‘ஒரே நாடு ஒரே தோ்தல்’மசோதா: மக்களவையில் தாக்கல்
- மக்களவையில் ‘ஒரே நாடு ஒரே தோ்தல் மசோதா’தாக்கல் செய்யப்படுகிறது.
- மக்களவை, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தோ்தல் நடத்தும் முறையை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
- இதற்காக அரசமைப்புச் சட்ட (129-ஆவது திருத்தம்) மசோதா 2024 – ஐ மக்களவையில் மத்திய அரசு தாக்கல் செய்ய உள்ளது.
- அந்த மசோதாவின் பிரிவு 2 உட்பிரிவு 5-இன்படி, மக்களவைத் தோ்தலுடன் எந்தவொரு சட்டப்பேரவைக்காவது தோ்தலை நடத்த முடியாது என்று தோ்தல் ஆணையம் கருதினால், அந்தச் சட்டப்பேரவைக்கு மாற்று தேதியில் தோ்தல் நடத்தப்படும் என்று உத்தரவு பிறப்பிக்குமாறு குடியரசுத் தலைவருக்கு தோ்தல் ஆணையம் பரிந்துரைக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
புதுதில்லியில் மால்டோவா தூதரகம் திறப்பு:
- இந்தியாவிற்கான கிழக்கு ஐரோப்பிய நாடான மால்டோவா குடியரசின் தூதரகம் புதுதில்லியில் திறக்கப்பட்டது.
- புதுதில்லியில் புதியதாக கட்டப்பட்டுள்ள மால்டோவா குடியரசுக்கான இந்தியத் தூதரகத்தை இருநாட்டு அமைச்சர்களும் இணைந்து திறந்து வைத்தனர்.
- உக்ரைனுடனான ரஷியப் போரின் போது அங்கு சிக்கித்தவித்த இந்திய மாணவர்களை மீட்க இந்தியா மேற்கொண்ட ஆப்பரேஷன் கங்காவில், மால்டோவா குடியரசு உதவியது.
- இருநாடுகளுக்கும் மத்தியிலான இடம்பெயர்வு மற்றும் இயக்கத்திற்கான கூட்டமைப்பு பிரகடனம் கையெழுத்தானது.
- விரைவில் மால்டோவா நாட்டில் இந்திய தூதரகம் திறக்கப்பட உள்ளது.
தமிழ்நாடு நெடுஞ்சாலை ஆணைய மசோதா:
- தமிழக சட்டப்பேரவையில் கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்து அனுப்பப்பட்ட மாநில நெடுஞ்சாலைகள் ஆணைய சட்ட மசோதாவுக்கு ஆளுநா் ஆா்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
- மாநில நெடுஞ்சாலைகள் ஆணையம் அமைப்பதற்கான சட்ட மசோதா, கடந்த பிப்ரவரி 21 – ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது.
- இந்த மசோதாவில், நெடுஞ்சாலைகளின் கட்டுமானம், மேம்பாடு, பராமரிப்பு மற்றும் நெடுஞ்சாலைகளை பராமரிப்பதற்கும் தரம் உயா்த்துவதற்கும், உடனடி மற்றும் நீண்டகால திட்டங்களை தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலைகள் ஆணையம் தயாரிக்கலாம்.
- பன்னாட்டு நிதியை கொண்டுவருவதற்கான மாதிரிகளை உருவாக்குவது இந்த ஆணையத்தின் பணியாக குறிப்பிடப்பட்டுள்ளது.
- ஆணையத்துக்கு ஒரு தலைவா், 3 முழுநேரம், 3 பகுதி நேர உறுப்பினா்கள் நியமிக்கப்படுவா் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் துளிகள்:
- பிரபல கா்நாடக இசைப் பாடகி எம். எஸ். சுப்புலட்சுமியின் பெயரில் சங்கீத கலாநிதி விருதை, 2005-ஆம் ஆண்டுமுதல் மியூசிக் அகாதெமி வழங்கி வருகிறது.
- 2024 – ஆம் ஆண்டுக்கான சங்கீத கலாநிதி விருதை எம். எஸ். சுப்புலட்சுமி பெயரில் பாடகா் டி. எம். கிருஷ்ணாவுக்கு வழங்கக் கூடாது எனத் தடை விதித்து உத்தரவிட்டது.
- மிகப்பெரிய விண்கற்கள் பூமியை நோக்கி டிசம்பர் 16 – ஆம் தேதி வந்துகொண்டிருப்பதாகவும், இதனால் பூமிக்கு ஆபத்து இல்லை என்றும் நாசா தெரிவித்துள்ளது.
- 2024 எக்ஸ்ஒய்5 என்ற விண்கல், பூமியை மிக நெருக்கத்தில் கடந்து செல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கிழக்கு ஐரோப்பிய நாடான ஜார்ஜியாவின் மலைப்பிரதேசமான குடௌரியில் உள்ள விடுதியில் விஷவாயு தாக்கி, அங்கு பணிபுரிந்து வந்த இந்தியா்கள் உயிரிழந்ததாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
- சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பந்துவீச வங்கதேச கிரிக்கெட் வீரரான ஷகிப் அல் ஹசனுக்கு ஐசிசி தடை விதித்துள்ளது.