Site icon Gurukulam IAS

10th December Daily Current Affairs – Tamil

இந்திய கடற்படையில் ‘ஐஎன்எஸ் துஷில்’:
• ரஷியாவில் தயாரிக்கப்பட்ட ஏவுகணைகளுடன் கூடிய போர்க்கப்பலான ‘ஐஎன்எஸ் துஷில்’இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டது.
• ரஷியாவில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், இந்திய கடற்படை தலைமை தளபதி அட்மிரல் தினேஷ் கே திரிபாதி ஆகியோர் கலந்துகொண்டனா்.
• 4 போர்க்கப்பல்களை தயாரிப்பதற்கான ஒப்பந்தத்தில் ரஷியாவும் இந்தியாவும் கடந்த 2016 – ஆம் ஆண்டில் கையொப்பமிட்டன.
• அதன்படி 2 போர்க்கப்பல்களை இந்தியாவிலும் 2 போர்க்கப்பல்களை ரஷியாவில் தயாரிக்க முடிவு செய்யப்பட்டது.
• 20,000 கோடியில் கையொப்பமிடப்பட்ட இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் தற்போது ஏவுகணைகளுடன் கூடிய ஐஎன்எஸ் துஷில் போர்க்கப்பல் ரஷியாவில் தயாரிக்கப்பட்டது.
• இந்தப் போர்க்கப்பல், அந்நாட்டில் உள்ள காலினின்கிராட் கடற்கரை நகரில் இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டது.
• ஐஎன்எஸ் துஷில் போர்க்கப்பல் 125 மீட்டா் நீளமுடையது. 3,900 டன் எடையுடையது.
• இந்திய பெருங்கடலில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வரும் சூழலில் இந்திய கடற்படையின் திறனை மேம்படுத்தும் விதமாக இந்தப் போர்க்கப்பல் நவீன தொழில்நுட்பங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது.
ரிசா்வ் வங்கி புதிய ஆளுநா் சஞ்சய் மல்ஹோத்ரா:
• இந்திய ரிசா்வ் வங்கியின் 26 – ஆவது ஆளுநராக சஞ்சய் மல்ஹோத்ரா நியமிக்கப்பட்டார்.
• நியமனங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு இந்த முடிவை எடுத்தது.
• அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு இப்பதவியில் இருப்பார்.
• தற்போதைய ஆா்பிஐ ஆளுநா் சக்திகாந்த தாஸின் பதவிக் காலம் நிறைவடைந்தது.
• இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநரை நடுவண் அரசு நியமிக்கின்றது.
• குறிப்பாக இந்திய நிதியமைச்சரின் பரிந்துரைப்படி பிரதமரால் இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் நியமிக்கப்படுகின்றார்.
இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India):
• இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India) ஏப்ரல் 1,1935 – இல் தொடங்கப்பட்ட இந்தியாவின் நடுவண் வங்கியாகும்.
• இந்திய ரிசர்வ் வங்கி 1949 – இல் நாட்டுடைமை ஆக்கப்பட்டது.
• இந்திய ரிசர்வ் வங்கி அரசின் கருவூலம் ஆகும்.
• நாட்டின் செலாவணிக்குரிய நாணயத்தை வெளியிடுவதோடு, இவ்வங்கி நாட்டின் பல பொருளாதார நடவடிக்கைகளை இயக்கியும் வருகிறது.
• பொது மக்கள் மற்ற வங்கிகளைப் பயன்படுத்துவதுபோல ரிசர்வ் வங்கியைப் பயன்படுத்த முடியாது.
• இந்திய ரிசர்வ் வங்கி தனது முகமை ஏற்றுச் செயலாற்ற பல வங்கிகளை இது அமைத்துள்ளது.
• அவ்வகையில் பாரத ஸ்டேட் வங்கி இதன் முகமை வங்கி ஆகும்.
• ரிசர்வ் வங்கியைப் பொது மக்கள் நேரடியாகப் பயன்படுத்தாவிட்டாலும் பொது மக்கள் நடத்தும் மற்ற வங்கிகளோடு தொடர்பு கொண்டு அவற்றைக் கண்காணித்தும் வருகிறது.
• இந்திய நாட்டின் நாணய மதிப்பு /அந்நியச் செலாவணிக்கெதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ரிசர்வ் வங்கி கையிருப்பில் வைத்திருக்கும் தங்கம், ரொக்கம் ஆகியவற்றைக் கொண்டே மதிப்பிடப்படுகிறது.
