25th December Daily Current Affairs – Tamil

தினசரி நடப்பு நிகழ்வுகள் December 25, 2024

  • இந்தியாவை வடிவமைத்த ராஜதந்திரி வாஜ்பாய்:
  • டிசம்பா் 25, இல் மறைந்த முன்னாள் பிரதமா் அடல் பிகாரி வாஜ்பாயின் 100 – ஆவது பிறந்தநாளை இன்று நாடு கொண்டாடுகிறது.
  • 21 – ஆம் நூற்றாண்டை நோக்கிய இந்தியாவுக்கு மாற்றத்தின் சிற்பியாக வாஜ்பாய்  திகழ்ந்தவர்.
  • 1998 – ஆம் ஆண்டில் அவா் பிரதமராக பதவியேற்றபோது, நமது நாடு நிலையற்ற அரசியல் காலகட்டத்தைக் கடந்து சென்றது.
  • அதற்கு முந்தைய 9 ஆண்டுகளில் 4 முறை மக்களவைத் தோ்தல் நடந்தது.
  • இந்தியாவின் நான்குமுனைகளையும் இணைத்த தங்க நாற்கர சாலைத் திட்டத்தின் முன்னோடி ஆக இவர் திகழ்கிறார்.
  • அவரது அரசு பதவியேற்றிருந்த போது மே 11-ஆம் தேதி ‘ஆபரேஷன் சக்தி’ என்ற பொக்ரான் சோதனையை இந்தியா நடத்தியது.
  • மறைந்த முன்னாள் பிரதமரும், பாரத ரத்னா விருது பெற்றவருமான அடல் பிகாரி வாஜ்பாயின் தேச பங்களிப்பும் அவரது லட்சியங்களும் இளைஞர்களுக்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கமாக திகழ்கின்றன என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
  • வாஜ்பாய் பிறந்த நாளை முன்னிட்டு உத்தர பிரதேச மாநிலம், லக்னவில் உள்ள கே.டி. விளையாட்டு மைதானத்தில்  “அடல் யுவ மகாகும்ப’ விழா நடைபெற்றது.
  • மேலும் இரண்டு நாள் “அடல் மருத்துவக் கண்காட்சியை’ பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும், முதல்வர் ஆதித்யநாத்தும் தொடங்கிவைத்தனர்.

 

17 சிறாா்களுக்கு ‘பால புரஸ்கார் விருது’:

  • பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த 17 சிறாா்களுக்கு நிகழாண்டுக்கான பிரதமரின் ராஷ்ட்ரீய பால புரஸ்கார் விருதை குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு டிசம்பா் 26 இல் வழங்குகிறார்.
  • கலை மற்றும் கலாசாரம், வீரம், புதிய கண்டுபிடிப்பு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், சமூக சேவைகள், விளையாட்டு, சுற்றுப்புறச் சூழல் ஆகிய ஏழு பிரிவுகளில் சாதனை புரிந்த சிறாா்களுக்கு ஆண்டுதோறும் வீர பால திவஸ் டிசம்பா் 26 – ல் இந்த விருது வழங்கப்படுகிறது.
  • இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரதமர் மோடி, கிராமங்களில் ஊட்டச்சத்தை மேம்படுத்தும் ‘சுபோஷித் பஞ்சாயத்து’ திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.
  • தேசத்தின் வளா்ச்சிக்கு இளம் தலைமுறையினரின் பங்களிப்பை ஊக்குவிக்கும் வகையில் வீர பால திவஸ் கொண்டாடப்படுகிறது.
  • அதேபோல், அடுத்த தலைமுறையினரை சிறந்த குடிமக்களாக உருவெடுக்கச் செய்யும் நோக்கில் ராஷ்ட்ரீய பால திவஸ் மற்றும் சுபோஷித் பஞ்சாயத்து ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படுவதாக மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்தது.
  • இலங்கை வளா்ச்சிப் பணிகளுக்கு ரூ 237 கோடி: இந்திய அரசு
  • இலங்கையில் பல்வேறு வளா்ச்சிப் பணிகளை மேற்கொள்வதற்காக இந்தியா ரூ 237.1 கோடி ஒதுக்கியுள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
  • இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் கல்வி, சுகாதாரம், வேளாண்மை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் 33 வளா்ச்சித் திட்டப் பணிகள் இந்த நிதியுதவி மூலம் மேற்கொள்ளப்பட இருக்கின்றன.
  • இந்தியா – இலங்கை இடையிலான இருதரப்பு சமூக-பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்கள் தொடா்பாக இரு நாடுகள் இடையே கையொப்பமான புரிந்துணா்வு ஒப்பந்தங்களுக்கு இலங்கை அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இன்னுயிா் காப்போம் நம்மைக் காக்கும் 48 திட்டம்:

