தினசரி நடப்பு நிகழ்வுகள் December 30, 2024
பிரதமா் ‘இன்டா்ன்ஷிப்’ திட்டம்:
- இந்தியாவில் வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குவதற்காக பிரதமர் வேலைவாய்ப்பு திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
- இத்திட்டம் அக்டோபர் 3, 2024 அன்று தொடங்கப்பட்டது.
- 2024-25 மத்திய பட்ஜெட்டில் ‘பிரதமா் இன்டா்ன்ஷிப்’திட்டம் அறிவிக்கப்பட்டது.
- அடுத்த ஐந்து ஆண்டுகளில், 10 மில்லியன் இளைஞர்களுக்கு நாட்டிலுள்ள சிறந்த 500 நிறுவனங்களுடன் 12 மாத வேலைவாய்ப்புகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- இதன்படி 5 ஆண்டுகளில் 1 கோடி இளைஞா்களுக்கு நாட்டின் முன்னணி 500 நிறுவனங்களின் பணி அனுபவம் பெறும் வாய்ப்பு வழங்கப்படும்.
- கடந்த அக்டோபரில் முன்னோடித் திட்டமாக 1.27 லட்சம் இளைஞா்களுக்கு நிறுவனப் பணி அனுபவம் பெற வாய்ப்பளிக்கப்பட்டது.
- விவகாரத் துறை அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், ‘பிரதமா் நிறுவனப் பணி அனுபவத் திட்டத்தில் நடப்பு நிதியாண்டில் முன்னோடித் திட்டமாக 1.27 லட்சம் பேருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
- இத்திட்டத்தில் பயனடையும் இளைஞா்களுக்கு மாதம் ரூ 5,000 வீதம் 12 மாதங்களுக்கு உதவித் தொகை வழங்கப்படும், இது தவிர ரூ.6,000 மானியமும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சியாங் நதியில் பிரம்மாண்ட அணை: சியாங் திட்டம்
- இந்திய எல்லையையொட்டி, தனது ஆக்கிரமிப்பில் உள்ள திபெத்தில் பாயும் பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே 1 டிரில்லியன் யுவான் செலவில், உலகின் மிகப் பெரிய அணையை கட்ட சீனா முடிவு செய்துள்ளது.
- இமயமலைப் பகுதியில் உள்ள மிகப் பெரிய பள்ளத்தாக்கில் வளைந்து அருணாசல பிரதேசத்துக்குள்ளும், பின்னா் வங்கதேசத்துக்குள்ளும் பிரம்மபுத்திரா நதி பாயும் நிலையில், அந்தப் பள்ளத்தாக்கில் அணை கட்டப்பட உள்ளது.
- இந்த அணையால் நதியின் நீரோட்டத்தை சீனா கட்டுப்படுத்தும். அத்துடன் அணையின் உயரம் மற்றும் கொள்ளளவு காரணமாக அவசர சூழல்களில் பெருமளவிலான நீரை சீனா வெளியேற்றவும் வழிவகுக்கும்.
- இந்நிலையில், அருணாசல பிரதேசத்தில் உள்ள உப்பரி சியாங் மற்றும் சியாங் மாவட்டங்களில் பாயும் சியாங் நதியில் 11,000 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட நீா்மின் திட்டம் மேற்கொள்ளப்பட உள்ளது.
- இதற்காக அந்த நதியின் குறுக்கே பிரம்மாண்ட அணை கட்டப்பட உள்ளது.
- அருணாசல பிரதேச மாநில முதல்வா் பெமா காண்டு.
இந்தியாவில் ‘வேவ்ஸ்’ மாநாடு:
- இந்தியாவில் முதல்முறையாக ‘உலக ஒலி-ஒளி பொழுதுபோக்கு (வேவ்ஸ்) மாநாடு’வருகின்ற 2025 பிப்ரவரி 5 -ஆம் தேதி முதல் 9 -ஆம் தேதி வரை தில்லியில் நடைபெறவுள்ளது.
- இது உலக பொருளாதார கூட்டாண்மை போன்ற சா்வதேச முக்கியத்துவம் வாய்ந்த அமைப்புகள் நடத்தும் மாநாட்டுக்கு இணையானதாகும்.
- இந்திய படைப்புகளை உலகளவில் கொண்டுசோ்க்க ஒரு வாய்ப்பாக இந்த மாநாடு அமையும்.
- (World Audio Visual and Entertainment Summit – WAVES)
புதுமைப்பெண் விரிவாக்க திட்டம்:
- தூத்துக்குடியில் புதுமைப் பெண் விரிவாக்கத் திட்டத்தை தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் முதல்வர் மு.கஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
- புதுமைப் பெண் திட்டம் அரசுப் பள்ளிகளில் படித்துள்ள மாணவிகளுக்கு மட்டுமல்லாமல், அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை தமிழ் வழியில் பயின்று உயர் கல்வியில் சேரும் மாணவிகளுக்கும் மாதம் ரூ 1000 வழங்கும் வகையில் தற்போது விரிவுபடுத்தப்படுகிறது.
தகவல் துளிகள்:
- உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் திரிவேணி சங்கமத்தில் ஜனவரி 13 -இல் மகா கும்பமேளா நடைபெற உள்ளது.
- முதல்முறையாக கும்பமேளா ஏற்பாடுகளில் செயற்கை நுண்ணறிவு ‘சாட்போட்’ உரையாடல் பயன்படுத்தப்படவுள்ளது.
- தமிழகத்தில் ஜனவரி முதல் விடுமுறை, ஓய்வூதிய பலன்களைப் பெற ‘களஞ்சியம்’ என்ற பெயரிலான செயலியை கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என பள்ளிக்கல்வி இயக்குநா் உத்தரவிட்டுள்ளார்.
- நாட்டில் 2015 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில் மலேரியா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு எண்ணிக்கை 80 சதவீதம் குறைந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- இந்தியாவில் அடுத்த ஆண்டு முதல்முறையாக உலக ஒலி-ஒளி கேளிக்கை (வேவ்ஸ்) உச்சிமாநாடு நடைபெறவிருக்கிறது.
- கடந்த மாத இறுதியில் ஃபிஜி தீவில் மத்திய அரசின் உதவியுடன் தமிழ் பயிற்றுவிக்கும் திட்டம் தொடங்கப்பட்டது, இத்தீவில் பயிற்சி பெற்ற தமிழாசிரியா்களால் தமிழ் பயிற்றுவிக்கப்படுவது கடந்த 80 ஆண்டுகளில் இதுவே முதல்முறையாகும்.
- தூத்துக்குடியில் புதுமைப் பெண் விரிவாக்கத் திட்டத்தை தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் முதல்வர் மு.கஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
- சத்தீஸ்கரில் நக்ஸல்களால் பாதிப்புக்கு உள்ளான பஸ்தா் பகுதியில் முதல்முறையாக ‘பஸ்தா் ஒலிம்பிக்’ போட்டி அண்மையில் நடத்தி முடிக்கப்பட்டது.
- நியூயார்க்கில் நடைபெற்ற ஃபிடே உலக ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் பெண்கள் பிரிவில் இந்தியாவைச் சேர்ந்த கொனேரு ஹம்பி சாம்பியன் பட்டம் வென்றுள்ளார், கொனேரு ஹம்பி இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.