5th January Daily Current Affairs – Tamil

பசுமை ஹைட்ரஜன் துறையில் இந்தியா முன்னிலை:

  • பசுமை ஹைட்ரஜன் துறையில் மற்ற நாடுகளைவிட இந்தியா முன்னிலையில் உள்ளது என்று மத்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை அமைச்சா் பிரல்ஹாத் ஜோஷி தெரிவித்தார்.
  • மத்திய பிரதேச மாநிலம், ஓம்காரேஸ்வா் அணையில் மிதக்கும் சூரிய மின் உற்பத்தி நிலையம் அமைந்துள்ளது.
  • உலகிலேயே மிகப் பெரிய அளவிலான பசுமை அமோனியா உற்பத்தி திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்பந்தம் கோரியுள்ளது.
  • இதேபோல், குஜராத் கடல் பகுதியில் காற்றாலைகள் அமைக்கும் திட்டத்துக்கான ஒப்பந்தங்களும் கோரியுள்ளது.
  • ஓம்காரேஸ்வா் அணையில் உள்ள மிதக்கும் சூரிய மின் உற்பத்தி நிலையத்தில் 278 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
  • இந்த மின்சாரம் தில்லி மெட்ரோவுக்கு விநியோகிக்கப்படுகிறது.
  • சூரிய மின்சக்தி மூலம் 2030 – ஆம் ஆண்டுக்குள் 500 ஜிகாவாட், 2047 – ஆம் ஆண்டுக்குள் 2047 ஜிகாவாட் மின் உற்பத்தி என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

விண்வெளியில் செடி வளர்ப்பு திட்டம்: இஸ்ரோ

  • விண்வெளியில் தாவர வளர்ப்பு சோதனை முயற்சியை செய்து பார்க்க இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டமிட்டிருந்தனர்.
  • அதன்படி, பிஎஸ்எல்வி சி-60 விண்கலம் மூலம் விண்வெளிக்குக் கொண்டு செல்லப்பட்ட காராமணி விதைகள் முளைவிட்டிருப்பதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
  • ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து டிசம்பர் 30ஆம் தேதி பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
  • பூமியிலேயே, விண்வெளியின் சூழலில் வளருவதற்கு ஏற்ப மற்றும் குறுகிய கால பயிராக இருக்கும் விதைகள் பரிசோதிக்கப்பட்டன்.
  • இதன்படி பல்வேறு விதைகளை ஆராய்ந்து இறுதியாகத்தான் காராமணி விதை தேர்வு செய்யப்பட்டது.
  • ஒரு மூடிய பெட்டகத்துக்குள் எட்டு காராமணி விதைகள் வைத்த தும்பா என்று பெயரிடப்பட்ட சிறுகோள் இதற்கென தயாரிக்கப்பட்டு, மைக்ரோ ஈர்ப்பு விசை சூழலில் 5 முதல் 7 நாள்கள் வரை இது தொடர்ந்து கண்காணிக்கப்படும்.
  • அதில், காராமணி முளை விடுதல் மற்றும் முதல் இரண்டு இலைகள் வளர்வது மட்டுமே முதற்கட்ட ஆய்வு நிலைகளாக உருவாக்கப்பட்டுள்ளன.
  • விண்வெளியில் வேளாண்மை செய்ய முடியுமா என்பதை ஆய்வு செய்யும் வகையிலும், வருங்காலத்தில் விண்வெளியில் வேளாண் சூழலை ஏற்படுத்துவதற்கான முன் முயற்சியாகவும் இந்த சோதனையை இஸ்ரோ மேற்கொண்டுள்ளது.
  • பிஎஸ்எல்வி-சி60 ராக்கெட் மூலம் ஏவப்பட்ட 24 சிறிய செயற்கைக்கோள்களில் CROPS எனப்படும் விஎஸ்எஸ்சி துணை செயற்கைக் கோளில், நுண் புவியீர்ப்புச் சூழலில் காராமணி விதைகள் வைத்து அனுப்பப்பட்டது.