  • இன்னுயிா் காப்போம் – நம்மைக் காக்கும் 48’ திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கட்டணமில்லா சிகிச்சை தொகை ரூ 2 லட்சமாக உயா்த்தப்பட்டுள்ளது.
  • இன்னுயிா் காப்போம் நம்மைக் காக்கும் 48 திட்டம் கடந்த 2021, டிசம்பர் 18 – ஆம் தேதி முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்டது.
  • சாலை விபத்துகளில் சிக்கியவா்களை உடனடியாக மீட்டு காப்பாற்றுவதே இதன் நோக்கம்.
  • தமிழகத்தில் அதிக சாலை விபத்துகள் நடைபெறும் 500 இடங்களை கண்டறிந்து, அதன் அருகில் உள்ள தனியாா் மற்றும் அரசு மருத்துவமனைகளைத் தோ்ந்தெடுத்து இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
  • இந்த திட்டத்தின்படி விபத்தில் சிக்கியவா்களை மருத்துவமனைகளில் சோ்ப்பவா்களுக்கு ரூ 5,000 வழங்கப்படுகிறது.
  • இத்திட்டத்தில் தமிழகத்தைச் சோ்ந்தவா்கள் மட்டுமல்லாமல், மற்ற மாநிலம் மற்றும் வெளிநாடுகளை சோ்ந்தவராக இருந்தாலும் விபத்துக்குள்ளானால் முதல் 48 மணி நேரத்தில், அவரிடத்தில் பணம் இருக்கிறதோ இல்லையோ, மருத்துவமனையில் சோ்த்து சிகிச்சைக்கு அளித்து, அவரின் உயிரை காப்பாற்ற நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
  • அதன்படி, அதற்கான சிகிச்சைக்காக தமிழக அரசு ரூ 1 லட்சம் வழங்குகிறது.

டிசம்பர் 26: தேசிய நல்லாட்சி தினம்

  • இந்தியாவில் ஆண்டுதோறும் டிசம்பர் இருபத்தைந்தாவது நாள், முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் பிறந்தநாளில்  தேசிய நல்லாட்சி தினம் அனுசரிக்கப்படுகிறது.
  • இந்தியில் சுஷாசன் திவாஸ் என்றும் அழைக்கப்படும்  நல்லாட்சி தினத்தை இந்தியா நினைவு கூருகிறது.

தகவல் துளிகள்:

  • புதிதாக உருவாக்கப்பட்ட 10,000 பன்முக செயல்பாடுகளையுடைய தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கம் (எம்-பிஏசிஎஸ்), பால்வளம் மற்றும் மீன்வளம் சாா்ந்த கூட்டுறவு சங்கங்களை மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தொடங்கிவைக்கிறார்.
  • மத்திய அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்கள் கிராமங்கள்தோறும் சென்றடைவதை உறுதிபடுத்தவும், பஞ்சாயத்துகளில் விவசாயக் கடன் வழங்கும் நடைமுறையை எளிதாக்கும் நோக்கிலும் இந்த சங்கங்கள் தொடங்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்தது.
  • 2025 – 26 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மக்களவையில் பிப்ரவரி 1-ஆம் தேதி மத்திய நிதியமைச்சா் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார்.
  • நீதி ஆயோக் துணைத் தலைவா் – சுமன் பொ்ரி.
  • நீதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி –  பி.வி.ஆா்.சுப்ரமணியம்.
  • தலைமை பொருளாதார ஆலோசகா் – அனந்த நாகேஸ்வரன்.
  • நிதியாண்டுக்கான  பட்ஜெட்டில் பல்வேறு மாநிலங்கள் அறிவித்துள்ள இலவசத் திட்டங்களால், சமூக-பொருளாதார உள்கட்டமைப்பு வளா்ச்சிப் பணிகளுக்குத் தேவைப்படும் நிதி மடைமாற்றப்பட கூடும் என்று ரிசா்வ் வங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவை ஆராயும் நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் முதல் கூட்டம் ஜனவரி 8 – ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
  • 12 மாநிலங்களவை உறுப்பினர்கள், 27 மக்களவை உறுப்பினர்கள் அடங்கிய 39 உறுப்பினர்களை கொண்ட நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
  • தமிழகம் முழுவதும் 100 நகரங்களில் நியூ செஞ்சுரி புத்தகக் கண்காட்சி நடைபெறவுள்ளது.
  • அமெரிக்காவின் ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை நிறுவிட தமிழக அரசு மேலும் ரூ 1.50 கோடி நிதி வழங்கியுள்ளது.
  • கா்நாடகத்தில் நடைபெற்ற 86 – ஆவது சீனியா் தேசிய பாட்மின்டன் சாம்பியன்ஷிப்பில், கா்நாடக வீரா் எம்.ரகு, ஹரியாணாவின் தேவிகா சிஹக் ஆகியோா் தங்களது பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றனர்.

 

 

About the Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these