21st December Daily Current Affairs – Tamil

ரூ 7,628 கோடியில் வஜ்ரா பீரங்கிகள் கொள்முதல்:

  • இந்திய ராணுவத்துக்கு கே9 வஜ்ரா பீரங்கிகளை கொள்முதல் செய்ய லார்சன் அண்ட் டூப்ரோ (எல் அண்ட் டி)
  • நிறுவனத்துடன் ரூ 7,628 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் கையொப்பமிட்டது.
  • ‘மேக் இன் இந்தியா’மற்றும் ‘தற்சார்பு இந்தியா’ஆகிய திட்டங்களின்கீழ் இந்த ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டுள்ளது.
  • ‘எல் அண்ட் டி நிறுவனத்துடன் 155 எம்எம்/ 52 கேலிபா் கே9 வஜ்ரா-டி தானியங்கி பீரங்கிகளை கொள்முதல் செய்வதற்காக பாதுகாப்புத்துறை அமைச்சம் கையொப்பமிட்டுள்ளது.
  • பீரங்கிகளை நவீனமயமாக்கவும் அனைத்து விதமான காலநிலை மற்றும் நிலப்பரப்புகளிலும் தொலைதூர இலக்குகளை குறிவைத்து துல்லியமான தாக்குதலை நடத்துவதிலும் கே9 வஜ்ரா பீரங்கிகளின் பங்கு சிறப்பானதாக இருக்கும்.

55 – ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்:

  • ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் 55 – ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற உள்ளது.
  • இதில் ஆயுள் மற்றும் மருத்துவக் காப்பீடுகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி தொடா்பான விவகாரங்களை முழுமையாக ஆராய்வதற்கு, பிகார் துணை முதல்வா் சாம்ராட் செளதரி தலைமையில் 13 போ் கொண்ட அமைச்சா்கள் குழுவை ஜிஎஸ்டி கவுன்சில் அமைத்தது.
  • இந்தக் குழு ஆயுள் மற்றும் மருத்துவக் காப்பீடுகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி விகிதத்தை மறுஆய்வு செய்து அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில், அந்தக் காப்பீடுகளுக்கான தவணை தொகை மீதான ஜிஎஸ்டியை குறைப்பது குறித்து அடுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட உள்ளது.

புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம்:

  • நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டு வரும் புதிய பாரத எழுத்தறிவுத் திட்டத்தில் கல்லூரி மாணவா்களை தன்னார்வ ஆசிரியா்களாக பங்கேற்க உயா்கல்வி நிறுவனங்கள் ஊக்குவிக்க வேண்டும் என யுஜிசி அறிவுறுத்தியுள்ளது.
  • நாடு முழுவதும் கல்வி கற்காத 15 வயதுக்கு மேற்பட்டோருக்கு தன்னார்வலா்களைக் கொண்டு அடிப்படை எழுத்தறிவு பயிற்றுவிப்பதற்காக மத்திய அரசின் சார்பில் ‘புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம்’2022 – இல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
  • தேசிய கல்விக் கொள்கை 2020 – இன் அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இந்தத் திட்டத்தின் கீழ் 2027 – ஆம் ஆண்டுக்குள் 5 கோடி பேருக்கு கல்வி கற்பிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • இதற்காக நாடு முழுவதும் கற்போர் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
  • மேலும், இந்தத் திட்டத்துக்காக பிரத்யேகமாக கைப்பேசி செயலியும் உருவாக்கப்பட்டுள்ளது.

ஸ்பேடெக்ஸ் ஆய்வுத் திட்டம்:

  • விண்வெளிக்கு மனிதா்களை அனுப்புவதற்கான முன்னோட்ட முயற்சியாக செயல்படுத்தப்பட உள்ள ஸ்பேடெக்ஸ் ஆய்வுத் திட்டம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
  • விண்கலன்கள் பெங்களூரில் வடிமைக்கப்பட்டு, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவுக்கு விண்ணில் ஏவுவதற்காக அனுப்பப்பட்டுள்ளன.
  • இதற்காக தலா 400 கிலோ எடை கொண்ட சேசா் மற்றும் டார்கெட் எனும் 2 விண்கலன்களை இஸ்ரோ வழிகாட்டுதலில் தனியார் நிறுவனம் வடிவமைத்துள்ளது.
  • இந்த இரட்டை விண்கலன்கள் பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட் வாயிலாக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட உள்ளன.
  • பாரதிய அந்தரிக்ஷா ஸ்டேஷன் எனும் இந்திய ஆய்வு மையத்தை 2035 – க்குள் விண்ணில் நிறுவ இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

டிசம்பர் 20: சர்வதேச மனித ஒற்றுமை தினம்

  • ஐ. நா பொதுச் சபை, 22 டிசம்பர் 2005 அன்று தீர்மானத்தின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 20 ஐ சர்வதேசமாக அறிவிக்க முடிவு செய்தது.

தகவல் துளிகள்:

  1. குவைத் மன்னா் ஷேக் அல் அகமது அல் ஜாபா் அல் ஷபா.
  2. இந்தியாவுக்கு அதிக கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகள் பட்டியலில் குவைத் 6 – ஆவது இடத்தில் உள்ளது.
  3. ஆந்திர மாநில தலைநகா் அமராவதியைக் கட்டமைக்க 800 மில்லியன் அமெரிக்க டாலா் கடன் வழங்க உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.
  4. கடந்த 2014 – இல் ஆந்திரத்தில் இருந்து தெலங்கானா தனிமாநிலம் உருவாக்கப்பட்டது, ஆந்திரத்தின் தலைநகராக இருந்த ஹைதராபாத் இப்போது தெலுங்கானா தலைநகராக உள்ளது.
  5. ஆந்திர தலைநகராக அமராவதியைக் கட்டமைக்க முடிவு செய்யப்பட்டது, கிருஷ்ணா நதிக் கரையோரம் விஜயவாடா- குண்டூா் இடையே அமராவதி அமைந்துள்ளது.
  6. ஆப்பிரிக்காவில் சிடோ புயலால் 100க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.
  7. புகழ்பெற்ற இயக்குநர் கிறிஸ்டோபர் நோலனுக்கு ‘சர்’பட்டத்தை, இங்கிலாந்து மன்னர் சார்லஸ்வ வழங்கினார்.

 

 

 

About the Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these