பாரதிய அந்தாரிக்ஷ் மையம்:

  • பாரதிய அந்தாரிக்ஷ் மையம் எனப்படும் இந்திய ஆய்வு மையத்தை 2035 – ஆம் ஆண்டுக்குள் விண்ணில் நிறுவ இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
  • அதன் ஒரு பகுதியாக ஸ்பேடெக்ஸ் திட்டத்தின்படி, விண்ணுக்கு ஸ்பேடெக்ஸ் ஏ மற்றும் ஸ்பேடெக்ஸ் பி என 2 விண்கலன்களை தனியார் நிறுவன பங்களிப்புடன் இஸ்ரோ வடிவமைத்து அனுப்பியிருக்கிறது.
  • இந்த விண்கலன்களை ஒருங்கிணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படவிருக்கின்றன.
  • விண்வெளியில், இந்தியா ஆய்வு மையத்தை நிறுவியதும், இஸ்ரோ மிக ஆழமான பல ஆய்வுகளை மேற்கொள்ளவும் திட்டமிட்டுள்ளது.

சிந்துவெளிப் பண்பாட்டு கண்டுபிடிப்பு பன்னாட்டுக் கருத்தரங்கம்:

  • தமிழக அரசின் தொல்லியியல் துறை சார்பில் சிந்துவெளிப் பண்பாட்டு கண்டுபிடிப்பு நூற்றாண்டு நிறைவு பன்னாட்டுக் கருத்தரங்கை முதல்வா் மு.க. ஸ்டாலின் தொடக்கி வைத்தார்.
  • ‘சிந்துவெளி வரிவடிவங்களும் தமிழ்நாட்டுக் குறியீடுகளும்: ஒரு வடிவவியல் ஆய்வு’என்ற நூலையும் முதல்வா் வெளியிட்டு உரையாற்றவுள்ளார்.
  • சிந்துவெளிப் பண்பாட்டுக் கண்டுபிடிப்பை உலகுக்கு அறிவித்த இந்திய தொல்லியல் துறையின் முன்னாள் தலைமை இயக்குநா் சா் ஜான் ஹீபர்ட் மார்ஷல் சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டவுள்ளார்.

ஜனவரி 5: தேசிய பறவை தினம்

  • நாடு முழுவதும் உள்ள இயற்கை ஆர்வலர்கள், பறவை ஆர்வலர்கள் ஆண்டுதோறும் ஜனவரி 5 ஆம் தேதி தேசிய பறவை தினம் கொண்டாடப்படுகிறது.
  • தேசிய பறவைகள் தினம் 2002 – இல் பறவைகள் நலக் கூட்டணியால் (AWC) நிறுவப்பட்டது.
  • இந்தியாவின் தேசிய பறவை இந்திய மயில் 1963 – இல் தேசிய பறவையாக அறிவிக்கப்பட்டது.

தகவல் துளிகள்:

  1. வங்கதேசத்தைச் சோ்ந்த 50 நீதிபதிகள், இந்தியாவில் அரசு நீதித்துறை அகாதெமிகளில் 10 நாள்கள் பயிற்சி பெறவுள்ளனா்.
  2. மத்திய பிரதேசத்தின் போபாலில் உள்ள தேசிய நீதித்துறை அகாதெமி மற்றும் மாநில நீதித்துறை அகாதெமியில் வரும் பிப்ரவரி 10 முதல் 20 – ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த பயிற்சிக்கான முழு செலவையும் இந்திய அரசே ஏற்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  3. நாட்டின் 57% பள்ளிகளில் மட்டுமே கணினி வசதி மட்டுமே இருப்பதாக மத்திய கல்வி அமைச்சகத்தின் 2023 – 24 ஆம் கல்வியாண்டுக்கான ‘யுடிஐஎஸ்இ தரவுகளில் தெரிய வந்துள்ளது.
  4. ராஜஸ்தானில் உள்ள அஜ்மீா் தா்காவில் சூஃபி துறவி காஜா மொய்னுதீன் சிஷ்டியின் நினைவு நாளான ‘உருஸ்’விழாவுக்கு பிரதமா் மோடி ஆண்டுதோறும் புனிதப் போர்வை வழங்கி வருகிறார்.
  5. பழநியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் கடந்த ஆகஸ்ட் 24, 25 தேதிகளில் நடைபெற்றது.
  6. புது தில்லியில் நடைபெற்ற ஜூனியா் தேசிய குதிரையேற்ற சாம்பியன்ஷிப் போட்டியில் கெவின் கேப்ரியல் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
  7. பிசிசிஐ செயலராக செயல்பட்டு வந்த ஜெய் ஷா, கடந்த ஆண்டு ஐசிசியின் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
  8. பிசிசிஐ-யின் புதிய செயலராக தேவஜித் சாய்கியா பொறுப்பேற்கவுள்ளார்.

 

About the Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these