடைபெற்று வருகிறது.

தோ்தல் ஆணையா்கள் நியமன விவகாரம்:

  • ‘தோ்தல் ஆணையா்கள் நியமன விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவு மேலானதா அல்லது சட்டம் இயற்றும் அதிகாரம் மேலானதா என்பதை தீா்மானிக்க வேண்டியுள்ளது’என்ற விசாரணையை வரும் பிப்ரவரி 4-ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.
  • இந்திய தலைமைத் தோ்தல் ஆணையா், தோ்தல் ஆணையா்கள் ஆகியோரை நியமிக்க கொலீஜியம் போன்ற முறையை ஏற்படுத்தக் கோரி உச்சநீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் கடந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்டன.
  • தோ்தல் ஆணையா்களை நியமிக்க இதுவரை சட்டம் எதையும் நாடாளுமன்றம் இயற்றவில்லை.
  • அவ்வாறு சட்டம் இயற்றப்படும் வரை தலைமைத் தோ்தல் ஆணையரையும் மற்ற தோ்தல் ஆணையா்களையும் குடியரசுத் தலைவரே நியமிப்பார்.
  • அதே வேளையில், ஆணையா்கள் நியமனத்துக்கான பரிந்துரைக் குழுவில் பிரதமா், மக்களவை எதிர்க்கட்சித் தலைவா், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ஆகியோர்இடம்பெறுவா்.
  • மக்களவை எதிர்க்கட்சித் தலைவா் பதவி காலியாக இருக்கும்பட்சத்தில், எதிர்க்கட்சியில் அதிக இடங்களைக் கொண்ட கட்சியின் தலைவா் குழுவில் இடம்பெறுவார்.

ஜனவரி 9: பிரவாசி பாரதிய திவாஸ்

  • பிரவாசி பாரதிய திவாஸ் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 9 அன்று, இந்தியாவின் வளர்ச்சிக்கு வெளிநாட்டு இந்திய சமூகத்தின் பங்களிப்பைக் குறிக்கும் வகையில் அனுசரிக்கப்படுகிறது.
  • இந்த நாள் 1915 ஜனவரி 9 அன்று தென்னாப்பிரிக்காவிலிருந்து மும்பைக்கு மகாத்மா காந்தி திரும்பியதையும் நினைவுகூருகிறது.

தகவல் துளிகள்:

  • இந்தியாவில் பெண்களுக்கான சிறந்த நகரங்கள் பட்டியலில் சென்னை இடம்பிடித்துள்ளது.
  • இந்தியாவில் பெண்களுக்கான சிறந்த மாநிலங்கள் வாரியான மதிப்பீட்டில் கேரளம் முதலிடத்திலும், தெலங்கானா இரண்டாம் இடத்திலும், மகாராஷ்டிரம் மூன்றாம் இடத்திலும், தமிழ்நாடு நான்காம் இடத்திலும் உள்ளன.
  • பெண்களுக்கான சிறந்த நகரங்கள் வாரியான மதிப்பீட்டில் குருகிராம் முதலிடத்தில் உள்ளது.
  • பெண்களுக்கான சிறந்த சிறிய நகரங்களில் கோவை முதலிடத்திலும், கொச்சி இரண்டாம் இடத்திலும் உள்ளன.
  • ஆஸ்திரியாவில் இடைக்காலப் பிரதமராக தற்போதைய வெளியுறவுத் துறை அமைச்சா் அலெக்ஸாண்டா் ஷலன்பா்க் நியமிக்கப்பட்டுள்ளார்.

 

 

About the Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these