தினசரி நடப்பு நிகழ்வுகள் December 31, 2024
நீா்மூழ்கிக் கப்பல்கள் திறன் மேம்பாடு:
- இந்தியா மற்றும் பிரான்ஸ் நிறுவனங்களுடன் ரூ 2,867 கோடி மதிப்பிலான இரண்டு ஒப்பந்தங்களை பாதுகாப்பு அமைச்சகம் மேற்கொண்டது.
- நீா்மூழ்கிக் கப்பல்களின் நீடித்து இயங்கும் தன்மை, எதிரி நாட்டு போர்க் கப்பல்களை அழிக்கும் ஆற்றல் ஆகியவற்றை மேம்படுத்தும் நோக்கில், இந்த ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
- இந்திய கடற்படையின் கல்வரி நீா்மூழ்கிக் கப்பலில், மின்னணு கனரக டோர்பிடோ குண்டுகளை ஒன்றிணைக்க இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தேசியம் 2024:
- கருந்துளை, ஊடுகதிர் உமிழ்வு உள்ளிட்ட வானியல் ஆய்வுக்காக ‘எக்ஸ்போசாட்’ செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது இஸ்ரோ. நாட்டில் அறிவியல் ஆய்வுக்காக அர்ப்பணிக்கப்பட்ட முதல் செயற்கைக்கோள் இதுவாகும்.
- சூரியனின் புறவெளி ஆய்வுக்காக அனுப்பப்பட்ட ஆதித்யா எல் -1 செயற்கைக்கோள், 127 நாள்கள் பயணத்துக்கு பிறகு தனது இலக்கை எட்டியது.
- கார்கிலில் இந்திய விமானப் படையின் சி -130 கனரக விமானம் இரவு நேரத்தில் முதல் முறையாக தரையிறங்கி சாதனை படைத்தது.
- வானிலை மாற்றங்களைக் கணிப்பதற்கான இன்சாட் -3டி செயற்கைக்கோள் ஜிஎஸ்எல்வி -எஃப்14 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
- விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ‘ககன்யான்’ திட்டத்துக்காக இந்திய விமானப் படை விமானிகள் நால்வர் (பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயர், அஜீத் கிருஷ்ணன், அங்கத் பிரதாப், சுபான்ஷு சுக்லா) தேர்வு செய்யப்பட்டனர்.
- லட்சத் தீவு கூட்டங்களில் ஒன்றான மினிகாய் தீவில் ஐஎன்எஸ் ஜடாயு கடற்படை தளம் தொடங்கப்பட்டது.
- ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டத்துக்கான பரிந்துரை அறிக்கையை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர்நிலைக் குழு மார்ச் 14 இல் சமர்ப்பித்தது.
- பிரதமர் மோடிக்கு பூடான் நாட்டின் உயரிய ‘ஆர்டர் ஆஃப் தி டிரக் கியால்போ’ விருது அளிக்கப்பட்டது.
- உலகின் சிறந்த 500 பல்கலைக்கழகங்கள்-உயர்நிலை கல்வி நிலையங்கள் பட்டியலில் சென்னை ஐஐடி, மும்பை ஐஐடி, தில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகம் உள்பட 69 இந்திய பல்கலைக்கழகங்கள் இடம்பெற்றன.
- பிரம்மோஸ் சூப்பர்சானிக் ஏவுகணைகளின் முதல் தொகுதியை பிலிப்பின்ஸூக்கு வழங்கியது இந்தியா, இதன் மூலம் இந்த வகை ஏவுகணைகளை இந்தியா முதல்முறையாக ஏற்றுமதி செய்தது.
- ஈரானில் சாபஹார் துறைமுக முனையத்தை இயக்கும் 10 ஆண்டு ஒப்பந்தத்தில் இந்தியா, ஈரான் கையொப்பம் இட்டது.
- நேபாளத்தில் இருந்து எவரெஸ்ட் சிகரத்தில் இளவயதில் ஏறிய இந்தியர் என்ற பெருமையை காம்யா கார்த்திகேயன் பெற்றார்.
- தேசிய பாதுகாப்பு ஆலோசகராக அஜீத் தோவல் தொடர்ந்து மூன்றாவது முறையாக நியமனம்.
- மக்களவைத் தலைவராக ஓம் பிர்லா தொடர்ந்து இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்டார்.
- நாட்டில் 113 புதிய மருத்துவக் கல்லூரிகளை அமைக்க தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி. தமிழ்நாட்டில் 5 கல்லூரிகளை அமைக்க அனுமதி.
- ராணுவ மருத்துவ சேவைகள் பிரிவின் முதல் பெண் தலைவராக லெஃப்டினன்ட் ஜெனரல் சாதனா சக்சேனா நியமிக்கப்பட்டார்.
- அந்தமான் தலைநகர் போர்ட் பிளேர் பெயரை ‘ஸ்ரீவிஜயபுரம்’ என மாற்ற மத்திய அரசு முடிவு செய்தது.
- பிரதமர் மோடி- மாலத்தீவு அதிபர் முகமது மூயிஸ் இடையிலான பேச்சுவார்த்தைக்கு பிறகு, மாலத்தீவால் எதிர்பார்க்கப்பட்ட இருதரப்பு கரன்ஸி மாற்று ஒப்பந்தம் கையொப்பமானது.
