6th December Daily Current Affairs – Tamil

 ‘இந்தியாவிலே தயாரிப்போம்’ திட்டம்:

  • உற்பத்தியை ஊக்குவித்து, அந்நிய முதலீட்டை ஈா்க்கும் நோக்கங்களைக் கொண்ட ‘இந்தியாவிலே தயாரிப்போம்’ முன்முயற்சி, உலகப் பொருளாதாரத்தில் இந்தியாவின் நிலையை வலுப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிப்பதாகக் குறிப்பிட்டு ரஷிய அதிபா் விலாமிதின் புதின் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
  • ‘இந்தியாவில் தயாரிப்போம்’ முன்முயற்சி, உலகப் பொருளாதாரத்தில் இந்தியாவின் நிலையை வலுப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு உரிய ‘நிலையான சூழல்களை’ இந்தியா உருவாக்கியுள்ளது.
  • மேக் இன் இந்தியா திட்டம் செப்டம்பர் 25, 2014 – அன்று தொடங்கப்பட்டது.
  • இதை இந்திய பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
  • இது இந்தியாவில் 12 – வது ஐந்தாண்டுத் திட்டத்தின் போது தொடங்கப்பட்டது.
  • இந்த திட்டம் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிப்பது, புதுமைகளை ஊக்குவிப்பது, திறன் மேம்பாட்டை மேம்படுத்துவது மற்றும் வெளிநாட்டு முதலீட்டை ஊக்குவிப்பது ஆகியவற்றில் முக்கிய பங்கு வகிக்கிறது.

விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-59:

  • சூரியனின் புறவெளியை ஆய்வு செய்ய ப்ரோபா-3 எனும் இரட்டை செயற்கைக்கோள்களுடன், இந்தியாவின் பிஎஸ்எல்வி சி-59 ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் ஏவுதளத்திலிருந்து விண்ணில் பாய்ந்தது.
  • இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் ஓா் அங்கமான ‘நியூஸ்பேஸ் இந்தியா லிமிடெட்’ அமைப்பு மூலம் வெளிநாட்டு செயற்கைக்கோள்கள் வா்த்தக ரீதியாக விண்ணில் செலுத்தப்பட்டு வருகின்றன.
  • அந்த வகையில், சூரியனின் புறவெளியை ஆய்வு செய்ய ப்ரோபா-3 எனும் இரட்டை செயற்கைக்கோளை ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிறுவனம் வடிவமைத்து இந்தியாவின் பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் விண்ணில் நிலைநிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
  • ‘ப்ரோபா-3’ எனப்படும் இஎஸ்ஏ நிறுவனத்தின் இரு செயற்கைக்கோள்களை பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட் மூலம் புவியிலிருந்து 60,500 கி.மீ. தொலைவில் உள்ள சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தி சூரியனின் புற வெளிக் கதிர்கள் ஆய்வு செய்யப்படவுள்ளன.

விமானப் போக்குவரத்து மசோதா:

  • 90 ஆண்டுகால பழைமையான விமானசட்டத்துக்கு பதிலாக கொண்டுவரப்பட்ட புதிய விமானப் போக்குவரத்து மசோதா (பாரதிய வாயுயான் விதேயக்) நாடாளுமன்றத்தில் நிறைவேறியது.
  • குடியரசுத் தலைவா் ஒப்புதலுக்குப் பின் இந்த மசோதா சட்டமாக அமலாகவுள்ளது.
  • விமான சட்டம்-1934 – இல் இதுவரை 21 முறை திருத்தப்பட்டுள்ளது.
  • அதில் உள்ள குறைபாடுகளை களைந்தும், விமானப் போக்குவரத்து துறையில் முதலீடுகளை ஈா்க்கவும், எளிதான வணிகத்தை ஊக்குவிக்கவும் இந்த புதிய மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
  • அனைவருக்கும் விமான சேவைகள் கிடைக்கும் வகையில் ‘உடான்’ திட்டம் தொடங்கப்பட்டது.
  • அதிக பயணிகளுக்கு விமான சேவைகள் வழங்கும் வகையில் உள்ளூா் விமான நிலையங்களை ஏற்படுத்த வேண்டியது அவசியமாகியுள்ளது.
  • கடந்த 8 ஆண்டுகளில் உடான் திட்டம் 609 வழித்தடங்களில் செயல்படுத்தப்பட்டுள்ளது.

