26th December Daily Current Affairs – Tamil

தினசரி நடப்பு நிகழ்வுகள் December 26, 2024

 

ஸ்வாமித்வா திட்டம்:

ஸ்வாமித்வா திட்டத்தின்படி கிராமப்புற சொத்து உரிமையாளா்களுக்கு 58 லட்சம் எண்ம வடிவிலான ‘உரிமைப் பதிவு அட்டைகளை’ பிரதமா் நரேந்திர மோடி வழங்குகிறார்.

கிராமப் பகுதிகளில் நில ஆய்வு மற்றும் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்துடன் வரைபடம் தயாரிப்புக்கான ’ஸ்வாமித்வா திட்டம் தொடங்கப்பட்டது.

இத்திட்டத்தின்கீழ் ட்ரோன் மூலமான ஆய்வு 3.17 கிராமங்களில் நிறைவடைந்துள்ளது.

ஸ்வாமித்வா திட்டம் 24 ஏப்ரல் 2020 அன்று கிராமப்புற இந்தியாவிற்கு ஒருங்கிணைந்த சொத்து சரிபார்ப்பு தீர்வை வழங்கும் நோக்கத்துடன் தொடங்கப்பட்டது.

இத்திட்டத்தின் கீழ், நாட்டின் அனைத்து கிராமங்களிலும் ட்ரோன்கள் உதவியுடன் ஒவ்வொரு சொத்தின் மேப்பிங் செய்யப்படுகிறது.

சொத்துக்களை வரைபடம் செய்து எல்லை வரையறுத்த பிறகு, அந்தந்த கிராமத்தைச் சேர்ந்த மக்களுக்கு சொத்தின் உரிமைச் சான்றிதழ் வழங்கப்படுகிறது.

பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம், இந்திய சர்வே ஆஃப் இந்தியா, மாநில பஞ்சாயத்து ராஜ் துறை மற்றும் மாநில வருவாய்த் துறை ஆகியவற்றின் கூட்டு முயற்சிகளுடன் சமீபத்திய அளவீட்டு முறையைப் பயன்படுத்தி, அதாவது ட்ரோனின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, கிராமப்புறங்களில் வசிக்கும் நிலத்தின் எல்லை நிர்ணயம் அல்லது கணக்கெடுப்பு செய்யப்படுகிறது.

இத்திட்டத்தின் மூலம் கிராமங்களில் நிலவும் சொத்து தகராறுகளை முடிவுக்கு கொண்டு வர, கிராமவாசிகளின் சொத்துக்களை வரையறுத்து, அவர்களின் சொத்தின் உரிமைச் சான்றிதழை வழங்க முயற்சிக்கிறது.

நகரங்களில் உள்ளதைப் போல, கிராமப்புற மக்கள் தங்கள் நிலங்களில் உரிமைச் சான்றிதழின் அடிப்படையில் கடன் வசதிகளைப் பெறுவதற்கு இத்திட்டம் உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த திட்டம் நாடு முழுவதும் ஆறு மாநிலங்களில் மகாராஷ்டிரா, ஹரியானா, கர்நாடகா, உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் மற்றும் மத்தியப் பிரதேசம் சோதனை அடிப்படையில் தொடங்கப்பட்டது.

கென்-பெட்வா நதிகள் இணைப்புத் திட்டம்: மத்திய பிரதேசம்

மத்திய பிரதேசம் மாநிலத்தில் கென்-பெட்வா நதிகள் இணைப்புத் திட்டத்துக்கு பிரதமா் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.

1980 – இல் தயாரிக்கபட்ட தேசிய நதிகள் இணைப்பு முனைப்பு திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் முதல் திட்டம் இதுவாகும்.

மத்திய பிரதேச மாநிலத்தின் கந்த்வா மாவட்டத்தின் ஓம்காரேஷ்வரில் உள்ள மிதக்கும் சூரிய மின்சக்தித் திட்டத்தையும் பிரதமா் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.

யமுனையின் துணை நிதிகளை கென், பெட்வாவை இணைக்க 221 கி.மீ. கால்வாய் அமைக்கப்படுகிறது.

