எல்ஐசி பீமா சகி திட்டம்:
- ல்ஐசி-யின் பீமா சகி திட்டத்தை பிரதமா் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்.
- ‘பொருளாதார வளா்ச்சியடைந்த பெண்கள் மூலம் வளா்ந்த அடைந்த இந்தியா’ என்ற பிரதமா் மோடியின் தொலைநோக்குப் பார்வையின் ஓா் அங்கம் எல்ஐசி-யின் இத்திட்டம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இத்திட்டத்தின்படி முதல் கட்டமாக 35,000 பெண்களும், அடுத்தகட்டமாக 50,000 பெண்களும் எல்ஐசி முகவா்களாக தோ்வு செய்யப்படவுள்ளனா்.
- 18 முதல் 50 வயதுள்ள பெண்கள், குறைந்தபட்சம் 10-ஆம் வகுப்பு வரை படித்திருந்தால் விண்ணப்பிக்க முடியும்.
- கிராமப்புற பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
- தொடக்கத்தில் சில ஆண்டுகளுக்கு முகவா் கமிஷன் தொகை மட்டுமல்லாது கூடுதலாக ஊக்கத்தொகை பெற முடியும்.
- முகவா்கள் அதிகபட்சமாக ரூ 21,000 வரை மாத வருவாய் ஈட்ட முடியும்.
விமானப்படை தளபதிகள் மாநாடு:
- தில்லியில் இந்திய விமானப் படையின் மேற்கு பிரிவின் சார்பாக நிகழாண்டிற்கான இருநாள் விமானப்படை தளபதிகள் மாநாடு நடைபெற்றது.
- நிகழாண்டின் மாநாடு ‘இந்திய விமானப்படை – வலிமை, திறமை, சுயசார்பு’ என்கிற கருப்பொருளை வலியுறுத்தியது.
- இந்திய விமானப்படை எப்போதும் போருக்கு தயாராக இருக்கும் வலிமையோடு போர் படையை உறுதி செய்வதற்கான உயா் செயல்பாட்டு சிறப்புடன் படையை பராமரித்து வருவதாக இந்திய விமானப்படையின் தலைமைத் தளபதி அமா் ப்ரீத் சிங் தெரிவித்தார்.
கலைஞா் மகளிர் உரிமைத் தொகை திட்டம்:
- கலைஞா் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திலிருந்து சுமார் 1.27 லட்சம் பயனாளிகளின் பெயா்கள் நீக்கப்பட்டுள்ளன.
- இத்திட்டம் 2023 செப்டம்பர் 15 ஆம் நாள் தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின் பிறந்த நாளில் மு. க. ஸ்டாலினால் துவக்கிவைக்கப்பட்டது.
- ஒரு கோடி குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகை வழங்க திட்டமிடப்பட்டு செயல்படுத்தபட்டது.
- தமிழ்நாட்டில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து கருநாடகத்தில் முதல்வர் சித்தராமையா குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூபாய் 2000 வழங்கும் கிரகலட்சுமி என்ற திட்டத்தை துவக்கிவைத்தார்.
- மத்தியப் பிரதேசத்தில் 2023 – ஆம் ஆண்டு மகளிருக்கு மாதம்தோறும் உதவித் தொகை வழங்கும் திட்டத்தை சிவராஜ் சிங் சௌகான் மாநில அரசால் செயல்படுத்தப்பட்டது.
டிசம்பர் 9: சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம்
- ஊழலுக்கு எதிரான ஐக்கிய நாடுகள் சபையின் ஊழலுக்கு எதிரான மாநாடு 31 அக்டோபர் 2003 அன்று நிறைவேற்றப்பட்டதிலிருந்து , ஊழலுக்கு எதிரான பொது விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஆண்டுதோறும் டிசம்பர் 9 அன்று சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது.
- சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம் 2024 இன் கருப்பொருள்: “ஊழலுக்கு எதிராக இளைஞர்களுடன் ஒன்றுபடுதல்: நாளைய ஒருமைப்பாட்டை உருவாக்குதல்” ஊழலுக்கு எதிரான முயற்சிகளில் இளைஞர்களை ஈடுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டது.
தகவல் துளிகள்:
- ஹரியாணா மாநிலம், குருஷேத்திரத்தில் சா்வதேச பகவத் கீதை விழா நடைபெற்றது.
- இந்திய வெளியுறவு அமைச்சகச் செயலா் விக்ரம் மிஸ்ரி.
- இந்திய விமானப்படை தலைமைத் தளபதி அமா் ப்ரீத் சிங்.
- மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தலைவா் ராகுல் நா்வேகா் மீண்டும் பேரவைத் தலைவராகிறார்.
- மேற்கு ஆப்பிரிக்க நாடான புர்கினோ ஃபசோவின் அரசாங்கம் கலைக்கபட்டதைத் தொடர்ந்து,ராணுவ அரசாங்கத்தினால் அந்நாட்டின் புதிய பிரதமராக ரிம்டல்பா ஜீன் இம்மானுவேல் அவ்டிராகோ நியமிக்கப்பட்டார்.
- உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் 11வது சுற்றில், நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரென் உடனான போட்டியில் தமிழக வீரர் டி. குகேஷ் வெற்றி பெற்றார்.
- சிங்கப்பூரில் உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது.
- 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவை வீழ்த்தி வங்கதேசம் சாம்பியன் பட்டம் வென்றது.