தினசரி நடப்பு நிகழ்வுகள் January 6
இந்தியாவில் அதிகரிக்கும் அந்நிய நேரடி முதலீடு:
- அந்நிய நேரடி முதலீடுகள் இந்தியாவில் வேகமாக அதிகரித்து வருகிறது, இது விரைவான பொருளாதார வளா்ச்சி மற்றும் லட்சக்கணக்கான புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குகிறது, என மத்திய வர்த்தக தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.
- அன்னிய நேரடி முதலீடு (Foreign direct investment, FDI) ஒரு நாட்டில் மற்றொரு நாட்டு நபரோ நிறுவனமோ தயாரிப்பு அல்லது வணிகத் துறையில் நேரடியாக முதலீடு செய்வதாகும். இத்தகைய முதலீடு அந்நாட்டில் உள்ளதோர் நிறுவனத்தை வாங்குவதன் மூலமோ அல்லது தனது நிறுவனத்தினை விரிவுபடுத்துவதாலோ இருக்கலாம். இது அந்த நாட்டு நிறுவனங்களின் பங்குகளிலோ அல்லது பிணைப்பத்திரங்களிலோ முனைப்பற்ற முதலீடு செய்வதல்ல.
- அன்னிய நேரடி முதலீட்டின் மூலதனப் பங்கு ஓர் குறிப்பிட்ட காலத்தில் நிகர (உள்வரவு – வெளிப்போக்கு) திரள் அன்னிய நேரடி முதலீடாகும்.
- உற்பத்திக் காரணிகள் பன்னாட்டளவில் பரிமாற்றம் கொள்வதற்கான ஓர் எடுத்துக்காட்டு அன்னிய நேரடி முதலீடாகும்.
தமிழக அரசின் விருதுகள் அறிவிப்பு:
- தமிழக அரசின் சார்பில் திருவள்ளுவர் திருநாளன்று வழங்கப்படும் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
- அம்பேத்கர் விருது – விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலர் து. ரவிக்குமாருக்கும், பெரியார் விருது – திராவிடர் கழகம் விடுதலைக் கழகப் பொதுச் செயலர் விடுதலை ராஜேந்திரனுக்கும் வழங்கப்பட உள்ளது.
- 2025 – ஆம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது – புலவர் மு.படிக்கராமுவுக்கு வழங்கப்பட உள்ளது. 2024 – ஆம் ஆண்டுக்கான அண்ணா விருது – மூத்த அரசியல் தலைவர் எல்.கணேசன், பாரதியார் விருது – கவிஞரும் பாடலாசிரியருமான கபிலன், பாரதிதாசன் விருது – கவிஞா் செல்வகணபதி, திரு.வி.க. விருது -எழுத்தாளரும் மருத்துவருமான ஜி.ஆா்.ரவீந்திரநாத், கி.ஆ.பெ.விசுவநாதம் விருது – எழுத்தாளர் வே.மு.பொதியவெற்பன் ஆகியோருக்கு வழங்கப்பட உள்ளன.
- விருதாளர்களுக்கு விருதுத் தொகையாக தலா ரூ 2 லட்சம் வழங்கப்பட உள்ளது.
- 2024-ஆம் ஆண்டுக்கான பெரியார் விருது – திராவிடர் விடுதலைக் கழகப் பொதுச் செயலர் விடுதலை ராஜேந்திரன், அம்பேத்கர் விருது – விடுதலைச் சிறுத்தைகள் கட்சிப் பொதுச் செயலர் து.ரவிக்குமார் ஆகியோருக்கும் வழங்கப்பட உள்ளது.
- இந்த விருதாளா்களுக்கு விருதுத் தொகையாக தலா ரூ. 5 லட்சம் வழங்கப்பட உள்ளது.
- கலைஞா் விருது, கருணாநிதியிடம் சிறப்பு உதவியாளராகப் பணியாற்றியவரும் எழுத்தாளருமான முத்து வாவாசிக்கு வழங்கப்பட உள்ளது.
- திருவள்ளுவர் திருநாளான ஜனவரி 15 – ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் விருதாளர்கள் அனைவருக்கும் விருது வழங்கவுள்ளார்.
ஜனவரி 6: உலக போர் அனாதைகள் தினம்
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 6 ஆம் தேதி, போர் அனாதைகளின் அவல நிலையைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அவர்கள் எதிர்கொள்ளும் அதிர்ச்சிகரமான நிலைமைகளை நிவர்த்தி செய்யவும் உலக போர் அனாதைகள் தினம் கொண்டாடப்படுகிறது.
ஜனவரி 6: குரு கோவிந்த் சிங் ஜெயந்தி
- பத்து சீக்கிய குருக்களில் பத்தாவது குரு குரு கோவிந்த் சிங் ஆவார்.
- 1666 ஆம் ஆண்டு டிசம்பர் 22 – ஆம் தேதி, பீகாரில் உள்ள பாட்னாவில் பிறந்தார்.
தகவல் துளிகள்:
- 1988 – ஆம் ஆண்டில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சட்டம்,1988 மூலம் நிறுவப்பட்டது.
- இந்தியாவிலேயே மிக நீளமான தொலைவைக் கொண்ட தேசிய நெடுஞ்சாலையாக தேசிய நெடுஞ்சாலை எண் 44 (NH 44) இருக்கிறது.
- பெரம்பலூா் மாவட்டத்தில் தேசிய கல்மரப் பூங்கா அமைந்துள்ளது.
- ஆண்டுதோறும் டிசம்பர் கடைசி வாரம் குறள் வாரமாக கொண்டாடப்படும்’ என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
- ஆண்டுதோறும் 133 உயர்கல்வி நிறுவனங்களில், திருக்குறள் தொடர்பான கலை இலக்கிய அறிவுசார் போட்டிகள் மற்றும் கருத்தரங்குகள் நடத்தப்படும் என மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.
- நிலையற்ற அரசியல் சூழல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள பாகிஸ்தானுக்கு ரூ 1.70 லட்சம் கோடி கடன் வழங்க உலக வங்கி ஒப்புதல் அளிக்கவுள்ளது.
- அமெரிக்கா அரசின் மிக உயரிய விருதாக கருதப்படும் அதிபர் சுதந்திர பதக்கம்’ விருதை அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சா் ஹிலாரி கிளிண்டன், தொழிலதிபர் ஜார்ஜ் சோரஸ், ஹாலிவுட் நடிகர் டென்சில் வாஷிங்டன் உள்பட 19 பேருக்கு வழங்க உள்ளது.
- ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள உலக மகா கோடீஸ்வரர்கள் பட்டியலில், 2025 இல் உலக பெரும் கோடீஸ்வரராக அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க் திகழ்கிறார்.
- அமேஸான் நிறுவனர் ஜெஃப் பெஸோஸ் 233.5 பில்லியன் டாலர்கள் சொத்து மதிப்புடன் இரண்டாமிடத்தில் உள்ளார்.
- பார்டர் – கவாஸ்கர் கிரிக்கெட் கோப்பையை, ஆஸ்திரேலிய அணி கைப்பற்றியுள்ளது.