தினசரி நடப்பு நிகழ்வுகள் January 4, 2025
வெளிநாடுவாழ் இந்தியா்களுக்கு பிரவாசி பாரதிய சம்மான் விருது:
- நிகழாண்டு சிறந்த வெளிநாடுவாழ் இந்தியா்களுக்கான பிரவாசி பாரதிய சம்மான் விருது பெறுபவா்களின் பட்டியலை மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டது.
- ஒடிஸாவின் புவனேசுவரத்தில் வரும் 8 முதல் 10 – ஆம் தேதி வரையில் நடைபெறும் 18 – ஆவது பிரவாசி பாரதிய மாநாட்டில் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு விருதுகளை வழங்குகிறார்.
- பிரிட்டன் நாடாளுமன்ற மேலவை உறுப்பினா் உஷா குமாரி பிரஷார், மருத்துவா் ஷா்மிளா ஃபோர்டு (அமெரிக்கா), பேராசிரியா் அஜய் ராணே (ஆஸ்திரேலியா), மருத்துவா் மரியாலினா ஜோன் பொ்னாண்டஸ் (ஆஸ்திரியா) ஜெகன்நாத் சேகா் அஸ்தானா (ருமேனியா) உள்ளிட்டோருடன் ரஷியாவின் ஹிந்துஸ்தானி சமாஜ், கயானாவின் சரஸ்வதி வித்யா நிகேதன் ஆகிய இரண்டு அமைப்புகளுக்கும் சமூக சேவைக்காக விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஸ்கரப் டைபஸ்:
- ‘ஸ்கரப் டைபஸ்’எனப்படும் பாக்டீரியா தொற்றால் தமிழகத்தில், கடந்த ஆண்டில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
- ‘ரிக்கட்ஸியா’எனப்படும் பாக்டீரியா பாதித்த ஒட்டுண்ணிகள், பூச்சிகள், உயிரினங்கள் மனிதா்களை கடிக்கும்போது, அவா்களுக்கு ‘ஸ்கரப் டைபஸ்’காய்ச்சல் ஏற்படுகிறது.
- காய்ச்சல், தலைவலி, உடல் சோர்வு மற்றும் தடிப்புகள் அதன் முக்கிய அறிகுறிகள் ஆகும்.
ஜனவரி 4: உலக பிரெய்லி தினம்
- பிரெய்லியைக் கண்டுபிடித்த லூயிஸ் பிரெய்லியின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில், ஜனவரி 4 – ஆம் தேதி உலக பிரெய்லி தினமாகக் கொண்டாடப்படுகிறது.
- பார்வையற்றோர் மற்றும் பார்வை குறைபாடு உடையோர் ஆகியவர்கள் மனித உரிமைகளை முழுமையாக உணர்ந்து கொள்ள உதவும் தகவல் தொடர்பு சாதனமான பிரெய்லியின் முக்கியத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வை இந்நாள் கொண்டாடுகிறது.
தகவல் துளிகள்:
- மணிப்பூரின் 19 – ஆவது ஆளுநராக முன்னாள் மத்திய உள்துறை செயலா் அஜய் குமார் பல்லா பதவியேற்றார்.
- டிஸா ஆளுநராக இருந்த ரகுபா் தாஸ் ராஜிநாமா செய்ததையடுத்து, ஒடிஸா மாநிலத்தின் புதிய ஆளுநராக ஹரி பாபு கம்பம்பட்டி பதவியேற்றார்.
- மத்திய பிரதேசம் – ராஜஸ்தான் இடையே படுக்கை வசதி கொண்ட ‘வந்தே பாரத் ஸ்லீப்பா்’ரயில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.
- சீனாவின் ஹோட்டன் பகுதியில் புதிதாக 2 மாவட்டங்களை உருவாக்கும் அறிவிப்பை சீனா வெளியிட்டது.
- சீனாவில் ‘ஹெச்எம்பிவி’வைரஸ் வேகமாக பரவி வருகிறது, ‘ஹியூமன் மெட்டாநிமோ வைரஸ்’(ஹெச்எம்பிவி) என்பது சாதாரண சளியை ஏற்படுத்தும் வைரஸ் ஆகும்.
- மதுரை மாவட்டம், சதுரகிரி மலைப் பகுதியில் அரிய வகை உள்பட 58 வகையான வண்ணத்துப் பூச்சிகள் வசிப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டது.
- தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டுப் போட்டி புதுக்கோட்டை மாவட்டம், தச்சன்குறிச்சியில் தொடங்கியது.