விமான பாதுகாப்புக்கு புதிய தரக் கட்டுப்பாட்டுப் பிரிவு: சிஐஎஸ்எஃப்
- நாட்டில் உள்ள விமான நிலையங்களுக்கு பாதுகாப்பை வழங்கும் மத்திய தொழிலக பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எஃப்), அதன் விமான பாதுகாப்புப் பிரிவின் செயல்திறனை மேம்படுத்த புதிய உள் தரக் கட்டுப்பாட்டுப் பிரிவை அமைத்துள்ளது.
- சிஐஎஸ்எஃப் விமான பாதுகாப்புப் பிரிவின் செயல்திறனை மேம்படுத்த புதிய உள் தரக் கட்டுப்பாட்டுப் பிரிவு அமைக்கப்பட்டது.
- தில்லியில் உள்ள சிஐஎஸ்எஃப் விமான பாதுகாப்புக் கட்டுப்பாட்டு மையத்தின் ஒரு பகுதியாக இந்தப் புதிய பிரிவு செயல்படும்.
- இந்த முயற்சியானது, விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சிவில் விமான பாதுகாப்பு பணியகத்தால் (பிசிஏஎஸ்) வெளியிடப்பட்ட 2024-ஆம் ஆண்டு தேசிய சிவில் விமான பாதுகாப்புத் தரக் கட்டுப்பாட்டுத் திட்டம் மற்றும் 2023-ஆம் ஆண்டு விமான (பாதுகாப்பு) விதிகளுடன் இணங்குகிறது.
- பிராந்திய இணைப்புத் திட்டமான உடான் திட்டத்தின் கீழ் செயல்படும் விமான நிலையங்கள் உள்பட நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களுக்கும் பாதுகாப்பை ஒருங்கிணைக்க இது உதவும்.
பிஎம்-கிஸான் உதவித் தொகை:
- பிரதமரின் விவசாயிகளுக்கான உதவித் தொகை (பிஎம்-கிஸான்) திட்டத்தின்கீழ் வழங்கப்படும் உதவித்தொகையை ரூ.6,000-இல் இருந்து ரூ.12,000-ஆக உயா்த்தி வழங்குவது, விவசாயக் கடன் மீதான வட்டியை குறைப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள் வைத்தனர்.
- பிரதமரின் விவசாய பயிர்கள் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் சிறு விவசாயிகளின் பயிர்களுக்கு பூஜ்ஜிய தவணைத்தொகை முறையை கொண்டுவர வேண்டும்.
- மாநிலப் பட்டியலில் இருந்து வேளாண்மையை பொதுப் பட்டியலுக்கு மாற்றுவது மற்றும் மத்திய இந்திய வேளாண் சேவை மையத்தை நிறுவுவது உள்ளிட்ட கோரிக்கைகளை விவசாயிகள் வைத்தனர்.
- பிஎம் கிசான் என்பது இந்திய அரசின் 100% நிதியுதவியுடன் கூடிய மத்தியத் துறை திட்டமாகும்.
- இதில் அனைத்து சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கும் குறைந்தபட்ச வருமான ஆதரவாக ஆண்டுக்கு, ₹6,000 நிதி உதவி அளிக்கப்படும்.
- இந்த திட்டத்தை 2019 பிப்ரவரி முதல் இந்தியாவின் இடைக்கால நிதியறிக்கையின் போது பியுஷ் கோயல் அறிவித்தார்.
- இத்திட்டம் டிசம்பர் 2018 முதல் நடைமுறைக்கு வந்தது.
- தகுதிவாய்ந்த ஒவ்வொரு விவசாயிக்கும் ஆண்டுக்கு, ₹ 6,000 மூன்று தவணைகளில் நேரடியாக அவர்களின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்படும்.
டிசம்பர் 21-இல் சா்வதேச தியான தினம்: இந்தியாவின் முன்மொழிவு ஐ.நா ஏற்பு
- டிசம்பா் 21 – ஆம் தேதியை சா்வதேச தியான தினமாக அறிவிக்க முன்மொழிந்த இந்திய ஆதரவுத் தீா்மானத்துக்கு ஐ.நா பொதுச் சபையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
- ஐரோப்பிய நாடான லிச்சென்ஸ்டீனால் அறிமுகப்படுத்தப்பட்ட இத்தீா்மானத்துக்கு இந்தியா, இலங்கை, வங்கதேசம், நேபாளம், மெக்சிகோ, பல்கேரியா, புருண்டி, டொமினிக்கன் குடியரசு, ஐஸ்லாந்து, லக்சம்பா்க், மோரீஷஸ், மொனாக்கோ, மங்கோலியா, மொராக்கோ, ஸ்லோவேனியா ஆகிய நாடுகள் ஆதரவு தெரிவித்தன.
- டிசம்பா் 21 – ஆம் தேதி குளிர்காலத்தில் சூரியன் தனது திசையை மாற்றும் நிகழ்வைக் குறிக்கும் நாளாகும்.
- இது இந்திய பாரம்பரியத்தில் ‘உத்தராயண’ஆண்டின் தொடக்கமாகும்.
டிசம்பர் 8: போதி தினம்
- ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 8 அன்று போதி தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
- கௌதம புத்தரையும் அவரது பிரசங்கங்களையும் கௌரவிக்கும் வகையில் இத்தினம் கொண்டாடப்படுகிறது.
தகவல் துளிகள்:
- ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர தூதா் பா்வதனேனி ஹரீஷ்.
- அகில இந்திய அளவில் புத்தொழில் நிறுவனங்கள் நடத்துவதில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது.
- சிரியா தலைநகர் டமாஸ்கஸின் புறநகர்ப் பகுதிகளை கிளா்ச்சிப் படையினர் கைப்பற்றிய நிலையில், அந்நாட்டு அதிபர் பஷார் அல் ஆசாத் அங்கிருந்து தப்பிச் சென்றார்.
- மேற்கு ஆப்பிரிக்க நாடான புா்கினா ஃபாசோவில் பிரதமா் அபோலினோ் ஜோசிம் கலீம் டம்பேலா தலைமையிலான அரசை அந்த நாட்டு ராணுவம் கலைத்துள்ளது.
- ஜோ ரூட் – இங்கிலாந்து அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் 100 முறை அரைசதம் கடந்த முதல் வீரர் என்ற சாதனை படைத்துள்ளார்.