- ஹரியாணா முதல்வராக இரண்டாவது முறையாக நாயப் சிங் சைனி பதவியேற்றார்.
- குஜராத்தின் வதோதரா நகரில் நாட்டின் முதல் தனியார் ராணுவ விமான தயாரிப்பு ஆலையை ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸூடன் இணைந்து பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
- ‘ஆயுஷ்மான் பாரத்’ இலவச மருத்துவக் காப்பீட்டின்கீழ், 70 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய மூத்த குடிமக்கள் அனைவருக்கும் ரூ.5 லட்சம் வரை மருத்துவக் காப்பீடு வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.
- நாட்டின் தலைசிறந்த அரசு மற்றும் தனியார் உயர்கல்வி நிலையங்களில் சேர்க்கை பெறும் மாணவர்கள் எளிதாக கல்விக் கடன் பெற வழிவகுக்கும் பிரதமரின் ‘வித்யாலக்ஷ்மி’ திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.]
- உச்சநீதிமன்றத்தின் 51 -ஆவது தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா பதவியேற்றார்.
- ரஷியாவில் தயாரிக்கப்பட்ட ஏவுகணைகளுடன் கூடிய போர்க்கப்பலான ‘ஐஎன்எஸ் துஷில்’ இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டது.
- குடியரசு துணைத் தலைவரும் மாநிலங்களவைத் தலைவருமான ஜகதீப் தன்கரை பதவி நீக்குக் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவருவதற்கான நோட்டீஸை எதிர்க்கட்சிகளை சமர்ப்பித்தன.
- ரிசர்வ் வங்கியின் 26 -ஆவது ஆளுநராக சஞ்சய் மல்ஹோத்ரா பொறுப்பேற்றார்.
- ஒரே நாடு ஒரே தேர்தல்’ நடைமுறையை அமல்படுத்துவதற்கான இரு மசோதாக்கள் நாடாளுமன்ற கூட்டுக் குழு ஆய்வுக்கு பரிந்துரை, இக்குழுவின் தலைவராக பி.பி. செளதரி நியமனம்.
- மதுரை அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமையவுள்ள இடத்தை மறுஆய்வுக்கு உள்படுத்துமாறு மத்திய சுரங்கத் துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டது.
விண்வெளி ஆய்வில் இந்தியா புதிய சாதனை:
- விண்வெளிக்கு மனிதா்களை அனுப்பும் முன்னோட்ட முயற்சியாக, ஸ்பேடெக்ஸ் இரட்டை விண்கலன்களுடன் பிஎஸ்எல்வி சி -60 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.
- ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் மையத்தின் ஏவுதளத்திலிருந்து ஏவப்பட்டது.
- எதிர்காலத் தேவையை கருத்தில்கொண்டு ‘பாரதிய அந்தரிக்ஷா ஸ்டேஷன்’ எனும் இந்திய ஆய்வு மையத்தை 2035 -ஆம் ஆண்டுக்குள் விண்வெளியில் நிறுவ இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) முடிவு செய்துள்ளது.
- இந்தத் திட்டத்தின் முதல்கட்ட விண்கலன்கள் 2028 -ஆம் ஆண்டு விண்ணில் செலுத்தப்படவுள்ளன.
- இதற்காக ஸ்பேடெக்ஸ் ஏ மற்றும் ஸ்பேடெக்ஸ் பி என இரு விண்கலன்களை தனியார் நிறுவன பங்களிப்புடன் இஸ்ரோ வடிவமைத்தது.
- இந்த இரட்டை விண்கலன்கள் தலா 220 கிலோ எடை கொண்டவை.
- இந்தத் திட்டம் வெற்றி பெற்றால் வல்லரசு நாடுகளைப் போன்று விண்வெளியில் இந்தியாவாலும் ஆய்வு மையத்தை அமைக்க முடியும்.
- அதனுடன் ககன்யான், சந்திரயான்-4 திட்டங்கள் மற்றும் எதிர்கால விண்வெளி ஆராய்ச்சி நடவடிக்கைகளுக்கு உதவிகரமாகவும் அமையும்.
- சீனா, ரஷியா, அமெரிக்காவுக்குப் பின்னா் இந்தச் சாதனையை அடையும் 4 -ஆவது நாடு என்ற பெருமையையும் இந்தியா பெறும்.
தகவல் துளிகள்:
- மத்திய ரிசா்வ் காவல் படையின் (சிஆா்பிஎஃப்) புதிய தலைமை இயக்குநராக விதுல் குமார் நியமிக்கப்பட்டார்.
- நிகழாண்டு நாட்டின் வெளிநாட்டுக் கடன் ரூ 60.53 லட்சம் கோடியாக உயா்ந்துள்ளது.
- ஆப்கானிஸ்தானில் உள்ள வீடுகளில் பெண்கள் புழங்கும் இடங்களில் ஜன்னல்கள் வைப்பதற்கு தலிபான் அரசு தடை விதித்துள்ளது.
- இஸ்ரோ தலைவா் எஸ். சோமநாத்.
- உச்சநீதிமன்றத்தின் 51-ஆவது தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா.
- ரிசர்வ் வங்கியின் 26 -ஆவது ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா.