28th December Daily Current Affairs – Tamil

தினசரி நடப்பு நிகழ்வுகள் December 28, 2024

 

முன்னாள் பிரதமா் டாக்டா் மன்மோகன் சிங் மறைவு:

  • டாக்டா் மன்மோகன் சிங் இந்தியாவின் பஞ்சாப் மாகாணத்தில் மேற்கு பஞ்சாபின் கா என்ற கிராமத்தில் செப்டம்பர் 26, 1932 – இல் பிறந்தார்.
  • 1971 – ல் அப்போதைய வெளிநாட்டு வர்த்தக அமைச்சகத்தில் டாக்டர் மன்மோகன் சிங் பொருளாதார ஆலோசகரானார்.
  • நிதி அமைச்சகத்தின் தலைமைப் பொருளாதார ஆலோசகராகவும், பொருளாதார விவகாரங்கள் துறையின் செயலாளராகவும், திட்டக் குழுவின் உறுப்பினர் செயலாளராகவும், இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராகவும் (1982 முதல் 1985 வரை) பணியாற்றினார்.
  • இந்தியாவின் இரண்டாவது மிக உயர்ந்த சிவில் விருதான பத்ம விபூஷன் (1987),கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் ஆடம் ஸ்மித் பரிசு ஆகிய விருதுகளை அவர் பெற்றார்.
  • டாக்டர் மன்மோகன் சிங் 1991 முதல் 1996 வரை இந்தியாவின் நிதியமைச்சராகப் பணியாற்றினார்.
  • இந்தியாவின் பொருளாதாரத்தைத் தாராளமயமாக்கும் பல கட்டமைப்புச் சீர்திருத்தங்களை மேற்கொண்டார்.
  • பொருளாதார சீர்திருத்தங்களுக்கான விரிவான கொள்கையை உருவாக்குவதில் அவரது பங்கு  அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
  • 1991 – இல், இந்தியா கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டபோது, ​​புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் பி. வி. நரசிம்ம ராவ், அரசியல்வாதியல்லாத மன்மோகன் சிங்கைத் தனது அமைச்சரவையில் நிதியமைச்சராகச் சேர்த்துக்கொண்டார்.
  • அவரது அமைச்சரவை தேசிய ஊரக சுகாதார இயக்கம், தனித்துவ அடையாள ஆணையம், ஊரக வேலை உறுதித் திட்டம், தகவல் அறியும் உரிமைச் சட்டம் உள்ளிட்ட பல முக்கிய சட்டங்களையும் திட்டங்களையும் நிறைவேற்றியது.
  • இவர் 2004 முதல் 2014 வரை 13 – ஆவது இந்தியத் தலைமையமைச்சராகப் பணியாற்றினார்.
  • டாக்டர் மன்மோகன் சிங் 22 மே 2004 அன்று இந்தியப் பிரதமரானார்.
  • இவர் மே 2009 வரை பிரதமராக பணியாற்றினார், மே 2009 முதல் 2014 வரை இரண்டாவது முறையாகவும் பிரதமரானார்.
  • இவர் ஒருபோதும் மக்களவை உறுப்பினராக இருந்ததில்லை, ஆனால், 1991 முதல் 2019 வரை அசாம் சார்பாகவும், 2019 முதல் 2024 வரை ராஜஸ்தான் சார்பாகவும், மாநிலங்களவை உறுப்பினராகப் பணியாற்றினார்.

தேர்தல் நன்கொடை:

  • 2023 – 24 ஆம் ஆண்டில் தோ்தல் நன்கொடையாக பாஜக ரூ 2,604.74 கோடியும், காங்கிரஸ் ரூ 281.38 கோடியும் பெற்றதாக தோ்தல் ஆணையம் தகவல் வெளியிட்டது.
  • பியூச்சா் கேமிங் அண்ட் சா்வீசஸ் நிறுவனம் பல்வேறு கட்சிகளுக்கு தோ்தல் நிதி பத்திரங்கள் திட்டம் மூலம் அதிக நன்கொடையை வழங்கியுள்ளது.
  • பியூச்சா் கேமிங் அண்ட் ஹோட்டல் சா்வீஸ்’ நிறுவனத்திடம் இருந்து ரூ 3 கோடியை பாஜக பெற்றுள்ளது,
  • இந்த நிறுவனத்தின் உரிமையாளா் சாண்டியாகோ மார்டின் ஆவார்.
  • அதேபோல் வடகிழக்குப் பிராந்தியத்தின் ஒரே தேசிய கட்சியான தேசிய மக்கள் கட்சி ரூ 14.85 லட்சம் நன்கொடை பெற்றுள்ளது.
  • 2018 – இல் மத்திய அரசு அறிமுகப்படுத்திய தேர்தல் பத்திரத் திட்டமானது அரசியல் கட்சிகள் நிதி பெறுவதற்கான கட்டுப்பாடுகளைத் தளர்த்தியது.
  • தேர்தல் பத்திரத் திட்டத்துக்காக, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் – 1951, நிறுவனங்கள் சட்டம் – 2013, வருமான வரிச் சட்டம் – 1961, அந்நிய நிதிப் பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டம் – 2010 (FCRA) ஆகிய நான்கு சட்டங்களில் மத்திய அரசு திருத்தம் கொண்டுவந்தது.
  • தேர்தல் பத்திரத்தை மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட வங்கியிலுள்ள, வங்கிக் கணக்கின் மூலமே பெற முடியும்.
  • அந்த வகையில் பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) தேர்தல் பத்திரத்தை விநியோகிக்கிறது.
  • தேர்தல் பத்திரத் திட்டத்தின்படி, இந்தியாவின் எந்த ஒரு குடிமகனும், நிறுவனமும் எஸ்பிஐ வங்கியிலிருந்து தேர்தல் பத்திரத்தைப் பெற்று, ரூ 1,000 முதல் ரூ 10,000, ரூ 1,00,000, ரூ 10,00,000 மற்றும் ரூ 1 கோடி வரை அரசியல் கட்சிகளுக்கு நிதியாக வழங்க முடியும்.
  • இவ்வாறு அளிக்கப்படும் தேர்தல் பத்திரத்தில், நிதியை யார் அளிக்கிறார்கள், எந்தக் கட்சிக்கு நிதி வழங்கப்படுகிறது என்பன போன்ற தகவல்கள் குறிப்பிடப்பட்டிருக்காது.

புலிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு:

  • மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து 15 புலிகள் ராஜஸ்தான், சத்தீஸ்கா், ஒடிஸா ஆகிய மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன.
  • அந்த மாநிலங்களில் புலிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
  • மத்திய பிரதேசத்தின் பந்த்நாவ்கா், பெஞ்ச், கான்கா தேசிய பூங்காக்களில் இருந்து இந்த புலிகள் அனுப்பி வைக்கப்படவுள்ளன.
  • இந்தியாவில் மத்திய பிரதேசத்தில் மிக அதிகமாக 785 புலிகள் உள்ளன.
  • இதற்கு அடுத்து இடத்தில கா்நாடகம், உத்தரகண்ட் ஆகிய மாநிலங்கள் உள்ளன.

பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே உலகின் பெரிய அணை:

  • பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே கட்டப்பட உள்ள உலகின் மிகப் பெரிய அணையால் இந்தியாவுக்கு பாதிப்பு ஏற்படாது என்று சீனா தெரிவித்துள்ளது.
  • இந்திய எல்லையையொட்டி, திபெத்தில் பாயும் பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே 1 டிரில்லியன் யுவான் செலவில், உலகின் மிகப் பெரிய அணையை கட்ட சீனா முடிவு செய்துள்ளது.
  • இமயமலைப் பகுதியில் உள்ள மிகப் பெரிய பள்ளத்தாக்கில் வளைந்து அருணாசல பிரதேசத்துக்குள்ளும், பின்னா் வங்கதேசத்துக்குள்ளும் பிரம்மபுத்திரா நதி பாயும் நிலையில், அந்தப் பள்ளத்தாக்கில் அணை கட்டப்பட உள்ளது.

தகவல் துளிகள்:

  • இந்தியாவில் நிலக்கரியைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் அனல் மின் உற்பத்தி  3.87 சதவீதம் உயா்ந்துள்ளது.
  • தற்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா.
  • ராஜஸ்தான் உயா்நீதிமன்ற நீதிபதிகளாக சந்திரசேகா் சா்மா, பிரமிள் குமார் மாத்தூர் மற்றும் சந்திர பிரகாஷ் ஸ்ரீமாலி ஆகியோர் நியமிக்கப்பட உள்ளனர்.
  • உத்தரகண்ட் உயா்நீதிமன்ற நீதிபதியாக ஆஷிஷ் நைதானி, மும்பை உயா்நீதிமன்ற நீதிபதியாக பிரவின் சேஷ்ராவ் பாட்டீல், அலகாபாத் உயா்நீதிமன்ற நீதிபதியாக பிரவின் குமார் கிரி ஆகியோர் நியமிக்கப்பட உள்ளனர்.
  • சென்னையில் உற்பத்தி தொழில்நுட்பங்கள் தொடா்பான ‘செளமெக்ஸ்’கண்காட்சி தொடங்கியது.
  • 48 – ஆவது சென்னை புத்தகக் காட்சியை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
  • திண்டுக்கல்லில் நடைபெற்ற 43 – ஆவது தேசிய அளவிலான ஜூனியா் மகளிர் ஹேண்ட்பால் போட்டியில் ஹரியாணா அணி சாம்பியன் பட்டம் வென்றது.

 

About the Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these