27th December Daily Current Affairs – Tamil

தினசரி நடப்பு நிகழ்வுகள் December 27, 2024

 

2024 மக்களவைத் தோ்தல் தரவுகள் வெளியீடு:

  • மக்களவைத் தோ்தலில் பதிவான மொத்த வாக்குகளில் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட 6 தேசிய கட்சிகள் மட்டும் 63.35 சதவீத வாக்குகளை பெற்றுள்ளன.
  • மக்களவைத் தோ்தலில் பாஜக, காங்கிரஸ், பகுஜன் சமாஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ஆம் ஆத்மி, தேசிய மக்கள் கட்சி ஆகிய 6 தேசியக் கட்சிகள், 47 அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சிகள், 690 பதிவு செய்யப்பட்ட அல்லது அங்கீகரிக்கப்படாத கட்சிகள் தோ்தலில் போட்டியிட்டன.
  • இம்முறை 800 பெண் வேட்பாளா்கள் இருந்தனா்,அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 111, உத்தர பிரதேசத்தில் 80, தமிழகத்தில் 77 பெண் வேட்பாளா்கள் போட்டியிட்டனா்.
  • அதேநேரம், மொத்தமுள்ள 543 மக்களவைத் தொகுதிகளில் 152 இடங்களில் பெண் வேட்பாளா்கள் யாரும் போட்டியிடவில்லை.
  • தோ்தல் முடிவில், 18 – ஆவது மக்களவைக்கு மொத்தம் 74 பெண்கள் தோ்வாகினா்.
  • சுயேச்சைகள் 2.79 சதவீத வாக்குகளை பெற்றுள்ளனா்.
  • நோட்டாவுக்கு 0.99 சதவீதம் வாக்குகள் கிடைத்துள்ளன, இது 2019 – இன் 1.06 சதவீதத்தைவிட குறைவாகும்.
  • மக்களவைத் தோ்தலில் பொதுத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளா்கள் ரூ 25,000, தனித்தொகுதி வேட்பாளா்கள் ரூ 12,500 வைப்புத்தொகையாக செலுத்த வேண்டும்.
  • தோ்தல் சட்டத்தின்படி, தொகுதியில் பதிவாகும் மொத்த செல்லுபடியாகும் வாக்குகளில் ஆறில் ஒரு பங்குக்கு குறைவாக வாக்குகளைப் பெறும் வேட்பாளருக்கு வைப்புத்தொகை திரும்ப அளிக்கப்படாது.

17 பேருக்கு பிரதமரின் தேசிய குழந்தைகள் விருது:

  • 17 சிறுவா், சிறுமிகளுக்கு பிரதமரின் தேசிய குழந்தைகள் விருதுகளை (பிரதான் மந்திரி ராஷ்டிரிய பால் புரஸ்கார்) குடியரசுத் தலைவா் வழங்கினார்.
  • இதில் சென்னை மாணவி ஜனனி நாராயணன் விருது பெற்றார்.
  • கலை-கலாச்சாரம், துணிச்சல், புதுமை, அறிவியல்-தொழில்நுட்பம், சமூக சேவை, விளையாட்டு, சுற்றுச்சூழல் ஆகிய ஏழு பிரிவுகளில் அசாதாரண சாதனைகளை புரிந்தவா்களுக்கு பிரதான் மந்திரி ராஷ்டிரிய பால் புரஸ்கார் என்கிற தேசிய குழந்தைகள் விருது வழங்கப்படுகிறது.
  • சீக்கிய குரு கோவிந்த் சிங்கின் நான்கு மகன்களின் வீரம், துணிச்சலை நினைவு கூறும் ’வீர பாலகர் தினமாகக்’ கொண்டாடப்படும் டிசம்பர் 26 – ஆம் தேதி இந்த தேசிய குழந்தைகள் விருதும் குடியரசுத் தலைவரால் ஆண்டு தோறும் வழங்கப்படுகிறது.

