தினசரி நடப்பு நிகழ்வுகள் January 8, 2025
மாசுபாட்டை குறைக்கும் “பிஎஸ் 7′-ஐ அறிமுகப்படுத்த காலக்கெடு:
- 42 – ஆவது போக்குவரத்து மேம்பாட்டுக் குழு மற்றும் மாநில போக்குவரத்து அமைச்சர்கள் கூட்டம் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தலைமையில் தில்லியில் நடைபெற்றது.
- மாசுபாட்டைக் குறைக்க ஈரோ 7-க்கு சமமாக இந்தியாவில் வாகனங்களுக்காக முன்மொழியப்பட்ட உமிழ்வு தரநிலை பிஎஸ்-7 புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்துவதற்கான காலக்கெடு குறித்தும் விவாதிக்கப்பட்டது.
- நாடு முழுவதும் பியுசிசி 2.0 என்கிற மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ்களை வழங்குவதற்கான மென்பொருள் பயன்பாட்டை ஏற்றுக்கொள்ளவும் அதை மாநிலங்கள் ஏற்றுக் கொள்வதை உறுதி செய்யப்பட்டதோடு திருத்தப்பட்ட வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.
‘ஒரே நாடு ஒரே தோ்தல்: நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் முதல் கூட்டம்
- ‘ஒரே நாடு ஒரே தோ்தல்’மசோதாக்களை பரிசீலிக்க அமைக்கப்பட்ட நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் முதல் கூட்டம் நடைபெற உள்ளது.
- மக்களவை, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தோ்தல் நடத்தும் நடைமுறையை அமல்படுத்த மத்திய பாஜக அரசு திட்டமிட்டுள்ளது.
- இந்த மசோதாக்களுக்கு எதிக்கட்சிகள் கடும் ஆட்சேபம் தெரிவித்ததால், அவற்றை நாடாளுமன்ற கூட்டுக் குழு பரிசீலனைக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது.
- இதைத்தொடா்ந்து பாஜக மக்களவை உறுப்பினா் பி.பி. செளதரி தலைமையில் 39 போ் கொண்ட கூட்டுக் குழு அமைக்கப்பட்டது.
- இந்தக் குழுவின் முதல் கூட்டம் தில்லியில் நடைபெற உள்ளது.
ஜனவரி 8: பூமியின் சுழற்சி நாள்
- ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 8 – இல் புவி சுழற்சி தினம் அங்கீகரிக்கப்படுகிறது.
தகவல் துளிகள்:
- இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார்.
- 42 – ஆவது போக்குவரத்து மேம்பாட்டுக் குழு மற்றும் மாநில போக்குவரத்து அமைச்சர்கள் கூட்டம் தில்லியில் நடைபெற்றது.
- குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதற்காக “பாரத்போல்’ இணையதளத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தில்லியில் தொடங்கிவைத்தார்.
- இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) 11-ஆவது தலைவராக வி.நாராயணன் நியமிக்கப்பட்டார்.
- தற்போதைய இஸ்ரோ தலைவா் எஸ்.சோமநாத்.
- தமிழ் வளா்ச்சிக்கு சிறந்த பங்களிப்புகளை வழங்கிய 26 பேருக்கு 2023 – ஆம் ஆண்டுக்கான பல்வேறு விருதுகளை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வழங்கினார்.
- ஐசிசி டிசம்பர் மாத சிறந்த வீராங்கனை விருதுக்கான போட்டியாளர்களில் ஒருவராக இந்திய வீராங்கனை ஸ்மிருந்தி மந்தனாவை ஐசிசி தேர்வு செய்துள்ளது.