இதன் மூலம் உத்தர பிரதேசத்தின் பிந்தங்கிய புந்தேல்கண்ட் பகுதியின் வறட்சியைப் போக்க உதவும்.

103 மெகாவாட் நீா் மின்சாரம் மற்றும் 27 மெகாவாட் சூரிய மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்.

‘நான் முதல்வன்’ திட்டத்தால் ஜப்பானில் பணியிடை பயிற்சி:

நான் முதல்வன்’  திட்டத்தால் ஜப்பானுக்கு சென்று பணியிடை பயிற்சி பெற வாய்ப்பு கிடைத்ததாக, பயிற்சியை நிறைவு செய்து சென்னை திரும்பிய அரசுக் கல்லூரி மாணவிகள் பெருமிதத்துடன் தெரிவித்தனா்.

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் சார்பில் அரசு கல்லூரி மாணவா்கள் மற்றும் இளைஞா்களின் திறனை மேம்படுத்தும் நோக்கத்தில் ‘நான் முதல்வன்’ திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு அரசு நான் முதல்வன் திட்டத்தை மார்ச் 2022 – இல் அறிமுகப்படுத்தியது.

இது அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தொழில் மேம்பாடு மற்றும் உயர்கல்வி குறித்த பயனுள்ள மற்றும் விரிவான வழிகாட்டுதலை வழங்குவதற்கான முயற்சியாகும்.

தமிழ்நாட்டில் ஒன்றிய அரசின் எதிர்பார்ப்பையும் தாண்டி உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் 47 சதவிகிதத்தை தமிழ்நாடு எட்டியுள்ளது.

டிசம்பர் 26: சுனாமி நினைவு நாள்

தமிழகத்தில் பேரழிவை ஏற்படுத்திய சுனாமி தாக்கி (2004 – ம் ஆண்டு டிசம்பர் 26  தேதி) 20 ஆண்டுகள் நிறைவடைகின்றது.

சுனாமி என்னும் சொல் ஜப்பானிய மொழியில் இதன் பொருள்  “துறைமுக அலை” என்பதாகும்.

தகவல் துளிகள்:

குடியரசு தினம், சுதந்திர தினம் போன்ற தேசிய நிகழ்ச்சிகள் குறித்த தகவல்களை தெரிந்துகொள்ள ராஷ்டிரபா்வ் வலைதளத்தை பாதுகாப்பு அமைச்சகம் அறிமுகம் செய்துள்ளது.

நாட்டின் உள் பாதுகாப்பு மற்றும் அமைதியை உறுதி செய்வதில் சிஆா்பிஎஃப் முக்கியப் பங்காற்றுகிறது.

மத்திய ரிசா்வ் போலீஸ் படையின் (சிஆா்பிஎஃப்) தலைமை இயக்குநா் அனிஷ் தயாள் சிங்.

நாடு முழுதும் 10,000 புதிய கூட்டுறவு சங்கங்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைத்தார்.

மத்திய நிதியமைச்சகத்தின்கீழ் செயல்படும் வருவாய் துறைச் செயலராக இருந்த சஞ்சய் மல்ஹோத்ரா, அண்மையில் ரிசா்வ் வங்கி ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

மத்திய வருவாய் துறைச் செயலராக அருணீஷ் சாவ்லா நியமிக்கப்பட்டுள்ளார்.

மத்திய பிரதேச மாநிலத்தின் கந்த்வா மாவட்டத்தின் ஓம்காரேஷ்வரில் உள்ள மிதக்கும் சூரிய மின்சக்தித் திட்டத்தை பிரதமா் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.

2025-26 மத்திய பட்ஜெட் தொடா்பாக, பிரபல பொருளாதார நிபுணா்கள் மற்றும் நீதி ஆயோக் அமைப்பின் பல்வேறு துறைகளின் வல்லுநா்களுடன் பிரதமா் நரேந்திர மோடி ஆலோசனை மேற்கொண்டார்.

அமெரிக்காவின் தேசியப் பறவையாக வெண்தலைக் கழுகை அதிகாரபூா்வமாக அறிவித்தார், அமெரிக்க அதிபா் ஜோ பைடன்.

 

 

 

 

 

About the Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these