• முதலில் கொல்கத்தா நகரை தலைமையகமாக கொண்டு விளங்கிய இவ்வங்கி 1937 – ஆம் ஆண்டு முதல் மும்பை நகரை தலைமையகமாக கொண்டுள்ளது.
• ரிசர்வ் வங்கிக்கு இந்தியா முழுவதும் 22 வட்டாரக் கிளைகள் உள்ளன.
• தனியாரால் துவங்கப்பட்ட இவ்வங்கியானது 1949 – ஆம் ஆண்டு தேசியமயமாக்கப்பட்டது.
• இந்திய ரிசர்வ் வங்கி, அரசாங்கத்தின் வளர்ச்சியில் ஒரு முதன்மைப் பங்கினை வகிக்கிறது.
• இது ஆசிய தீர்வு ஒன்றியத்தின் உறுப்பினர் வங்கியாக உள்ளது.
• இந்திய ரிசர்வ் வங்கி, முதல் உலக போருக்குப் பின்னர் பொருளாதாரப் பிரச்சனைகளுக்குப் பதிலளிக்க 1935 – இல் ஹில்டன்-யங் ஆணையத்தின் பரிந்துரைகளின்படி நிறுவப்பட்டது.
ஆயுஷ்மான் வய வந்தனா திட்டம்:
• மூத்த குடிமக்களுக்கான ஆயுஷ்மான் வய வந்தனா திட்டத்தில் 22,000 மூத்தவா்கள் சிகிச்சை பெற்று பயனடைந்துள்ளனராக மத்திய சுகாதாரம் குடும்ப நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
• கடந்த அக்டோபர் 29 – ஆம் தேதி, பிரதமா் நரேந்திர மோடி ஆயுஷ்மான் பாரத் – பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டத்தின் ஒரு பிரிவாக ஆயுஷ்மான வய வந்தனா திட்டத்தை தொடங்கி வைத்தார்.
• ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 70 வயதைக் கடந்த மூத்தவா்களுக்கு ஆண்டுக்கு ரூ 5 லட்சம் சிகிச்சைக்கு அனுமதிக்கிறது.
• ஏற்கனவே ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் இணைந்த குடும்பத்தினா், ரூ 5 லட்சத்தை சிகிச்சைகளுக்கு பகிர்ந்து கொள்ளும் வகையில் இருந்தது.
• தற்போது ஒரு குடும்பத்தில் 70 வயது நிறைவடைந்த அனைத்து மூத்த குடிமக்களும் ஒவ்வொருவரும் தலா ரூ 5 லட்சம் கூடுதலாக இந்த காப்பீட்டு திட்டத்தில் பயனடையும் வகையில் இதனை விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
• இதன்படி, அனைத்து மூத்த குடிமக்களுக்கும் இத்திட்டத்தின் கீழ் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
டிசம்பர் 10: மனித உரிமைகள் தினம்
• மனித உரிமைகள் தினம் டிசம்பர் 10 அன்று கொண்டாடப்படுகிறது.
• மனித உரிமைகளுக்கான உலகளாவிய பிரகடனம் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையால் 1948 இல் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
• அனைத்து மக்களின் அடிப்படை மனித உரிமைகள் மற்றும் அவர்களின் அடிப்படை மனித சுதந்திரத்தை பாதுகாக்க இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.
தகவல் துளிகள்:
1. இந்திய கடற்படை தலைமை தளபதி அட்மிரல் தினேஷ் கே திரிபாதி.
2. இந்திய ரிசா்வ் வங்கியின் 26 – ஆவது ஆளுநராக சஞ்சய் மல்ஹோத்ரா நியமிக்கப்பட்டார்.
3. மகாராஷ்டிரத்தின் 15 – வது சட்டப் பேரவையின் தலைவராகராகுல் நர்வேகர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
4. தமிழ் தாத்தா என்று அழைப்படும் உ.வே. சாமிநாதர் பிறந்த நாள் பிப்ரவரி 19 – ஆம் தேதி கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அவரது பிறந்த நாளை தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி நாளாக கடைபிடிக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
5. எஃப்1 கார் பந்தயத்தின் 24 – ஆவது ரேஸான அபுதாபி கிராண்ட் ப்ரீயில் பிரிட்டன் வீரரும், மெக்லாரென் டிரைவருமான லாண்டோ நோரிஸ் வெற்றி பெற்றார்.

Exit mobile version