பொது விநியோக அன்ன சக்ரா திட்டம்: தமிழகத்திற்கு விருது

  • உணவுப் பொதுவிநியோக சங்கிலித் தொடா் மேம்படுத்தலில் அன்ன சக்ரா திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய 12 மாநிலங்களில் ரூ.130 கோடி சேமிக்கப்பட்டுள்ளது.
  • இதில் தமிழகத்தில் ரூ. 29 லட்சம் சேமிக்கப்பட்டு தமிழகம் உள்ளிட்ட 12 மாநிலங்களுக்கு மத்திய மத்திய நுகா்வோர் விவகாரங்கள், உணவு பொதுவிநியோகத்துறை அமைச்சா் பிரஹலாத் ஜோஷி விருது அளித்தார்.
  • நியாய விலைக்கடைகளுக்கான பொது விநியோக சங்கலி செயல்திறனை மேம்படுத்தலுக்காக ’அன்ன சக்ரா” முறையை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.
  • பிரதமரின் உத்வேகம் தேசிய பெருந்திட்டத்தின் பொது விநியோகத் திட்டத்தில் வழங்கப்படும் உணவுப் பொருள்கள் கொண்டு செல்லப்படுவதில் உள்ள போக்குவரத்து செலவுகளை குறைப்பு தான் ’அன்ன சக்ரா’திட்டம்.
  • ஐநா வின் உலக உணவுத் திட்டம், புத்தாக்கம், தொழில்நுட்ப பரிமாற்ற நிறுவனம்(எஃப்ஐடிடி), தில்லி ஐஐடி ஆகியவை இணைந்து உருவாக்கியது அன்ன சக்ரா திட்டம்.

டிசம்பர் 6: பி.ஆர்.அம்பேத்கரின் நினைவுநாள்(மஹாபரிநிர்வான் திவாஸ்)

  • டிசம்பர் 6, 1956 இல் பி.ஆர்.அம்பேத்கர் இறந்தார்.
  • சமுதாயத்திற்கு அவர் ஆற்றிய மறக்க முடியாத பங்களிப்பையும், அவரது சாதனைகளையும் நினைவுகூரும் வகையில் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.

தகவல் துளிகள்:

  1. 15 – ஆவது விடிபி ரஷிய முதலீட்டு அழைப்பு மாஸ்கோவில் நடைபெற்றது.
  2. ஜூலை 3, 2015 அன்று, டிஜிட்டல் இந்தியா திட்டம் நாட்டின் ஒவ்வொரு குடிமகனையும் டிஜிட்டல் முறையில் மேம்படுத்தும் நோக்கத்துடன் தொடங்கப்பட்டது.
  3. 2024 – ஆம் ஆண்டின் தேசிய பஞ்சாயத்து விருதை மகாராஷ்டிர மாநிலம், லட்டூா் மாவட்டத்தில் உள்ள உடி புத்ரூக் கிராமம் வென்றுள்ளது.
  4. மகாராஷ்டிர மாநிலத்துக்கு 188.28 மில்லியன் டாலா் கடன் வழங்க உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது, மாநிலத்தின் பொருளாதார வளா்ச்சியை மேம்படுத்துவதற்காக இந்த கடன் வழங்கப்படவுள்ளது.
  5. தபால் நிலையங்கள் மூலம் செயல்படும் பாஸ்போர்ட் சேவா கேந்திரங்களின் எண்ணிக்கையை, அடுத்த ஐந்து ஆண்டுகளில், தற்போதுள்ள 442-ல் இருந்து 600 ஆக உயர்த்த, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
  6. சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் கடந்த 23 ஆண்டுகளாக 1998 முதல் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 3 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.
  7. வங்கதேசத்தின் தந்தை என்றழைக்கப்படும் அந்நாட்டின் முதல் அதிபரும் முன்னாள் பிரதமருமான ஷேக் முஜிபுர் ரஹ்மானின் படத்தை பணத் தாள்களில் இருந்து நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
  8. மாற்றுத்திறனாளிகளின் இருப்பிடங்களுக்கே சென்று வாகனம் மூலமாக சேவை அளிக்கும் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
  9. மகளிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், இந்தியாவை வென்றது ஆஸ்திரேலியா.

 

About the Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these