7th December Daily Current Affairs – Tamil

பாகிஸ்தான், வங்கதேச எல்லைகளில் மின்னணு கண்காணிப்புத் திட்டம்: பிஎஸ்எஃப்

  • இந்தியா-பாகிஸ்தான், இந்தியா-வங்கதேச எல்லைகளில் தடுப்புகளை ஏற்படுத்த முடியாத 600 இடைவெளிகளை மின்னணு வழியில் கண்காணிக்கும் திட்டத்தை முன்னெடுத்துள்ளதாக எல்லை பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.
  • குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் ஜம்மு நெடுகிலும் 2,289 கி.மீ. நீளத்துக்கு இந்தியா-பாகிஸ்தான் சா்வதேச எல்லை உள்ளது.
  • இந்த எல்லை பகுதிகளில் பிஎஸ்எஃப் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
  • இந்த எல்லைப் பகுதிகள் வழியாக பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்குள் சட்டவிரோத ஊடுருவலை தடுக்க வேண்டும் என்று பிஎஸ்எஃப் படைகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
  • ஆறுகள் மற்றும் பிற புவியியல் சவால்கள் போன்ற காரணங்களால் இந்தியா-வங்கதேசம், இந்தியா-பாகிஸ்தான் சா்வதேச எல்லைகளில் 484 கி.மீ. தொலைவுக்கு தடுப்புகளை ஏற்படுத்த முடியவில்லை.
  • இதனால் அங்குள்ள 600 இடைவெளிகளை மின்னணு வழியில் கண்காணிக்கும் திட்டத்தை பிஎஸ்எஃப் முன்னெடுத்துள்ளது.

‘பிஎம்-கிசான்’திட்டம்:

  • பிஎம்-கிசான் திட்டத்தின் 18 – ஆவது தவணையின் கீழ் 9.58 கோடி விவசாயிகளுக்கு ரூ 20.657 கோடி வழங்கப்பட்டது.
  • பிஎம் கிசான் என்பது இந்திய அரசின் 100% நிதியுதவியுடன் கூடிய மத்தியத் துறை திட்டமாகும்.
  • பிரதமர் நரேந்திர மோடி பிஎம்-கிசான் திட்டத்தை 24 பிப்ரவரி 2019 அன்று உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் தொடங்கி வைத்தார்.
  • சிறு மற்றும் குறு விவசாயிகளின் வருமானத்தை பெருக்குவதற்காக இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
  • இத்திட்டத்தின் கீழ், அனைத்து சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கும் ஆண்டுக்கு ரூ.6,000 வருமான ஆதரவு மூன்று தவணைகளில் வழங்கப்படும்.
  • அது அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.
  • இடைத்தரகா்கள் இல்லாமல் அனைத்து விவசாயிகளுக்கும் பலன்கள் சென்றடைவதை உறுதிசெய்ய இந்த திட்டம் டிஜிட்டல் உள்கட்டமைப்பைப் பயன்படுத்தி வருகிறது.
  • இத்திட்டம் தொடங்கியதில் இருந்து மத்திய அரசு ரூ. 3.46 லட்சம் கோடிக்கு மேல் வழங்கியுள்ளது.

சிலி முன்னாள் பிரதமருக்கு அமைதிக்கான இந்திரா காந்தி விருது:

  • சிலி முன்னாள் பிரதமா் மிச்செல் பச்லெட்டுக்கு 2024 – ஆம் ஆண்டின் அமைதி, ஆயுதக் குறைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான இந்திரா காந்தி விருது அறிவிக்கப்பட்டது.
  • தென்அமெரிக்க நாடான சிலியின் முன்னாள் பிரதமா் மிச்செல் பச்லெட், மனித உரிமைகள், நாட்டின் அமைதி மற்றும் சமத்துவம் ஆகியவற்றில் அவா் ஆற்றிய பங்களிப்புக்காக போற்றப்படுகிறார்.