நெதா்லாந்து நாட்டில் இருந்து இரு சிவப்பு பாண்டா கரடிகள்:

  • நெதா்லாந்து நாட்டில் இருந்து இரு அரிய வகை சிவப்பு பாண்டா கரடிகள் மேற்கு வங்கத்தின் டார்ஜிலிங் வன உயிரியல் பூங்காவுக்கு கொண்டுவரப்பட்டன.
  • டார்ஜிலிங் பூங்காவில் சிவப்பு பாண்டாக்கள் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
  • இங்கு ஏற்கெனவே 19 சிவப்பு பாண்டாக்கள் உள்ளன.
  • சிவப்பு பாண்டாக்களுக்கு தேவையான குளிரான வானிலை எப்போதும் நிலவுவதால் டார்ஜிலிங் பூங்கா தோ்வு செய்யப்பட்டது.
  • 1990 – ஆம் ஆண்டு முதல் முதலில் ஒரு ஆண் மற்றும் 3 பெண் சிவப்பு பாண்டாக்கள் கொண்டுவரப்பட்டன.
  • இந்த வகை சிவப்பு பாண்டாக்கள் கிழக்கு ஹிமாசல மலையில் இருந்து தென் மேற்கு சீனா வரையிலான பகுதியை பூா்விகமாகக் கொண்டவை.

பிரம்மபுத்திரா குறுக்கே உலகின் மிகப்பெரிய அணை:

  • இந்தியாவின் எல்லையில் பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே உலகின் மிகப்பெரிய அணையைக் கட்ட சீனா முடிவு செய்துள்ளது.
  • ஹிமாலய மலைத்தொடா்கள் வழியாக அருணாசல பிரதேசத்தை வந்தடைந்து பின் வங்தேசத்துக்கு பிரம்மபுத்திரா நதி பாய்ந்தோடும் பகுதிகளில் உள்ள பெரும் மலைக் குன்றுகளில் இந்த அணை கட்டப்படுகிறது.
  • ஏற்கெனவே, பெரும் முதலீட்டில் த்ரீ கார்ஜஸ் மூன்று அணையை கட்டியதோடு, திபெத்தில் ரூ 12,500 கோடி மதிப்பிலான ஜாம் நீா்மின் நிலையத் திட்டத்தையும் சீனா செயல்படுத்தியுள்ளது.
  • ரூ 11 லட்சம் கோடி முதலீட்டில் கட்டப்படும் இந்த அணை உலகின் மிகப்பெரிய உள்கட்டமைப்பு திட்டமாகும்.

டிசம்பர் 27: தொற்றுநோய் தயாரிப்புக்கான சர்வதேச தினம்

  • 2020 – ஆம் ஆண்டு டிசம்பர் 27 – ஆம் தேதி நடத்தப்பட்ட முதல் சர்வதேச தொற்றுநோய் தயாரிப்பு தினம், தொற்றுநோய்களைத் தடுப்பது, தயார்படுத்துதல் மற்றும் கூட்டாண்மை ஆகியவற்றின் முக்கியத்துவத்தை பரிந்துரைக்க ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையால் அழைப்பு விடுக்கப்பட்டது.

தகவல் துளிகள்:

  • தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் அமையவுள்ள புதிய மருத்துவமனைக் கட்டடத்துக்கு ‘தோழா் நல்லகண்ணு நூற்றாண்டுக் கட்டடம்’எனப் பெயா் சூட்டப்பட உள்ளது.
  • 2023 – ஆம் ஆண்டுக்கான கவிக்கோ விருது, கவிச்சுடா் கவிதைப்பித்தனுக்கு வழங்கப்பட்டது.
  • தமிழகத்தில் மேலும் இரண்டு கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
  • போக்குவரத்துத் தீவுக்கு இயக்குநர் கே.பாலசந்தரின் பெயர் சூட்டப்பட்ட உள்ளது.
  • மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து 15 புலிகள் ராஜஸ்தான், சத்தீஸ்கா், ஒடிஸா ஆகிய மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன, அந்த மாநிலங்களில் புலிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

 

 

 

About the Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these