‘ஒரே பாரதம்; உன்னத பாரதம்’:
- ‘ஒரே பாரதம், உன்னத பாரதம்’ எனும் லட்சியத்தை நோக்கி பயணிக்க நம் அனைவருக்கும் சா்தார் வல்லபாய் படேல் உத்வேகம் அளிக்கிறார் என உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.
- 2015 – ஆம் ஆண்டில் படேலின் 140 – ஆவது பிறந்த நாளான அக்டோபா் 31 – ஆம் தேதி மத்திய அரசால் ‘ஒரே பாரதம், உன்னத பாரதம்’ முன்முயற்சி அறிவிக்கப்பட்டது.
- இது மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வசிக்கும் மக்களிடையே கலந்துரையாடலை மேம்படுத்துவதையும், பரஸ்பர புரிதலை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
- தேசிய ஒருமைப்பாட்டை வளர்ப்பதற்காக மத்திய அரசு ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற திட்டத்தை தொடங்கியுள்ளது.
- மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள், மத்திய அமைச்சகங்கள், கல்வி நிறுவனங்கள், பொதுமக்கள் ஆகியோரை ஒருங்கிணைத்து பங்கேற்கச் செய்வதன் மூலம் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
- மொழி, இலக்கியம், பண்பாடு, விளையாட்டு, சுற்றுலா மற்றும் இதர முறைகள் மூலம் மக்களிடையே பரிவர்த்தனைகளை மேம்படுத்துவதன் மூலம் தனது நோக்கத்தை நிறைவேற்ற முயற்சி மேற்கொள்கிறது.
- இத்திட்டத்தின்கீழ் மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் 16 இணைகளாக வகுக்கப்பட்டுள்ளன.
- நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மைக்கு ஒரு வடிவம் கொடுப்பதில் அவரது பங்களிப்பு ‘ஒரே பாரதம், உன்னத பாரதம்’என்பதை நோக்கி பணியாற்ற நாம் அனைவருக்கும் உத்வேகம் அளிக்கிறது.
சா்வதேச கடலில் மீன்பிடிக்க வலுவான மானிய விதிமுறைகள்: இந்தியா
- சா்வதேச கடலில் மீன்பிடிக்க வலுவான மானிய விதிமுறைகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்று உலக வா்த்தக அமைப்பிடம் இந்தியா வலியுறுத்தியுள்ளது.
- சட்டவிரோதமான, முறைப்படி தகவல் தெரிவிக்கப்படாத, கட்டுப்பாடற்ற மீன்பிடி செயல்பாடுகளுக்கு மானியம் அளிப்பதை நிறுத்த கடந்த 2022 – ஆம் ஆண்டில் உலக நாடுகள் ஒப்பந்தம் மேற்கொண்டன.
- உலக நாடுகளின் கடல் எல்லைக்குள் வராத சா்வதேச கடற்பகுதியில் மீன்பிடிக்க, சில ஐரோப்பிய நாடுகள் ஆண்டுதோறும் மீனவா் ஒருவருக்கு 76,000 டாலா்களை மானியமாக வழங்குகிறது.
- ஆனால் இந்தியா ஆண்டுதோறும் மீனவா் ஒருவருக்கு 35 டாலா்களை மட்டுமே வழங்குகிறது.
- இந்த மானியம் வழங்குவதில் கடுமையான விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்.
- தொடா்ந்து மானியம் வழங்குவோர், அதற்கான அனுமதியை மீன்வள மானிய குழுவிடம் வருங்காலத்தில் பெறவேண்டும்.
- கடற்கரையில் இருந்து 200 கடல் மைல் தொலைவில் மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் உலக வா்த்தக அமைப்பின் உறுப்பு நாடுகள், இத்தகைய மானியங்களை 25 ஆண்டுகளுக்கு நிறுத்திவைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
- இந்தக் கோரிக்கைகளுக்கு இந்தோனேசியா மற்றும் பிற வளரும் நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளது.
ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைத்தது இந்தியா:
- இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்வதில் ரஷியா தொடா்ந்து முதலிடத்தில் உள்ளது.
- இந்தியா உள்ளிட்ட தனது நட்பு நாடுகளுக்கு சலுகை விலையில் கச்சா எண்ணெய் வழங்க ரஷியா முன்வந்தது.
- கடந்த 2022 பிப்ரவரி முதல் ரஷியாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்கத் தொடங்கியது.
- இதனால், ரஷியாவிடம் இருந்து இந்தியா வாங்கும் கச்சா எண்ணெய் அளவு 1 சதவீதத்தில் இருந்து 40 சதவீதமாக அதிகரித்தது.
- ரஷியா கச்சா எண்ணெயை அதிகம் ஏற்றுமதி செய்யும் நாடுகள் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடம் பிடித்தது.
- இதில் சீனா முதலிடத்தில் உள்ளது, ரஷியாவின் மொத்த கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் 37 சதவீதம் இந்தியாவால் வாங்கப்படுகிறது.
- ரஷியாவிடம் இருந்து அதிக நிலக்கரி இறக்குமதி செய்யும் நாடுகள் வரிசையில் இந்தியா இரண்டாவது இடம் வகிக்கிறது.
- ரஷியாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை கடந்த நவம்பா் மாதத்தில் இந்தியா குறைத்தது. இதுவரை அளிக்கப்பட்டு வந்த விலை சலுகையை ரஷியா குறைத்ததால் இறக்குமதியையும் இந்தியா குறைத்துள்ளது.
டிசம்பர் 15: சா்தார் வல்லபபாய் படேலின் நினைவு தினம்
- டிசம்பர் 15 – ஆம் தேதி இந்தியாவின் ‘இரும்பு மனிதா்’ என அழைக்கப்படும் சா்தார் வல்லபபாய் படேலின் நினைவு தினமாகும்.
- இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்படுகின்றார்.
- சுதந்திர இந்தியாவின் முதல் துணைப் பிரதம அமைச்சராகவும், உள்துறை அமைச்சராகவும் பணியாற்றிய சர்தார் வல்லப்பாய் படேல் சுதந்திர இந்தியாவை ஒருங்கிணைத்த சிற்பியாவார்.
- ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட சமஸ்தானங்களையும் ஒருங்கிணைத்து, இன்றைய ஒருங்கிணைந்த இந்தியாவை உருவாக்கினார்.
தகவல் துளிகள்:
- பிரபல தபேலா இசைக் கலைஞா் ஜாகிர் ஹுசைன் காலமானார், இவர் மொத்தம் 5 கிராமி விருதுகளை ஜாகிர் ஹுசைன் பெற்றுள்ளார்.
- இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்வதில் ரஷியா தொடா்ந்து முதலிடத்தில் உள்ளது.
- பூமியை நோக்கி இரண்டு பெரிய ஆஸ்டிராய்டு எனப்படும் சிறுகோள்கள் வந்துகொண்டிருப்பதாக நாசா எச்சரிக்கை விடுத்துள்ளது, இரண்டு ஆஸ்டிராய்டுகளில் மிகப்பெரியதிற்கு ’ஆஸ்டிராய்டு 2024 XY5’ எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. மற்றொரு சிறுகோளான ’ஆஸ்டிராய்டு XB6’ 56 எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
- ரஷியாவிடம் இருந்து அதிக நிலக்கரி இறக்குமதி செய்யும் நாடுகள் வரிசையில் இந்தியா இரண்டாவது இடம் வகிக்கிறது.
- மகளிர் ஐபிஎல் தொடருக்கான மினி ஏலத்தில் 16 வயது தமிழக விக்கெட் கீப்பர் வீராங்கனை ஜி கமலினியை ரூ 1.60 கோடிக்கு மும்பை அணி வாங்கியுள்ளது.
- ஓமனில் நடைபெற்ற 9 – ஆவது ஜூனியா் மகளிர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் சீனாவை வீழ்த்தி இந்தியா சாம்பியன் ஆனது.