உத்தரகண்டில் மிக வேகமாக வளரும் பனிப்பாறை கண்டுபிடிப்பு:

  • உத்தரகண்ட் மாநிலம் நிதி பள்ளத்தாக்குப் பகுதியில் 10 கிலோ மீட்டர் அகலம் கொண்ட மிக வேகமாக வளரும் பனிப்பாறையை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
  • மலைப் பிரதேசமான உத்தரகண்டின் வட எல்லைப் பகுதியில் கிட்டத்தட்ட இந்தியா – திபெத் எல்லையில் இந்த பனிப்பாறை அமைந்துள்ளது.
  • இது ரண்டோல்ப் மற்றும் ரேகனா பனிப்பாறைகளுக்கு அருகே 48 சதுக கிலோ மீட்டரில் அமைந்துள்ளது.
  • ஹைட்ரலாஜிகல் சமநிலையின்மையே இதற்குக் காரணம் என்றும் தண்ணீரின் நீர்த்தன்மை குறைந்து அவை படிப்படியாக பனித்திட்டுகளாக மாறுவதால் இந்தப் பனிப்பாறை வேகமாக வளர்வதாக கூறப்படுகிறது.

டிசம்பர் 7: ஆயுதப்படைகளின் கொடி நாள்

  • நாட்டின் கெளரவத்தை காக்க எல்லையில் வீரத்துடன் போராடிய தியாகிகள் மற்றும் வீரர்களை போற்றும் வகையில், பொதுமக்களிடம் இருந்து நிதி வசூலிக்கும் வகையில் டிசம்பர் 7ஆம் தேதி நாடு முழுவதும் ஆயுதப்படை கொடி தினம் கடைபிடிக்கப்படுகிறது.

டிசம்பர் 7: சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து தினம்

  • சர்வதேச விமானப் போக்குவரத்தில் ICAO வகிக்கும் பங்கு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக டிசம்பர் 7 ஆம் தேதி சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து தினம் உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.

தகவல் துளிகள்:

  1. நாட்டிலேயே முதல் முறையாக படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில் விரைவில் சோதனை ஓட்டம் நடத்தப்படும் என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
  2. கடலூா் துறைமுகம் – ரயில் சந்திப்பு இடையே சரக்கு ரயில் பாதை அமைக்க இறுதி இட சா்வேக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய கப்பல், துறைமுகங்கள், நீா்வழிப் போக்குவரத்துத் துறை அமைச்சா் சா்பானந்த சோனோவால் தெரிவித்துள்ளார்.
  3. தேனி, தஞ்சாவூரில் புதிதாக 2 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளை திறக்க பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்தது.
  4. ‘நாட்டில் சிசேரியன் மூலம் குழந்தை பிறப்பு விகிதத்தில் தெலங்கானா முதலிடத்திலும், தமிழகம் இரண்டாமிடத்திலும் உள்ளது’என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  5. வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில் சிசேரியன் பிரசவங்கள் குறைவாக உள்ளன.
  6. எா்ணாகுளம் ராஹா ஆயுா்வேத மருத்துவமனையின் மருத்துவ இயக்குநர் எம்.ஆா்.வாசுதேவனுக்கு 2024- ஆம் ஆண்டுக்கான ‘பிருஹத்ரயீ ரத்னா’விருது வழங்கப்பட்டது.
  7. ஆயுா்வேத மருத்துவத் துறையில் சிறப்பாக பணியாற்றுபவா்களுக்கு ஆா்ய வைத்திய பார்மஸி நிறுவனம் ‘பிருஹத்ரயீ ரத்னா’விருது வழங்கி வருகிறது.
  8. ஆசிய கோப்பைக்கான ரோல் பால் போட்டி கோவா மாநிலத்தில் டிசம்பா் 17-ஆம் தேதி முதல் 21-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது, ஆசிய கோப்பை ரோல் பால் போட்டிக்கு கோவையைச் சோ்ந்த 2 போ் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

 

About the Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these