பிஎம்-ஸ்ரீ திட்டம்:
- பிஎம்.ஸ்ரீ திட்ட புரிந்துணா்வு உடன்படிக்கையில் திருத்தங்களின்றி தமிழக அரசு கையெழுத்திட மத்திய அரசு அழுத்தம் கொடுப்பதாக மத்திய கல்வித்துறை இணை அமைச்சா் ஜெயந்ந் செளத்ரி தெரிவித்துள்ளார்.
- பி.எம்.ஸ்ரீ திட்டத்தை தமிழக அரசு இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை.
- இந்த திட்டத்தை 2024-25 கல்வியாண்டுக்கு முன்பு ஏற்பதாக கடந்த மார்ச் 15 – இல் தெரிவித்த தமிழக அரசு, தேசிய கல்விக்கொள்கையின் அமலாக்க வரிகளை முழுமையாக நீக்கி விட்டு, திருத்தப்பட்ட பத்திகள் அடங்கிய புரிந்துணா்வு உடன்படிக்கையை அனுப்பியது.
- PM SHRI (PM ஸ்கூல்ஸ் ஃபார் ரைசிங் இந்தியா) ன் மத்திய நிதியுதவி திட்டம் 7 செப்டம்பர் 2022 அன்று அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டது.
- PM SHRI பள்ளி என்பது இந்திய அரசாங்கத்தால் மத்திய நிதியுதவி பெற்ற திட்டமாகும்.
- இந்த முன்முயற்சியானது மத்திய அரசு/மாநிலம்/யூடி அரசு/உள்ளாட்சி அமைப்புகளால் நிர்வகிக்கப்படும் 14500 PM SHRI பள்ளிகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
பிரதமரின் விஸ்வகா்மா திட்டம்:
- பிரதமரின் விஸ்வகா்மா திட்டத்தின்கீழ் இதுவரை 2.02 லட்சம் வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டு, ரூ 1,751 கோடி கடன்கள் அளிக்கப்பட்டுள்ளன.
- பிரதம மந்திரி விஸ்வகர்மா திட்டமானது, 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் 17 ஆம் தேதி, கைவினைஞர்கள் மற்றும் கைவினைஞர்களுக்கு தங்கள் கைகள் மற்றும் கருவிகளுடன் பணிபுரியும் கைவினைஞர்களுக்கு இறுதி வரை ஆதரவை வழங்குவதற்காகத் தொடங்கப்பட்டது.
- பாரம்பரிய கைவினைஞா்கள் மற்றும் கைவினைத் தொழிலாளா்களுக்கு ஆதரவளிக்கும் நோக்கில் ரூ 13,000 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்பட்டது.
- தச்சா், கொல்லா், பொற்கொல்லா், சிற்பி, படகு தயாரிப்பவா், முடி திருத்தும் தொழிலாளா், காலணித் தொழிலாளா் என 18 வகை தொழில்களை உள்ளடக்கிய இத்திட்டத்தின்கீழ் முதல் தவணையாக ரூ 1 லட்சம் வரையும், இரண்டாம் தவணையாக ரூ 2 லட்சம் வரையும் பிணையில்லா கடனுதவி வழங்கப்படுகிறது.
‘ஒரே நாடு; ஒரே சந்தா’திட்டம்:
- நாடு முழுவதும் அரசு நிதியுதவி பெறும் உயா்கல்வி நிறுவனங்களில் பயிலும் 1.8 கோடி மாணவா்கள் பலனடையும் வகையில், ஒரே சந்தாவில் அவா்களுக்கு அனைத்து சா்வதேச ஆராய்ச்சி இதழ்களின் அணுகலை வழங்கும் ‘ஒரே நாடு; ஒரே சந்தா’திட்டத்தை ஜனவரி 1 – ஆம் தேதி முதல் மத்திய அரசு அறிமுகப்படுத்துகிறது.
- ஒரே நாடு ஒரே சந்தா (ஓஎன்ஓஎஸ்) திட்டத்தின் முதல் கட்டத்தில் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், மருத்துவம், கணிதம், மேலாண்மை, சமூக அறிவியல், ஆகியவற்றை உள்ளடக்கிய 13,400-க்கும் மேற்பட்ட சா்வதேச ஆராய்ச்சி இதழ்கள் மாணவா்களுக்கு கிடைக்கும்.
- இதன் மூலம், ‘எல்சேவியா், ‘ஸ்பிரிங்கா் நேச்சா், ‘விலே’உள்பட 30 பிரபல சா்வதேச பதிப்பகத்தாரால் வெளியிடப்படும் சிறந்த ஆராய்ச்சி இதழ்களுக்கான அணுகலை நாட்டின் 6,380 உயா்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் கொண்டிருக்கும்.
- திட்டத்தின் இரண்டாவது கட்டத்தில், அரசு-தனியார் ஒத்துழைப்பில் தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் இந்த முன்னெடுப்பை விரிவுபடுத்த அரசு திட்டமிட்டுள்ளது.
- மூன்றாம் கட்டத்தில் பொது நூலகங்களிலும் இந்த வசதி கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்.
டிசம்பர் 11: யுனிசெஃப் நிறுவன தினம்
- UNICEF நிறுவன தினம் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 11 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.
- 2024 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியத்தின் 78 வது ஆண்டு விழா ஆகும்.
- UNICEF உலகளாவிய அமைப்பாக அறியப்படுகிறது, உலகளவில் குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாப்பதில் எப்போதும் முன்னணியில் உள்ளது.
டிசம்பர் 11: சர்வதேச மலை தினம்
- டிசம்பர் 20, 2002 அன்று, ஐ. நா டிசம்பர் 11 ஐ சர்வதேச மலை தினமாக அறிவித்தது.
தகவல் துளிகள்:
- மகாகவி பாரதியாரின் பிறந்த நாள் டிசம்பர் 11 – ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது, பாரதியாரின் முழுமையான படைப்புகளின் தொகுப்புகளை பிரதமர் நரேந்திர மோடி வெளியிடுகிறார்.
- மாலத்தீவின் அடு நகரில் உள்ள தேசிய காவல் மற்றும் சட்ட அமலாக்க கல்லூரியின் புனரமைப்பு பணிகளுக்காக 8.5 மில்லியன் மாலத்தீவு ரூஃபியாவை இந்தியா நன்கொடையாக அளித்துள்ளது.
- 2025 – ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் காசநோயை ஒழிப்பதற்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- மகளிர் டென்னிஸ் சம்மேளனம் (டபிள்யுடிஏ) 2024 ன் சிறந்த வீராங்கனை விருதை பெலாரஸின் அா்யனா சபலென்கா பெற்றுள்ளார்
- ஒலிம்பிக் இரட்டையா் தங்கம் வென்ற ஜாஸ்மின் பாலோனி, சாரா எர்ரனி சிறந்த இரட்டையா் வீராங்கனைகள் விருதைப் பெற்றனா்.
- எம்மா நவரோ சிறப்பான வளா்ச்சி பெற்ற வீராங்கனை விருதையும், நியூஸிலாந்தின் லுலு சன் சிறந்த புதிய வீராங்கனை விருதையும் பெற்றனா்.